மறைக்கப்படாத புதிய Honda Amaze முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
published on நவ 26, 2024 01:57 pm by shreyash for ஹோண்டா அமெஸ் 2025
- 1 View
- ஒரு கருத்தை எழுதுக
அமேஸ் இப்போது அதன் மூன்றாம் தலைமுறை அப்டேட்டில் களமிறங்க தயாராக உள்ளது. இது ஹோண்டா சிட்டி -யின் ஒரு குழந்தை போல் தோற்றமளிக்கிறது. ஆல்-எல்இடி ஹெட்லைட்கள், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்ஸ் ஆகியவை உள்ளன.
-
புதிய ஹோண்டா அமேஸிற்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் சில டீலர்ஷிப்களில் தொடங்கியுள்ளன.
-
இந்தியாவில் டிசம்பர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.
-
பெரிய டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள் பேன் சன்ரூஃப் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
பழைய மாடலில் அதே 90 PS 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்த வாய்ப்புள்ளது.
-
விலை ரூ.7.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய வசதிகளுடன் டிசம்பரில் விற்பனைக்கு வர உள்ளது. ஹோண்டா ஏற்கனவே 2024 அமேஸின் சில டீஸர்களை டிசைன் ஸ்கெட்ச் வடிவில் வெளியிட்டுள்ளது. அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தைப் பற்றிய ஒரு சில விவரங்களை நமக்கு கொடுக்கிறது. இப்போது மறைக்கப்படாமல் சோதனை செய்யப்பட்ட புதிய அமேஸ் முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்பை ஷாட்டில் என்ன தெரிகிறது?
சமீபத்திய ஸ்பை படங்கள் மூலம் புதிய ஹோண்டா அமேஸ் இப்போது ஹோண்டா சிட்டியின் வடிவமைப்பை பிரதிபலிக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் மிகவும் கச்சிதமான வடிவத்தில் உள்ளது. இது புதிய எல்இடி டிஆர்எல் -களுடன் நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பெரிய செவ்வக கிரில் உடன் வரலாம். எல்இடி ஃபாக் லைட்ஸ்களின் இடம் என்பது பழைய மாடலில் காணப்படுவது போலவே உள்ளது.
அமேஸ் சப்-4 மீ செடான் என்பதால் இது மிகவும் நிமிர்ந்த டெயில்கேட்டைக் கொண்டுள்ளது. ஸ்பை ஷாட் படங்கள் அதன் புதிய மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் இருப்பதையும் காட்டுகின்றன. அவை சிட்டி காரில் உள்ளதை போலவே ஒத்திருக்கிறது. உண்மையில் ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்டுகள் சிட்டி காரில் உள்ளதை போலவே தெரிகிறது.
மேலும் பார்க்க: 2024 மாருதி டிசையர்: அதன் பின் இருக்கை வசதியை பற்றிய எங்கள் பதிவுகள்
கேபின் மற்றும் வசதிகள்
புதிய தலைமுறை ஹோண்டா அமேஸின் கேபின் இன்னும் படம் பிடிக்கப்படவில்லை என்றாலும் கூட எலிவேட் மற்றும் சிட்டியில் காணப்படுவது போன்ற டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டிருக்கும் என்று முன்னர் வெளிப்படுத்தப்பட்ட டிஸைன் ஸ்கெட் -ச்கள் காட்டுகின்றன.
இது ஒரு பெரிய டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் ஆட்டோ ஏசிக்கு கூடுதலாக பின்புற ஏசி வென்ட்களுடன் வரும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டண்டர்டாக) மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவை கொடுக்கப்படலாம். ரியர் வியூ கேமரா மற்றும் EBD உடன் ABS போன்ற வசதிகள் இப்போதுள்ள பதிப்பில் இருந்து அப்படியே கொண்டு செல்லப்படும். டிசைன் ஸ்கெட்ச் டீசரில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் டிஸ்ப்ளேவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அமேஸ் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) பெறலாம்.
அதே இன்ஜின் பயன்படுத்தப்படலாம்
அமேஸின் வெளிச்செல்லும் பதிப்பில் வழங்கப்படும் அதே 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை ஹோண்டா அப்படியே கொடுக்கும். விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் 4 சிலிண்டர் பெட்ரோல் |
பவர் |
90 PS |
டார்க் |
110 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, CVT* |
*CVT- கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 ஹோண்டா அமேஸ் காரின் விலை ரூ.7.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டிகோர், ஹூண்டாய் ஆரா, மற்றும் புதிதாக அறிமுகமான மாருதி டிசையர் உடன் அதன் போட்டியை தொடரும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: அமேஸ் ஆட்டோமேட்டிக்
0 out of 0 found this helpful