• English
  • Login / Register

புதிய Honda Amaze -க்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன

published on நவ 26, 2024 01:30 pm by dipan for ஹோண்டா அமெஸ்

  • 47 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2024 ஹோண்டா அமேஸ் அடுத்த மாதம் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. விலை ரூ. 7.5 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

 

  • இந்தியாவில் மூன்றாம் தலைமுறை அமேஸ் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

  • ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே காரின் சில டிஸைன் ஸ்கெட்ச் -களை வெளியிட்டுள்ளது. 

  • நேர்த்தியான ட்வின்-பாட் ஹெட்லைட்கள் மற்றும் ரேப்பரவுண்ட் டெயில் லைட்களுடன் ஹோண்டா சிட்டி போன்ற வடிவமைப்பைக் காட்டுகிறது.

  • டாஷ்போர்டு செட்டப், புளூ லைட்டிங் மற்றும் ஃபிரீ ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் ஆகியவை உள்ளன.

  • பெரிய டச் ஸ்கிரீன், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் சில ADAS போன்ற வசதிகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதே கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் கொடுக்கப்படலாம்.

மாருதி டிசையர் காரின் நான்காம் தலைமுறை அவதாரத்தில் அறிமுகத்துக்கு பிறகு அதன் போட்டியாளரான ஹோண்டா அமேஸ் காரானது ஒரு தலைமுறை அப்டேட் -க்கு தயாராகி வருகிறது. இது இந்தியாவில் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சப்காம்பாக்ட் செடான் பற்றிய விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியா முழுவதும் உள்ள சில டீலர்ஷிப்கள் ஆஃப்லைன் முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளன. வரவிருக்கும் அமேஸ் பற்றி நமக்குத் தெரிந்த அனைத்தையும் இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்:

2024 ஹோண்டா அமேஸ்: ஒரு பார்வை

2024 Honda Amaze exterior design sketch
2024 Honda Amaze exterior design sketch

2024 ஹோண்டா அமேஸின் டீஸர் ஸ்கெட்ச் -கள் ஹோண்டா சிட்டி மற்றும் இன்டர்நேஷனல்-ஸ்பெக் அக்கார்டு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட புதிய வடிவமைப்பை காட்டுகின்றன. இது டூயல்-பாட் LED ஹெட்லேம்ப்களை இணைக்கும் வகையில் ஒரு குரோம் ஸ்ட்ரிப், ஒரு செவ்வக வடிவ கிரில், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் நேர்த்தியான LED டெயில் லைட்ஸ் ஆகியவை கொடுக்கப்படலாம்.

2024 Honda Amaze interior design sketch

உள்ளே, கேபின் சிட்டி மற்றும் எலிவேட்டை போலவே இருக்கும். பிளாக் மற்றும் பெய்ஜ் நிற தீம், 3-ஸ்போக் ஸ்டீயரிங், ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் மற்றும் அக்கார்டு போன்ற வடிவிலான டேஷ்போர்டு டிரிம் ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: 10 வசதிகள் புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் ஹோண்டா எலிவேட்டிலிருந்து பெற வாய்ப்புள்ளது

2024 Honda Amaze can get ADAS features

வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆட்டோ ஏசி, சிங்கிள்-பேன் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள் மற்றும் ரியர்வியூ கேமரா ஆகியவை காரில் உள்ளன. சப்-4m செடான் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களை (ADAS) பெறலாம் என்பதையும் உட்புற டிஸைன் ஸ்கெட்ச்களை வெளியிட்டுள்ளது. இது இந்த பிரிவில் முதல் முறையாக வழங்கப்படும். 

Honda Amaze engine

அமேஸ் அதன் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை (90 PS/110 Nm) 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆப்ஷன்களுடன் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஹோண்டா அமேஸ்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

2024 ஹோண்டா அமேஸ் காரின் விலை ரூ.7.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து சப்-4மீ செடான் பிரிவில் டாடா டிகோர், ஹூண்டாய் ஆரா, மற்றும் மாருதி டிசையர் உடன் தொடர்ந்து போட்டியிடும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Honda அமெஸ்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience