• English
  • Login / Register

அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா அமேஸ் இப்போது சாலைகளில் பயணிக்கத் தயாராக உள்ளது

ஹோண்டா அமெஸ் க்காக டிசம்பர் 04, 2024 06:12 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 122 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய ஹோண்டா அமேஸ் இப்போது V, VX மற்றும் ZX  போன்ற மூன்று முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது

2024 Honda Amaze launched

  • இது புதிய டூயல்-பாட் LED ஹெட்லைட்கள், பெரிய கிரில், டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற LED டெயில் லைட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • உள்ளே, இது 3-ஸ்போக் ஸ்டீயரிங், 8-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் பிளாக் மற்றும் பீஜ் நிற தீம் ஆகியவற்றை வழங்குகிறது.

  • முக்கிய அம்சங்களில் செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவை அடங்கும்.

  • இது 6 ஏர்பேக்குகள் (தரநிலை), ஒரு லேன்வாட்ச் கேமரா மற்றும் ADAS உடன் வருகிறது.

  • 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (90 PS/110 Nm) வெளிச்செல்லும் மாடலில் இருந்து, மேனுவல் மற்றும் CVT ஆப்ஷன்கள் இரண்டையும் கொண்டுள்ளது.

மூன்றாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.10.90 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சப்-4m செடான் மூன்று முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது: V, VX மற்றும் ZX. புதிய அமேஸ் வழங்கும் அணைத்து சிறப்பம்சங்களை ஆராய்வோம்:

வெளிப்புற சிறப்பம்சங்கள்

2024 Honda Amaze front

புதிய ஹோண்டா அமேஸின் வெளிப்புற டிசைன் மற்ற ஹோண்டா மாடல்களில் இருந்து உத்வேகம் பெறுகிறது. ட்வின்-பாட் LED ஹெட்லைட்கள் ஹோண்டா எலிவேட்டில் உள்ளதைப் போன்றது, அதே நேரத்தில் கிரில் சர்வதேச அளவில் கிடைக்கும் ஹோண்டா அக்கார்டு மூலம் ஈர்க்கப்பட்டதாக தெரிகிறது. ஃபாக் லேம்ப் ஹவுசிங் மற்றும் கிரில்லில் உள்ள குரோம் பார் ஆகியவை ஹோண்டா சிட்டியில் உள்ளதைப் போன்றே உள்ளன.

2024 Honda Amaze rear

ப்ரொபைலில், அமேஸில் புதிய 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் சிட்டி செடானைப் போலவே இடதுபுற ரியர்வியூ மிரரின் (ORVM) கீழ் லேன்வாட்ச் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது பெரிய ஹோண்டா செடானால் ஈர்க்கப்பட்ட ரேப்பரவுண்ட் LED டெயில் லைட் செட்அப்பையும் அப்படியே பெறுகிறது.

உட்புற சிறப்பம்சங்கள்

2024 Honda Amaze interior

புதிய ஹோண்டா அமேஸ், முந்தைய மாடலின் பிளாக் மற்றும் பீஜ் நிற தீம்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. டாஷ்போர்டு டிசைன், எலிவேட்டால் ஈர்க்கப்பட்டு, ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் மற்றும் 3-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டாஷ்போர்டின் பயணிகள் பக்கத்திலிருந்து சென்டர் ஏசி வென்ட்கள் வரை கருப்பு வடிவ டிரிம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 3-பாயின்ட் சீட்பெல்ட்களுடன் அனைத்து சீட்களும் பழுப்பு நிற லெதரெட்டில் அமைக்கப்பட்டன.

மேலும் படிக்க: இந்த டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்களின் பட்டியல் இதோ

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

2024 Honda Amaze gets auto AC with rear vents

புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ், 8 இன்ச் டச்ஸ்கிரீன், செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ரியர் வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் உள்ளிட்ட பல புதிய அம்சங்களை வழங்குகிறது. இது பேடல் ஷிஃப்டர்களுடன் வருகிறது, இது ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களில் பிரத்தியேகமாக கிடைக்கிறது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இதில், ஆறு ஏர்பேக்குகள் (தரநிலையாக), ஒரு புதிய லேன்வாட்ச் கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் பாதுகாப்பு தொகுப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஃபார்வர்ட் கோலிஷன் வார்னிங்  போன்ற அம்சங்களுடன் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களையும் (ADAS) ஹோண்டா வழங்குகிறது.

பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

Honda Amaze 1.2-litre petrol engine

புதிய ஹோண்டா அமேஸ் முந்தைய மாடலில் இருந்து 1.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு:

இன்ஜின்

1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

பவர்

90 PS

டார்க்

110 Nm

டிரைவர்ட்ரைன்

5-ஸ்பீட் MT, CVT*

*CVT = தொடர் வேரியபில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்

மேலும் படிக்க: 2024 மாருதி டிசையரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய சிறப்பம்சங்கள்

புதிய ஹோண்டா அமேஸின் போட்டியாளர்கள்

2024 Honda Amaze rear

2024 ஹோண்டா அமேஸ் மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோர் போன்ற சப்-4m செடான்களுடன் போட்டியிடுகிறது. ஜனவரி 2025-இல் டெலிவரி தொடங்கும் நிலையில், அதன் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: அமேஸ் ஆட்டோமேட்டிக்

was this article helpful ?

Write your Comment on Honda அமெஸ்

6 கருத்துகள்
1
R
ravi kumar
Jan 3, 2025, 9:59:53 AM

Best car i experienced Honda amaze for last 10year without having any issues and now i am having Elevate. Practical Car, usable applications and Best Services.

Read More...
    பதில்
    Write a Reply
    1
    D
    dk nayak yak
    Dec 5, 2024, 2:57:44 PM

    Worst car n customer service, features not compete with rivals, Honda craze fading gradually

    Read More...
      பதில்
      Write a Reply
      1
      D
      debanshu
      Dec 4, 2024, 6:44:24 PM

      Only petrol na CNG available

      Read More...
        பதில்
        Write a Reply

        ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

        புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

        கார் செய்திகள்

        • டிரெண்டிங்கில் செய்திகள்
        • சமீபத்தில் செய்திகள்

        டிரெண்டிங் சேடன் கார்கள்

        • லேட்டஸ்ட்
        • உபகமிங்
        • பிரபலமானவை
        ×
        We need your சிட்டி to customize your experience