New Honda Amaze வெளியாகும் தேதி மற்றும் கூடுதல் விவரங்கள்
புதிய அமேஸ் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய டேஷ்போர்டு செட்டப்பை கொண்டிருக்கும். பழைய பதிப்பில் இருந்த அதே 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
-
புதிய வடிவமைப்புடன் மட்டுமிலாமல் புதிய LED லைட்டிங் எலமென்ட்களுடன் இது வரும்.
-
டூயல்-டோன் கேபின் தீம் கொண்ட புதிய டாஷ்போர்டு அமைப்பு இருக்கலாம்.
-
பெரிய டச் ஸ்கிரீன், சிங்கிள் பேன் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவை அடங்கும்.
-
விலை ரூ.7.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் ஒரு படத்தை டீசராக வெளியிட்டது. இப்போது இந்த கார் டிசம்பர் 4 -ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்கள்
புதிய தலைமுறை அமேஸ் எப்படி இருக்கும் என்பது தொடர்பான விவரங்களை இன்னும் ஹோண்டா நிறுவனம் முழுமையாக வெளியிடவில்லை. ஆனால் அதன் டிசைன் ஸ்கெட்ச் டீசரை பார்த்தால் இது ஒரு புதிய வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பது தெரிய வருகிறது. புதிய அமேஸில் இன்டெகிரேட்டட் LED DRL -களுடன் கூடிய புதிய டூயல்-பேரல் LED ஹெட்லைட்கள் இருக்கும் என்பதை டீஸர் உறுதிப்படுத்துகிறது.
புதிய ஜென் அமேஸின் பக்கவாட்டு மற்றும் பின்புற விவரங்களையும் ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. ஆனால் இது புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய எல்இடி எலமென்ட்களுடன் புதிய டெயில் லைட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: அறிமுகமானது புதிய 2024 Maruti Dzire, வரும் 11 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது
கேபின் மற்றும் வசதிகள்
புதிய தலைமுறை அமேஸின் உட்புறத்தை ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. ஆனால் புதிய டேஷ்போர்டு செட்டப் மற்றும் புதிய கேபின் தீம் ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அமேஸ் பெரிய டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற புதிய வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பின்புறக் காட்சி கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு இருந்த அதே பவர்டிரெய்னை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது
புதிய அமேஸ் அதன் பழைய பதிப்பில் உள்ள அதே 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். முழுமையான விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
பவர் |
90 PS |
டார்க் |
110 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, CVT* |
* CVT - கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 ஹோண்டா அமேஸ் காரின் விலை ரூ.7.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய தலைமுறை மாருதி டிசையர், டாடா டிகோர், மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்