• English
  • Login / Register

அறிமுகமானது புதிய 2024 Maruti Dzire, வரும் 11 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது

published on நவ 06, 2024 12:02 pm by shreyash for மாருதி டிசையர் 2024

  • 4 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும் போது 2024 டிசையர் ஆனது புதிய ஸ்விஃப்ட்டி -லிருந்து முற்றிலும் வித்தியாசமாக தோற்றமளிக்கிறது. ஆனால் ஸ்விஃப்ட் காரை போலவே உட்புறம் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் உள்ளன.

  • புதிய தலைமுறை டிசையரின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது

  • ரூ.11,000 செலுத்தி இந்த காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • LXi, VXi, ZXi மற்றும் ZXi பிளஸ் 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

  • நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள், புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய Y வடிவ எல்இடி டெயில் லைட்ஸ் ஆகியவற்றை வெளிப்புறத்தில் பார்க்க முடிகிறது.

  • ஸ்விஃப்ட்டின் அதே டேஷ்போர்டு அமைப்பு இதிலும் உள்ளது. டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்ஜ் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 9-இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் (இந்த பிரிவில் முதலாவது) ஆகிய வசதிகள் இந்த காரில் கொடுக்கப்படவுள்ளன.

  • 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

  • ஸ்விஃப்டில் உள்ள அதே 82 PS 1.2-லிட்டர் Z சீரிஸ் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் சிஎன்ஜியில் வழங்கப்படுகிறது.

  • விலை ரூ.6.70 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை மாருதி டிசையர் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் நவம்பர் 11 அன்று விற்பனைக்கு வர உள்ளது. முற்றிலும் புதிய வடிவமைப்பு, ஸ்விஃப்ட் போன்ற கேபின் அமைப்பு (முந்தைய தலைமுறைகளிலும் இருந்தது) மற்றும் ஸ்விஃப்ட்டில் இருக்கும் புதிய Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. . LXi, VXi, ZXi மற்றும் ZXi பிளஸ் என 4 வேரியன்ட்களில் புதிய டிசையரை மாருதி கொடுக்கும். புதிய டிசையர் எப்படி இருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

முற்றிலும் புதிய வடிவமைப்பு

2024 டிசையர் இப்போது ஸ்விஃப்ட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இது பல கிடைமட்ட ஸ்லேட்டுகளுடன் கூடிய பெரிய கிரில்லையும் கொண்டுள்ளது. இது ஸ்விஃப்ட்டின் தேன்கூடு வடிவ கிரில்லில் இருந்து வேறுபட்டது. இது கிடைமட்டமாக உள்ள டிஆர்எல்களுடன் நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ஆக்ரோஷமாக வடிவமைக்கப்பட்ட முன்பக்க பம்பரை கொண்டுள்ளது. இது புதிய வடிவிலான ஃபாக் லைட் ஹவுஸிங்கும் இதில் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டு தோற்றம் மற்றும் விண்டோலைன் ஆகியவை ஏறக்குறைய பழைய பதிப்பைப் போலவே உள்ளது. இருப்பினும், 2024 டிசையர் புதிதாக வடிவமைக்கப்பட்ட 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் உள்ளன. பின்புறத்தில் புதிய டிசையர் Y-வடிவ LED டெயில் லைட்ஸ் குரோம் எலமென்ட் உடன் இணைக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. 

ஸ்விஃப்ட் போன்ற கேபின்

புதிய தலைமுறை டிசையர் வெளியில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தாலும் டேஷ்போர்டு தளவமைப்பு ஸ்விஃப்டு போலவே உள்ளது. இருப்பினும் ஸ்விஃப்ட்டின் ஆல்-பிளாக் இன்ட்டீரியர் போல இல்லாமல் புதிய டிசையர் டாஷ்போர்டில் வுடன் இன்செர்ட்களுட்ன டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்ஜ் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ போன்ற மற்ற மாருதி கார்களில் வழங்கப்படும் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் கூட இங்கே உள்ளது.

மேலும் பார்க்க: புதிய ஹோண்டா அமேஸ் தற்போதைய மாடலை விட இந்த 5 வசதிகளை பெறலாம்

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சப்போர்ட் உடன் கூடிய 9 இன்ச் டச் ஸ்கிரீன், பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி, அனலாக் டிரைவரின் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் இந்த காரில் உள்ளன. சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் வரும் இந்தியாவின் முதல் சப்காம்பாக்ட் செடான் டிசையர் ஆகும்.

இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. ஸ்விஃப்ட் காருடன் ஒப்பிடும் போது டிசையர் 360 டிகிரி கேமராவுடன் வருகிறது (இந்த பிரிவில் முதலாவது).

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

2024 டிசையர் புதிய ஸ்விஃப்ட்டில் அறிமுகமான புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின்

1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல்-CNG

பவர்

82 PS

70 PS

டார்க்

112 Nm

102 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT

5-ஸ்பீடு MT

கிளைம்டு மைலேஜ்

24.79 கிமீ/லி (MT), 25.71 கிமீ/லி (AMT)

33.73 கிமீ/கிலோ

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

புதிய தலைமுறை டிசையர் விலை ரூ.6.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ், டாடா டிகோர், மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti டிசையர் 2024

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience