2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரருக்கும் MG Windsor EV பரிசாக வழங்கப்படவுள்ளது
published on ஆகஸ்ட் 05, 2024 05:50 pm by dipan for எம்ஜி விண்ட்சர் இவி
- 181 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் ZS EV மற்றும் காமெட் EV ஆகியவற்றைத் தொடர்ந்து MG வின்ட்ஸர் EV ஆனது எம்ஜி நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும்.
நடந்து வரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்தியருக்கும் அறிமுகமாகவுள்ள MG வின்ட்ஸர் EV பரிசாக வழங்கப்படும் என JSW குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஜ்ஜன் ஜிண்டால் தனது ட்வீட்டில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். MG மோட்டார் இந்தியா மற்றும் JSW குழுமம் ஆனது தங்கள் கூட்டு முயற்சியின் (JV) ஒரு பகுதியாக இந்த அறிவிப்பின் மூலம் விளையாட்டு வீரர்களின் சாதனைகளை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் இந்தியா
2024 பாரிஸ் ஒலிம்பிக் தற்போது நடந்து வருகிறது. மேலும் இந்திய பங்கேற்பாளர்கள் ஏற்கனவே மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த பதக்கங்களின் எண்ணிக்கை சற்று உயரும் என எதிர்பார்க்கிறோம். இது MG வின்ட்ஸர் EV -யை பரிசாக வழங்கும் இந்த அற்புத முடிவு விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பை கௌரவிக்கும் முயற்சியாகும்.
MG-யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் ட்வீட்டில் MG யின் கிராஸ்ஓவர் EV இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கேஸ்டிலால் ஈர்க்கப்பட்டதாகும் ஆகவே 'வின்ட்சர்' என்று பெயரிடப்பட்டது என்ற சமீபத்திய செய்தி இங்கே உள்ளது. வின்ட்சர் EV ஆனது வெளிநாடுகளில் விற்கப்படும் வூலிங் கிளவுட் EV-யை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் வரவிருக்கும் இந்த EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ:
மேலும் படிக்க: வரவிருக்கும் MG Cloud EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
MG வின்ட்ஸர் EV பற்றிய ஒரு கண்ணோட்டம்
MG வின்ட்ஸர் இந்தியாவில் MG-இன் மூன்றாவது எலக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும், இது மிகவும் மலிவு விலையில் MG காமெட் EV மற்றும் பிரீமியம் MG ZS EV ஆகியவற்றுக்கு இடையே நிலைநிறுத்தப்படும். இந்தியா-ஸ்பெக் மாடலின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் இந்தோனேசியா-ஸ்பெக் போன்ற அதே எலக்ட்ரிக் பவர்டிரெய்னை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 136 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு மோட்டார் உடன் 50.6 கிலோவாட் பேட்டரி பேக்குடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியா-ஸ்பெக் மாடல் சீனா லைட் டூட்டி வெஹிக்கிள் டெஸ்ட் சைக்கிளின் (CLTC) படி 460 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது. இருப்பினும் இந்த ரேஞ்ச் இந்தியாவில் மாறுபடலாம். அங்கு வாகனங்கள் இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) மூலம் சோதிக்கப்படுகின்றன.
மற்ற MG கார்களை போலவே MG வின்ட்ஸரும் பல அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-ஸ்பெக் மாடலில் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் சீட்கள் போன்றவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பை பொறுத்தவரை இதில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். கூடுதலாக, அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பு ஒட்டுமொத்த அம்சங்களின் பட்டியலில் ஒரு பகுதியாக இருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
இந்தியாவில் MG வின்ட்ஸர் EV பண்டிகைக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது, இதன் விலை ₹20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV போன்ற கார்களுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும் அதே வேளையில் இது MG ZS EV-க்கு மிகவும் மலிவு விலை மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.