வரவிருக்கும் MG Cloud EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
published on ஆகஸ்ட் 01, 2024 05:55 pm by samarth for எம்ஜி விண்ட்சர் இவி
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
குளோபல்மாடல்களில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்த சோபா மோட் போன்றவை கிளவுடில் உள்ளன!.
MG கிளவுட் EV ஆனது விரைவில் இந்தியாவின் MG எலக்ட்ரிக் கார் வரிசையில் இணையவிருக்கிறது. சமீபத்தில் வெளியான MG கிளவுட் EV-இன் டீசர் அதன் சில அம்சங்கள் மற்றும் டிசைன் கூறுகளை வெளிப்படுத்தியது. இந்த கிராஸ்ஓவர் ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் வுலிங் என்ற பிராண்ட் பெயரில் கிடைக்கிறது. வரவிருக்கும் இந்தியா-ஸ்பெக் கிளவுட் EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள் இதோ:
டிசைன்
கிளவுட் EV ஆனது சர்வதேச மாடலின் டிசைனின் அளவுகளை பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம். குளோபல்-ஸ்பெக் கிளவுட் EV ஆனது, கனெக்டட் LED DRL-கள் மற்றும் மூடிய-ஆஃப் கிரில்லுடன் நேர்த்தியான டிசைனை வெளிப்படுத்துகிறது, இது எதிர்கால தோற்றத்தை அளிக்கிறது. ஹெட்லைட்கள் DRL-களுக்கு கீழே தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, அதன் டிசைன் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் மிகவும் நேர்த்தியாகத் தோன்றுகிறது, இதில் மிகக் குறைவான க்ரீஸகள் பயன்படுத்தப்பட்டுள்ளன மற்றும் பக்கவாட்டில் 18-இன்ச் ஏரோடைனமிக் ரீதியாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன, அதனுடன் ஃப்ளஷ் பொருத்தும் டோர் ஹேன்டில்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில், முன் இடது ஃபெண்டரில் சார்ஜிங் போர்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் ரியர் ரேக் செய்யப்பட்ட விண்ட்ஷீல்ட் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்கள், எளிமையான மற்றும் மென்மையான தோற்றத்தை அளிக்கிறது.
உட்புறம்
கிளவுட் EV ஆனது டாஷ்போர்டில் மர மற்றும் புரோன்ஸ் இன்செர்ட்களுடன் கூடிய பிளாக் கலர் நிற கேபின் தீமை கொண்டுள்ளது. கேபினில் முற்றிலும் மாறுபட்ட புரோன்ஸ்த் ஸ்டிச் கொண்ட பிளாக் கலர் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி உள்ளது. குளோபல்-ஸ்பெக் மாடல் ஒரு சோபா மோடையும் கொண்டுள்ளது. இது பயணிகளின் மேம்பட்ட வசதிக்காக 135 டிகிரி வரை பின்சீட்டில் சாய்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
வசதிகள்
வசதிகளை பொறுத்தவரை, உலகளவில் கிடைக்கும் மாடலில் 15.6-இன்ச் ஃப்ரீ-ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் பல கலர் சுற்றுப்புற லைட்கள் ஆகியவை அடங்கும். கூடுதல் அம்சங்களில் 6-வே பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், 4-வே பவர்டு முன் பயணிகள் சீட், ரியர் வென்ட்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற அம்சங்கள் அடங்கும்.
மேலும் பார்க்க: முதல் முறையாக MG Cloud EV-இன் டீசர் வெளிவந்துள்ளது, இதன் அறிமுகம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்
கிளவுட் EV பின்வரும் பவர்டிரெய்ன்களுடன் இந்தோனேசிய சந்தையில் கிடைக்கிறது:
பேட்டரி கெப்பாசிட்டி |
50.6 கிலோவாட் |
மோட்டார் எண்ணிக்கை |
1 |
பவர் |
136 PS |
டார்க் |
200 Nm |
கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் (CLTC) |
460 கி.மீ |
டிரைவ்டிரெய்ன் |
ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் (FWD) |
CLTC: சீனா லைட் ட்யூட்டி வெஹிகிள் டெஸ்ட் சைக்கிள்
இந்திய வெர்ஷனை பொறுத்தவரை ARAI தரநிலைகளின்படி சோதிக்கப்படும் என்பதால், வித்தியாசமான வரம்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. MG மோட்டாரிடமிருந்து வரவிருக்கும் ஆல்-எலக்ட்ரிக் கிராஸ்ஓவரை DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சுமார் 30 நிமிடங்களில் 30% முதல் 100% வரை சார்ஜ் செய்யலாம், மேலும் வீட்டு AC சார்ஜரை பயன்படுத்தி சுமார் 7 மணி நேரத்தில் 20% முதல் 100% வரை சார்ஜ் செய்ய முடியும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அறிமுகம்
MG கிளவுட் EV சுமார் ரூ. 20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. MG கிளவுடின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், இது ஆகஸ்ட் 2024-இல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400-க்கு பிரீமியம் மாற்றாக இருக்கும். அதே நேரத்தில் MG ZS EV உடன் ஒப்பிடும்போது மிகவும் விலை குறைவான ஆப்ஷனாக இருக்கும்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
0 out of 0 found this helpful