MG Cloud EV இந்தியாவில் Windsor EV என்ற பெயரில், 2024 ஆம் ஆண்டு பண்டிகைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
published on ஆகஸ்ட் 02, 2024 05:23 pm by rohit for எம்ஜி விண்ட்சர் இவி
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
EV -யின் பெயர் வடிவமைப்பில் அரச பாரம்பரியத்தின் சின்னமான விண்ட்சர் கோட்டையால் ஈர்க்கப்பட்டதாக MG தெரிவிக்கிறது.
-
ZS EV மற்றும் காமெட் EV ஆகியவற்றைத் தொடர்ந்து விண்ட்சர் EV ஆனது இந்தியாவில் MG-யின் மூன்றாவது எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
-
சர்வதேச அளவில் விண்ட்சர் EV ஆனது வூலிங் கிளவுட் EV என அழைக்கப்படுகிறது.
-
இது கிளவுட் EV போன்ற அதே 50.6 கிலோவாட் பேட்டரி பேக்கை கொண்டிருக்கலாம், இருப்பினும் திருத்தப்பட்ட கிளைம் செய்யப்படும் ரேஞ்சுடன்.
-
எதிர்பார்க்கப்படும் வசதிகளில் 15.6-இன்ச் டச்ஸ்க்ரீன், பவர்டு ஃப்ரண்ட் சீட்கள் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
விண்ட்சர் EV-க்கான விலை ரூ.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MG நிறுவனம் இந்தியாவிற்கு ஒரு புதிய எலக்ட்ரிக் கிராஸ்ஓவரை (ரீபேட்ஜ் செய்யப்பட்ட கிளவுட் EV) கொண்டு வருகிறது என்று முன்னர் அறியப்பட்டிருந்த நிலையில் கார் தயாரிப்பாளர் இப்போது நமது நாட்டில் MG விண்ட்சர் EV என்று பெயரிடப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார். வூலிங் பிராண்டின் கீழ் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் கிளவுட் EV பெயரிலிருந்து இது வேறுபடுகிறது. MG நிறுவனம் எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் பண்டிகைக் காலத்தில் அறிமுகப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஏன் விண்ட்சர் என பெயரிடப்பட்டுள்ளது?
MG-யின் கூற்றுப்படி அவர்களின் புதிய எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் சின்னமான வடிமைப்பின் அற்புதம் மற்றும் அரச பாரம்பரியத்தின் சின்னமான விண்ட்சர் கோட்டையிலிருந்து உத்வேகம் பெறுகிறது. விண்ட்சர் EV ஆனது, ஒரு செடானின் வசதியையும் ஒரு எஸ்யூவி-யின் விசாலத்தையும் இணைக்கும் MG -யின் வாக்குறுதியை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக MG ஏற்கனவே விண்ட்சர் பெயரை இந்தியாவில் வர்த்தக முத்திரையை சில காலத்திற்கு முன்பே பெற்றுவிட்டது.
MG விண்ட்சர் பற்றி மேலும் சில தகவல்கள்
இந்தியாவில் MG ZS EV மற்றும் MG காமெட் EV ஆகியவற்றைத் தொடர்ந்து விண்ட்சர் MG-இன் மூன்றாவது எலக்ட்ரிக் காரக இருக்கும், மேலும் அளவு மற்றும் விலை அடிப்படையில் இரண்டிற்கும் இடையே நிலைநிறுத்தப்படும். தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்தோனேசியா-ஸ்பெக் மாடலில் காணப்படும் அதே எலக்ட்ரிக் பவர்டிரெய்னுடன் MG வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தோனேசிய சந்தையில் 50.6 கிலோவாட் பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது. இது ஒரே ஒரு 136 PS/200 Nm எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளது மற்றும் சீனா லைட் டூட்டி வெஹிக்கிள் டெஸ்ட் சைக்கிள் (CLTC) 460 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான EV-கள் ARAI ஆல் சோதிக்கப்படுவதால் இந்தியாவில் அந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு
15.6-இன்ச் டச்ஸ்க்ரீன், 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் சீட்கள் உள்ளிட்ட பல வசதிகளுடன் வின்ட்சர் EV-ஐ MG வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். கூடுதலாக, MG ஆனது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் ஆட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு ட்ரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற சிறப்பம்சங்களை வழங்க முடியும்.
மேலும் பார்க்க: ஜூலை 2024 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய கார்களைப் பற்றிய ஒரு பார்வை
இதன் விலை என்னவாக இருக்கும்?
MG விண்ட்சர் EV சுமார் ரூ. 20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400-க்கு பிரீமியம் மாற்றாக இருக்கும். அதே சமயத்தில் MG ZS EV-க்கு மலிவு விலை மாற்றாகவும் இது இருக்கும்.
புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
0 out of 0 found this helpful