MG Windsor EV காருக்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது
published on செப் 25, 2024 07:20 pm by anonymous for எம்ஜி விண்ட்சர் இவி
- 46 Views
- ஒரு கருத்தை எழுதுக
MG விண்ட்ஸர் EV இரண்டு விலை மாடல்களுடன் கிடைக்கும். நீங்கள் முழு மாடலுக்கும் முன்பணம் செலுத்த விரும்பினால் பேஸ் வேரியன்ட்டின் விலை ரூ. 13.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) இருந்து தொடங்குகிறது.
எம்ஜி வின்ட்சர் இவி காரின் முழுமையான வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் மற்றும் ஒரு காருக்கு செலுத்த வேண்டிய முன்பணம் பற்றிய விவரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. EV -யின் வரிசையின் விலை ரூ. 15.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). இப்போது கார் தயாரிப்பாளர் EV -ன் வாடிக்கையாளர்களுக்கான டெஸ்ட் டிரைவை இப்போது தொடங்கியுள்ளது. முன்பதிவுகள் மற்றும் விநியோகங்கள் அக்டோபரில் தொடங்க உள்ளன. ஆனால் நீங்கள் அதை டெஸ்ட் டிரைவை செய்து பார்க்கும் முன்னர் வின்ட்சர் EV காரை பற்றிய சுருக்கமான விவரங்கள் இங்கே உள்ளன.
வின்ட்சர் EV ஆனது ஃப்ளஷ் டைப் டோஎ ஹேண்டில்கள் போன்ற பிரீமியம் எலமென்ட்களுடன் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டிலும் கூட பின்புற வைப்பர் மற்றும் வாஷர் போன்ற சில எலமென்ட்கள் இதில் இல்லை. கேபின் நடைமுறை மற்றும் விசாலமானது முக்கியமான கன்ட்ரோல்கள் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதறடிக்கலாம். ஓட்டுநர் அனுபவம் சீராக இருந்தாலும் மோசமான சவுண்ட் இன்சுலேஷன் காரணமாக சவாரி வசதியில் இடையூறு ஏற்படுகிறது.
விண்ட்ஸர் EV பற்றிய விரிவான பார்வைக்கு நீங்கள் இங்கே கிளிக் செய்து எங்கள் விமர்சனத்தை பார்க்கலாம். இப்போது விண்ட்ஸர் EV என்ன வழங்குகிறது என்பதை இங்கே பார்ப்போம். காரணம் டெஸ்ட் டிரைவ் -க்கு முன்பு நீங்கள் விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
MG விண்ட்ஸர் EV வடிவமைப்பு
MG விண்ட்ஸர் EV ஆனது கனெக்டட் LED DRL -கள், LED ஹெட்லைட்கள் மற்றும் அதன் பிரீமியம் கவர்ச்சியை உயர்த்தும் ஒரு இல்லுமினேட்டட் MG லோகோவுடன் கூடிய நேர்த்தியான கிராஸ்ஓவர் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 18-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன மற்றும் ஃப்ளஷ் ஃபிட்டட் டோர் ஹேண்டில்களை உள்ளடக்கியது. பின்புறத்தில் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் உடனடியாக உங்கள் கவனத்தை ஈர்க்கும். இது ஒரு தனித்துவமான சாலை தோற்றத்தை காருக்கு கொடுக்கிறது.
மேலும் படிக்க: MG விண்ட்ஸர் EV மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
MG விண்ட்ஸர் EV இன்ட்டீரியர்
உள்ளே, MG விண்ட்ஸர் EV ஆனது முற்றிலும் கான்ட்ராஸ்ட் புரோன்ஸ் மற்றும் கோல்டு ஆக்ஸென்ட்களுடன் ஆல்-பிளாக் கேபின் உள்ளது. இது டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களில் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் சாஃப்ட் டச் மெட்டீரியல்களுடன் வருகிறது. பனோரமிக் கிளாஸ் ரூஃப் கேபினுக்குள் அதிக வெளிச்சத்தை அனுமதிக்கிறது, அதன் ஒட்டுமொத்த சூழலை மேம்படுத்துகிறது.
MG விண்ட்ஸர் EV வசதிகள்
விண்ட்ஸர் EV ஆனது 15.6-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளுடன் வருகிறது. இது 9-ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், 256-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ-ஃபோல்டு ORVMகள் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகியவற்றைப் பெறுகிறது.
பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைப் பெறுகிறது. MG டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் , ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
MG விண்ட்ஸர் EV பவர்டிரெய்ன் விவரங்கள்
136 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட ஒரே ஒரு 38 kWh பேட்டரி பேக்குடன் வின்ட்சர் EV -யை MG வழங்குகிறது. இது MIDC கிளைம்டு 331 கிமீ ரேஞ்சை கொடுக்கும். விண்ட்ஸர் EV ஆனது DC 45 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. அதே நேரத்தில் 3.3 kW மற்றும் 7.4 kW ஹோம் சார்ஜிங் ஆப்ஷன்களும் உள்ளன.
மேலும் பார்க்க: எம்ஜி வின்ட்சர் ஈவி பேஸ் மற்றும் டாப் வேரியன்ட் படங்களில் ஒப்பிடும்போது
MG விண்ட்ஸர் EV விலை மற்றும் போட்டியாளர்கள்
MG விண்ட்ஸர் EV -க்கான விலை ரூ.9.99 லட்சத்தில் தொடங்குகின்றன (எக்ஸ்-ஷோரூம்-இந்தியா), ஆனால் இது பேஸ் வேரியன்ட்டிற்கு மட்டுமே பொருந்தும். இதற்கு பேட்டரி வாடகை சர்வீஸை தவிர ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 3.5 செலவாகும். நீங்கள் முழு காரையும் முன்பணமாக வாங்க விரும்பினால் விலை ரூ. 13.50 லட்சத்தில் இருந்து ரூ. 15.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு நேரடி போட்டியாளர் இல்லை என்றாலும் அதன் விலை நிர்ணயத்தால் டாடா நெக்ஸான் EV, மஹிந்திரா XUV400, மற்றும் கூட டாடா பன்ச் EV மாடல்களுடன் போட்டி போடுகிறது.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: MG விண்ட்ஸர் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful