MG விண்ட்சர் EV டாஷ்போர்டு விவரங்கள் வெளியாகியுள்ளன
published on ஆகஸ்ட் 27, 2024 05:42 pm by samarth for எம்ஜி விண்ட்சர் இவி
- 43 Views
- ஒரு கருத்தை எழுதுக
விண்ட்சர் EV ஆனது அதன் குளோபல் ஸ்பெக் காரானா வூலிங் கிளவுட் காரில் உள்ளதை போலவே புரோன்ஸ் ஆக்ஸன்ட்களுடன் டூயல்-டோன் டாஷ்போர்டு உடன் வருகிறது.
-
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் அதன் மூன்றாவது ஆல்-எலக்ட்ரிக் காராக வின்ட்சர் EV -யை அறிமுகப்படுத்த உள்ளது
-
சமீபத்திய டீஸர் மூலமாக 15.6 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
-
பனோரமிக் கிளாஸ் ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் 135 டிகிரி வரை சாய்ந்திருக்கக்கூடிய பின் இருக்கைகள் போன்ற வசதிகள் உடன் வரலாம்.
-
இது 50.6 kWh பேட்டரி பேக், 136 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை கொடுக்கும் சிங்கிள் மோட்டார் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆரம்ப விலை சுமார் ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி வின்ட்சர் இவி இந்தியாவில் செப்டம்பர் 11 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. மேலும் எம்ஜி நிறுவனம் சமீபத்தில் அதன் எலக்ட்ரிக் கிராஸ்ஓவரின் டீசரை வெளியிட தொடங்கியுள்ளது. அதன் சமீபத்திய டீஸர் வீடியோ விண்ட்சர் EV -யின் உட்புறம் பற்றிய கூடுதல் விவரங்களை காட்டுகிறது. இந்தோனேசியாவில் விற்கப்படும் வூலிங் கிளவுட் EV -யின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பான விண்ட்சர் EV -யானது இந்தியாவில் MG நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள மூன்றாவது EV ஆகும். மேலும் MG காமெட் மற்றும் MG ZS EV -க்கு இடையில் விற்பனைக்கு வரும். சமீபத்திய டீஸர் வீடியோ என்ன வெளிப்படுத்தியது என்பதை இங்கே பார்ப்போம்.
என்ன தெரிய வருகிறது ?
MG விண்ட்சர் EV -யின் சமீபத்திய டீஸர் அதன் உட்புறத்தை சிறப்பித்துக் காட்டுகிறது. டாஷ்போர்டின் முழுப் பார்வையையும் பார்க்க முடிகிறது. பெரிய 15.6-இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்புடன் புரோன்ஸ் ஆக்ஸென்ட்களுடன் (அதன் குளோபல் ஸ்பெக் காரில் உள்ளதைப் போன்றது) டூயல்-டோன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த யூனிட் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பை சப்போர்ட் செய்யும். நேர்த்தியான சென்ட்ரல் ஏசி வென்ட்கள் டாஷ்போர்டில் ஒருங்கிணைக்கப்பட்டு டச் ஸ்கிரீன் யூனிட் -க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கீழே நகரும் போது, டேஷ்போர்டில் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் பேனலையும், ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றையும் நீங்கள் பார்க்கலாம்.
கூடுதலாக டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே இருப்பதும் தெரிய வருகிறது (ஒரு 8.8-இன்ச் யூனிட் இருக்கலாம்). MG ஒரு பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீலும் உள்ளது. இதில் ஆடியோ மற்றும் அழைப்பு கன்ட்ரோல்கள் உள்ளன.
மற்ற வசதிகள் மற்றும் பாதுகாப்பு
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள் மற்றும் பவர்டு டெயில்கேட் ஆகியவை வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை MG -யின் சமீபத்திய EV ஆனது 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக), ஒரு டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஒரு எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360-டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: MG விண்ட்சர் EV மேலும் ஒரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது, பனோரமிக் கிளாஸ் ரூஃப் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
பவர்டிரெய்ன்
இந்தியா-ஸ்பெக் MG விண்ட்சர் EV ஆனது 50.6 kWh பேட்டரியுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரே ஒரு மோட்டார் (136 PS/200 Nm) உடன் வருகிறது. இந்தோனேசியாவில் விற்கப்படும் மாடல், 460 கி.மீ-வரை கிளைம்டு ரேஞ்சை-கொண்டதாக உள்ளது. ஆனால் இந்திய மாடல் ARAI சோதனையின்படி அதிக ரேஞ்சை கொண்டிருக்கலாம்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
MG விண்ட்சர் EV -யின் விலை ரூ.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV -க்கு மிகவும் விலை குறைவான மாற்றாகவும் டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ஆகியவற்றுக்கு பிரீமியமான மாற்றாகவும் இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful