MG Windsor EV -ன் மேலும் ஒரு டீஸர் வெளியானது - பனோரமிக் கிளாஸ் ரூஃப் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது
published on ஆகஸ்ட் 21, 2024 06:07 pm by dipan for எம்ஜி விண்ட்சர் இவி
- 104 Views
- ஒரு கருத்தை எழுதுக
MG விண்ட்சர் EV செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
-
விண்ட்சர் EV இந்தியாவில் MG–யின் மூன்றாவது எலக்ட்ரிக் காராக இருக்கும்.
-
அதன் பேஸ் மாடலான வுலிங் கிளவுட் EV, பனோரமிக் கிளாஸ் ரூஃபை கொண்டிருக்கவில்லை
-
முந்தைய டீஸர்களில் 135 டிகிரி ரெக்லைன் ரியர் சீட், சுற்றுப்புற லைட்கள் மற்றும் ரியர் ஏசி வென்ட்கள் போன்ற அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
-
கூடுதல் அம்சங்களில் 15.6-இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6 ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
-
இது கிளவுட் EV-ஐப் போன்றே 50.6 கிலோவாட் பேட்டரி பேக்கை கொண்டிருக்கக்கூடும், ஆனால் திருத்தப்பட்ட ARAI- கிளைம் செய்யும் ரேஞ்ச் உடன் இருக்கும்.
-
இதன் ஆரம்ப விலை சுமார் 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MG விண்ட்சர் EV கார் தயாரிப்பாளரின் மூன்றாவது எலக்ட்ரிக் காராக இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. மேலும் MG இந்த மாடலின் டீசரை சில காலமாக வெளியிட்டு வருகிறது. சமீபத்திய டீசரில், கார் தயாரிப்பாளர் புதிய பனோரமிக் கிளாஸ் ரூஃப் அம்சத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார் -. இந்த வசதியை பற்றிய விரிவான பார்வை இதோ:
டீசர் மூலம் தெரியவருவது என்ன?
தயாரிப்பாளரால் பகிரப்பட்ட சமீபத்திய வீடியோ MG விண்ட்சர் EV-க்கு நிலையான பனோரமிக் கிளாஸ் ரூஃபை டீசரை வெளியிட்டது. இந்த அம்சம் கேபினுக்குள் அதிக இயற்கை ஒளியை அனுமதிக்கும், அதன் பிரீமியம் உணர்வை அதிகரிக்கும். திறக்கக்கூடிய வழக்கமான சன்ரூஃப்கள் போலல்லாமல், இந்த கிளாஸ் ரூஃப் ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது மற்றும் இதில் ரூஃபை திறக்கக்கூடிய ஆப்ஷன் இல்லை. இதேபோன்ற கிளாஸ் ரூஃப் அதிக பிரீமியம் ஹூண்டாய் ஐயோனிக் 5 EV-இல் கிடைக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், MG விண்ட்சர் EV-ஐ அடிப்படையாகக் கொண்ட வுலிங் கிளவுட் EV இந்த அம்சத்தை வழங்கவில்லை.
மேலும் படிக்க: Windsor EV இன்ட்டீரியர் இப்படித்தான் இருக்குமா ! டீசரை வெளியிட்ட எம்ஜி நிறுவனம்
விண்ட்சர் EV-யில் நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
விண்ட்சர் EV ஆனது கிராஸ்ஓவர் பாடி ஸ்டைல், அனைத்து LED லைட்டிங் எலமென்ட்கள் மற்றும் அதன் பக்கங்களிலும் பின்புறத்திலும் நேர்த்தியான, மினிமலிஸ்ட் டிசைனை கொண்டுள்ளது.
உட்புறத்தில், விண்ட்சர் EV ஆனது பிளாக் மற்றும் பெய்ஜ் நிற தீமை கொண்ட வுலிங் கிளவுட் EV போன்ற ஒரு கேபினைக் கொண்டிருக்கும். 15.6 இன்ச் டச்ஸ்கிரீன், 8.8 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் சீட்கள் மற்றும் எலக்ட்ரிக் டெயில்கேட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பைபொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். விண்ட்சர் EV -ல் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளை பெறக்கூடும்.
MG விண்ட்சர் ஆனது 136 PS மற்றும் 200 Nm வழங்கும் ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் (FWD) மோட்டாரை இயக்கும் 50.6 கிலோவாட் பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேசியா-ஸ்பெக் வெர்ஷன் 460 கி.மீ ரேஞ்சை கோரும் அதே வேளையில், இந்திய மாடல் ARAI சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் அதிக ரேஞ்சை வழங்கக்கூடும். இந்த எண்ணிக்கை இந்திய சந்தையில் கணிசமாக உயரக்கூடும்.
அறிமுகம் மற்றும் போட்டியாளர்கள்
விண்ட்சர் EV செப்டம்பர் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என்று MG அறிவித்துள்ளது. இதன் விலை ரூ. 20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பிரீமியம் ஆப்ஷனை வழங்கும் போது MG ZS EV-க்கு மிகவும் குறைவான விலையில் உள்ள மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற வேண்டுமா? கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்
0 out of 0 found this helpful