சாகசத்தை விரும்பும் எஸ்யூவி உரிமையாளர்களுக்காக 'ROCK N ROAD SUV Experiences' என்ற திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது
published on ஜனவரி 24, 2024 03:30 pm by rohit for மாருதி ஜிம்னி
- 153 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜிம்னி, கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா மற்றும் ஃப்ரான்க்ஸ் போன்ற மாருதி எஸ்யூவி -களின் உரிமையாளர்கள் இந்த புதிய திட்டம் மூலமாக குறுகிய மற்றும் நீண்ட தூர டிரிப்களுக்கு செல்லலாம்.
-
இந்த புதிய திட்டம் மாருதி எஸ்யூவி உரிமையாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.
-
மாருதி எஸ்யூவி மாடல்களுக்காக, குறிப்பிட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
-
மாருதியின் தற்போதைய வரிசையில் மூன்று எஸ்யூவி -கள் மற்றும் ஒரு கிராஸ்ஓவர் ஆகியவை அடங்கும், புதிய மாடல்களும் விரைவில் சேர்க்கப்படவுள்ளன.
கிராண்ட் விட்டாரா, 5-டோர் ஜிம்னி மற்றும் ஃபிராங்க்ஸ் கிராஸ்ஓவர் ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியதன் மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்யூவி - கார்கள் மீது மாருதி சுஸூகி ஆர்வமாக இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது. மாருதி நிறுவனம் இப்போது அதன் எஸ்யூவி உரிமையாளர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை கொடுப்பதற்காக ‘ராக் என் ரோடு எஸ்யூவி எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் எதற்காக ?
மாருதி எஸ்யூவி -களின் உரிமையாளர்கள் நகர வீதிகளுக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிப்புற இடங்களில் டிரைவிங் அனுபவத்தை பெற வேண்டும் என்பதையே இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இரண்டு வடிவங்களைக் கொண்டுள்ளது - 'ROCK N' ROAD Expeditions' மற்றும் 'ROCK N' ROAD வீக்கெண்டர்கள், இதன் மூலமாக குறுகிய மற்றும் நீண்ட பயணங்களை மேற்கெள்ளலாம். நாட்டிலுள்ள ஆஃப்-ரோடிங் திறமைகளை அங்கீகரிக்க, பல நகரங்களின் ஆஃப்-ரோடு சாம்பியன்ஷிப், 'ROCK N' ROAD 4X4 மாஸ்டர்ஸ்' என்ற திட்டமும் உள்ளது.
மாருதி எஸ்யூவி மாடல்களுக்கு ஏற்ப இந்த நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன, இதனால் ஒவ்வொரு எஸ்யூவி உரிமையாளருக்கும் ஏற்ற திட்டம் உள்ளது. இதைப் பற்றிய கூடுதல் விவரங்களை நீங்கள் அதை பிரத்தியேக இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
இதையும் பார்க்கவும்: மாருதி ஜிம்னி எக்ஸ்ட்ரீம்: பெரிதாகவும், முரட்டுத்தனமாகவும் தோற்றமளிக்க கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது
மாருதியின் எஸ்யூவி போர்ட்ஃபோலியோ
தற்போது, மாருதியின் மூன்று முறையான எஸ்யூவி -களை விற்பனை செய்கின்றது: ஜிம்னி,பிரெஸ்ஸா, மற்றும் கிராண்ட் விட்டாரா. மேலும் மாருதி ஃபிரான்க்ஸ் கிராஸ்ஓவரை அதன் எஸ்யூவி வரிசையில் உள்ள கார்கள் என்றே கருதுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிராண்ட் விட்டாராவின் 3-வரிசை பதிப்பு மற்றும் புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு போட்டியாக மைக்ரோ-எஸ்யூவி ஒன்றையும் அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. மேலும் முதல் மின்சார வாகனம், eVX SUV, 2024 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் படிக்க: ஜிம்னி ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful