மாருதி ஃப்ரான்க்ஸ் -இன் அறிமுகம் நெருங்கிவிட்டது
மாருதி fronx க்காக மார்ச் 17, 2023 05:24 pm அன்று ansh ஆல் திருத்தம் செய்யப்பட்டது
- 51 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஏப்ரலில் கிராஸ் ஓவருக்காக அதன் விலைகளை கார் உற்பத்தியாளர் அறிவிக்க உள்ளார்.
-
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் ஃப்ரான்க்ஸ் வெளிவந்தது, அப்போதிலிருந்து புக்கிங்குகள் ஆரம்பித்துவிட்டன.
-
இது இரு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 90PS, 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 100PS, 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்
-
ஒன்பது- இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, ஹெட்ஸ் ஆப் டிஸ்பிளே மற்றும் குரூஸ் கண்ட்ரோல் ஆகியவை அம்சங்களின் பட்டியலில் அடங்கியுள்ளன.
-
இப்போது வரை 10,000க்கும் மேற்பட்ட ப்ரீ-ஆர்டர்கள் முடிந்திருக்கின்றன.
-
விலை ரூ. 8 இலட்சத்தில் (எக்ஸ் ஷோ ரூம்)இருந்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி, 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஃப்ரான்க்ஸ் -ஐ காட்சிப்படுத்தியது அதனுடன் ஐந்து-கதவு களைக் கொண்ட ஜிம்னி யையும் வெளியிட்டது. அதன் விலைகள் பற்றிய விவரத்திற்காக நாம் இதுவரை காத்திருந்தோம். கிராஸ் ஓவர் - எஸ்யுவி ஏற்கனவே டீலர்ஷிப்புகளை அடைந்துவிட்டது, மேலும் நமக்கு கிடைத்த தகவல் ஆதாரங்களின்படி ஏப்ரல் முதல் வாரத்தில் அது வெளியிடப்படும்.
ஃப்ரான்க்ஸ் பவர்டிரெயின்ஸ்
|
||
|
|
|
|
|
|
|
90PS |
100PS |
|
113Nm |
148Nm |
மாருதி கார் தயாரிப்புகளில் பலேனோ-அடிப்படையிலான ஃப்ரான்க்ஸ் மட்டுமே டர்போ-பெட்ரோல் என்ஜினை மீண்டும் பெற்றுள்ளது மேலும் இந்த முறை, வாடிக்கையாளர் விருப்பத்தின்படி மோட்டார், பேடில் ஷிஃப்டர்களுடன் ஐந்து-வேக மேனுவல் அல்லது ஆறு-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் உடன் வருகிறது. பலேனோ ஹேட்ச்பேக் போன்றே ஃப்ரான்க்ஸ் CNG ஆப்ஷனையும் , பெறக்கூடும்.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
பலேனோ போன்றே ஃப்ரான்க்ஸ் -ம் அம்சங்களைப் பெற்றுள்ளது. இது வயர்லெஸ் ஆன்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் ஒன்பது-இன்ச் டச் ஸ்கிரீன் தகவல்போக்கு அமைப்பு, ஹெட்ஸ்-ஆப் டிஸ்பிளே, குரூஸ் கண்ட்ரோல், ARKAMYS ஒலி அமைப்பு, பேடில் ஷிஃப்டர்கள், ஆட்டோமெட்டிக் கிளைமெட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றைப் பெறுகிறது. பயணிகள் பாதுகாப்பைப் பொருத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்(ESP), ஹில்-ஹோல்டு அசிஸ்ட் மற்றும் 360-டிகிரி கேமரா உடன் வருகிறது.
மேலும் படிக்க: ChatGPT இன் படி 4 சிறந்த இந்திய கார்கள் இதோ
விலைகள் மற்றும் போட்டிக் கார்கள்
தொடக்க விலையை ரூ.8 இலட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோ ரூம்) உற்பத்தியாளர் நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது சப்காம்பாக்ட் SUV -க்களுக்கு மாற்றாக மற்றும் கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, ஹீண்டாய் வென்யு , டாடா நெக்சான் மற்றும் ஹீண்டாய் i20 போன்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக்காக ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.
Also Read: Maruti Fronx Expected Prices: How Much Pricier Will It Be Over The Baleno?
மேலும் படிக்க: மாருதி ஃப்ரான்க்ஸ் எதிர்பார்க்கப்படும் விலைகள்:பலேனோவை விட இது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கும்?