• ஹூண்டாய் எலைட் ஐ20 front left side image
1/1
 • Hyundai Elite i20
  + 102படங்கள்
 • Hyundai Elite i20
 • Hyundai Elite i20
  + 8நிறங்கள்
 • Hyundai Elite i20

ஹூண்டாய் Elite i20

காரை மாற்று
1579 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு
Rs.5.59 - 9.41 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
சமீபகால சலுகைகள்ஐ காண்க
இந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்

ஹூண்டாய் Elite i20 இன் முக்கிய அம்சங்கள்

மைலேஜ் (அதிகபட்சம்)22.54 கேஎம்பிஎல்
என்ஜின் (அதிகபட்சம்)1396 cc
பிஹெச்பி88.76
டிரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
சீட்கள்5
சர்வீஸ் செலவுRs.4,012/yr

Elite i20 சமீபகால மேம்பாடு

ஆட்டோ எக்ஸ்போ 2018 இல் ரூ.5.35 லட்சம் (எக்ஸ்- ஷோரும் டெல்லி) என்ற துவக்க விலையில் 2018 எலைட் ஐ20 காரை, ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் காரில், மறுவடிவமைப்பை பெற்ற முன்பக்க மற்றும் பின்பக்க சுயவிவரங்கள் உடன் கூடுதல் அம்சங்களையும் பெற்று உள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை இங்கே காண்போம்.

இந்த 2018 எலைட் ஐ20 காரில் இரண்டு விதமான என்ஜின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை கொண்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம்83PS/115Nm ஆற்றலை வெளியிட்டு, 5 –ஸ்பீடு மேனுவல் உடன் இணைந்து செயலாற்றுகிறது. 1.4 லிட்டர்U2 CRDi பெட்ரோல் என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் உடன் இணைந்து செயலாற்றி,90PS/220Nm ஆற்றலை வெளியிடுகிறது.4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் மட்டும் இணைந்து செயலாற்றிய 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தயாரிப்பை ஹூண்டாய் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அதே நேரத்தில், ஒருCVT ஆட்டோ தேர்வு உடன் கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரை 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. 2018 எலைட் ஐ20 கார் வாடிக்கையாளர்களின் வழிகாட்டி: வகைகள் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய எலைட் ஐ20 காரின் முன்பக்கத்தில் ஒரு 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர்லிங்க் காம்பேக்ட்டபிளிட்டி, பின்பக்க பார்க்கிங் கேமரா (இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீனில் உள்ள டிஸ்ப்ளே காட்டும்) உடன் சென்ஸர்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உடன் பின்பக்க ஏசி திறப்பிகள் கூல்டு கிளோவ் பாக்ஸ், மின்னோட்ட முறையில் மடக்கக் கூடிய மற்றும் மாற்றி அமைக்க கூடியORVM-கள், வெல்கட் செயல்பாடு உடன் ஆட்டோமேட்டிக்ப்ரோஜெக்ட்டர் ஹெட்லெம்ப்கள் உடன்LED DRL-கள் மற்றும் நிலைப்பாடு லெம்ப்கள்ஆகியவற்றை பெற்றுள்ளது.

புதிய எலைட் ஐ20 காரில்பாதுகாப்பு தொடர்பான அம்சங்களைப் பொறுத்த வரை, இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை எல்லா வகைகளிலும் அளிக்கப்படுகிறது. இதன் உயர் தர வகையான அஸ்டா(ஓ) இல் நான்கு ஏர்பேக்குகள் மற்றும் ஐசோபிக்ஸ் ஹோல்ட் சீட் ஆங்கர்கள் ஆகியவை தரமான கூடுதல் சாதனமாக அளிக்கப்படுகிறது.

இந்த புதிய 2018 எலைட் ஐ20 காருக்கு போட்டியாளர்களாக மாருதி சுஸூகி பேலினோ, ஹோண்டா ஜாஸ், ஃபோர்டு ப்ரீஸ்டைல் மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ.

அதிக சேமிப்பு!
பயன்படுத்திய புது டெல்லி இல் ஹூண்டாய் Elite i20 இலிருந்து 44% !க்கு கிடைக்க கூடிய சிறந்த டீல்கள் வரை சேமிக்க

ஹூண்டாய் எலைட் ஐ20 விலை பட்டியலில் (variants)

ஏரா1197 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.5.59 லட்சம்*
மேக்னா பிளஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.6.34 லட்சம்*
ஏரா டீசல்1396 cc, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல்Rs.6.97 லட்சம்*
ஸ்போர்ட்ஸ் பிளஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்
மேல் விற்பனை
Rs.7.21 லட்சம்*
ஐ 20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் இரட்டை டோன்1197 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.7.51 லட்சம்*
ஐ 20 மேக்னா பிளஸ் டீசல்1396 cc, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல்Rs.7.7 லட்சம்*
ஆஸ்டா தேர்வு1197 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.8.15 லட்சம்*
ஐ 20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் சி.வி.டி.1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.8.31 லட்சம்*
ஐ 20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் டீசல்1396 cc, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல்
மேல் விற்பனை
Rs.8.46 லட்சம்*
ஐ 20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் டூயல் டோன் டீசல்1396 cc, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல்Rs.8.76 லட்சம்*
ஐ 20 அஸ்டா ஆப்ஷன் சி.வி.டி.1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல்Rs.9.2 லட்சம்*
ஐ 20 அஸ்டா ஆப்ஷன் டீசல்1396 cc, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல்Rs.9.41 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
Ask Question

Are you Confused?

48 hours இல் Ask anything & get answer

Recently Asked Questions

ஒத்த கார்களுடன் ஹூண்டாய் Elite i20 ஒப்பீடு

புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை

ஹூண்டாய் எலைட் ஐ20 விமர்சனம்

இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலின் தோற்றத்தை பார்த்தால், தற்போது நம் நாட்டில் அதிக விற்பனையில் உள்ள பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது.

இந்த பிரிவில் உள்ள கார்களிலேயே மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பாகமுந்தைய எலைட் ஐ20 கார் இருந்தது. இதன்மூலம் இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலின் ஸ்டைலிங் பகுதியில் ஹூண்டாய் நிறுவனம், அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட வாய்ப்பு இல்லை. இதனால் எலைட் ஐ20 2018 காரில் மேம்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பின்பக்க ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள், சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட எலைட் ஐ20 காரில் உள்ள அம்சங்கள் பட்டியல் மூலம் தனது போட்டியாளர்கள் உடன் ஒத்ததாக இருப்பது மட்டுமின்றி, சில துறைகளில் அந்த கார்களை மிஞ்சி ஆச்சரியத்திற்குள்ளாகவும் செய்துள்ளது. அதே நேரத்தில், இந்த அறிமுகத்தில் ஆட்டோமேட்டிக் வகைஇழந்திருப்பது சற்று ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஏனெனில் பேலினோ மற்றும் ஜாஸ் போன்ற கார்கள், தங்கள் பெட்ரோல் வகைகளில் ஒருCVT-யை கொண்டுள்ளது. இது தவிர, புதிய ஸ்விஃப்ட் காரில், எலைட் ஐ20-யை விட, அதிக அளவில் சுமையை ஏற்று இடவசதியை (பேலினோ காரில் அளிக்க தவறிய ஒரு சில அம்சங்களை அளிக்கிறது) கொண்டிருப்பதால், இதன் சந்தையை பகிர்ந்து கொள்ளும

 வாய்ப்புள்ளது. குறிப்பாக,ஸ்விஃப்ட் காரின் உயர் தர வகையில் முழுமையான அம்சங்களை பெற்றிருக்க, எலைட் ஐ20 கார் உடன் ஒப்பிடும் போது ஏறக்குறைய 85 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக உள்ளதை காணலாம். இந்நிலையில் எலைட் ஐ20 காரை வாங்குவது புத்திசாலித்தனமான செய்கையாக இருக்குமா? இதற்கான விடையைப் பெற எங்கள் விரிவான விமர்சனத்திற்காக காத்திருங்கள்.

“நாட்டில் அதிகமாக விற்பனையாகும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் வரிசையில், இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல் தொடர்ந்து இடம்பெறும்.”

 

வெளி அமைப்பு

இந்தப் பிரிவிலேயே பார்க்க அழகான வாகனமாக இருக்கிறது என்று நாங்கள் தைரியமான ஒரு கூற்றை சொல்ல முடியும். ஏனெனில் இந்த கருத்தைபலரும் ஏற்றுக் கொள்வார்கள். இந்த காரின் வடிவமைப்பாளர்களால் இதில் தேவைக்கு அதிகமான வெட்டுகள் மற்றும் வளைவுகளில் கவனம் செலுத்தப்படாமல் விட்டதால், அதை பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிப்பதோடு, எலைட் காருக்கு ஒரு அடிப்படையான லேஅவுட்டை அளித்து கவனத்தை ஈர்க்கிறது. அதற்காக விரும்பி கெஞ்ச வேண்டிய தேவை தவிர்க்கப்படுகிறது.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, சுத்தமாகவும் கச்சிதமாகவும் அமைந்த சுயவிவரத்தைப் பெற்று, தனது உருவத்தில் ஒரு வெள்ளி வரிசையை பெற்றுள்ளது. இந்த காரில் உள்ள ஹூண்டாய் அடையாளத்தை நீங்கள் நீக்கிவிட்டால், இதன் உருவம் ஒரு ஐரோப்பிய தயாரிப்பு காராக இருக்குமோ என்று நாம் எளிதில் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது.

இந்த காரின் முகப்பு பகுதியில் ஸ்லீக், பின்னோக்கி பதுங்கிய நிலையில் அமைந்த ஹெட்லெம்ப்கள், பேனட் கீழே தடிமனான வரிசையை கொண்ட முக அமைப்பிலான தன்மையைப் பெற்றுள்ளது. கிரிலில் அமைந்துள்ள கிரோம் வெளிப்புற கோடுகள் மூலம் முன்பக்கத்தில் சரியான அளவிலான ஒளிர்வை பெற உதவுகிறது.

இந்த எலைட் ஐ20 காரில் கச்சிதமான ஸ்டைல் உடன் அமைந்த முன்பக்க பம்மரை பெற்று, காரின் முன்பக்கத்தின் கீழே நோக்கி மெல்லியதாக செல்கிறது. இன்டிகேட்டர் லைட்கள் வெறுமையான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு, ஹெட்லெம்ப் கிளெஸ்டருக்குள் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் வைக்கப்பட்டுள்ளது.

டோர் ஹேண்டில்களில் சற்று பெரிய அளவிலான கிரோம் அளிக்கப்பட்டு இருந்தாலும், இந்த அளவிலான கிரோமை இந்தியர்கள் விரும்புகிறார்கள்.16 இன்ச் அலாய் வீல்கள் இருப்பது எந்த வகையிலும் பின்னடைவாக அமையாது,மாறாக ஒரு வடிவமைப்பு திறனாக இருக்கும். சந்தையில் உள்ள தேர்வுகளை வைத்து பார்க்கும் போது, இதில் எதையோ இழந்தது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படாது.

பேலினோ அல்லது ஜாஸ் போன்ற கார்களைப் போல, இந்த எலைட் ஐ20 காரில் எந்தொருMPV-யை ஒத்த அதிக எடையை கொண்ட காரியங்கள் சேர்க்கப்படவில்லை. கருப்பு நிறத்திலான சி-பில்லர்கள் பக்கவாட்டில் மெலிந்து கொண்டே இறங்கி, ஷோல்டர் லைன் மற்றும் டோர் கிளாடிங் போன்றவற்றை போல செல்கிறது. ஹெட் மற்றும் டெயில் லெம்ப்கள் உடன் ஷோல்டர் லைன் எப்படி இணைக்கிறது என்பதை பார்க்க மிகவும் சிறப்பாக உள்ளது.

முன்பக்கத்தில் உள்ளது போன்ற மெலிந்த தன்மையை, பின்பக்கத்தில் காண முடிவதில்லை. ஆனால் பேலினோ காரை போல, தடித்த தன்மை கொண்டதாக இல்லை.LED தோற்றத்திலான டெயில் லைட்கள் குறிப்பாக இரவில் பார்க்க சிறப்பாக உள்ளது. மேலும் பின்பக்க பம்பரில் உள்ள லேசான கருப்பு கிளெட்டிங், இந்த காரின் பின்பக்க தோற்றத்தை மேம்படுத்துவதாக உள்ளது.

Exterior Comparison

Ford EcoSportHonda WRVMaruti Vitara Brezza
Length (mm)3998mm3999mm3995mm
Width (mm)1765mm1734mm1790mm
Height (mm)1647mm1601mm1640mm
Ground Clearance (mm)200mm188mm198mm
Wheel Base (mm)2519mm2555mm2500mm
Kerb Weight (kg)1268Kg1168kg1185kg

Boot Space Comparison

Maruti Vitara BrezzaHonda WRVFord EcoSport
Volume328-litres363 Litres352-litres
 

 

உள்ளமைப்பு

இந்த காரின் கேபின் இடவசதி தேவைக்கு ஏற்ப சிறப்பாக அமைந்து, சந்தையின் தற்போதைய தாராள தன்மைக்கு தகுந்த போட்டியாளராக உள்ளது. பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் தற்போது அதிகப்படியான தரத்தை எதிர்பார்க்கும் நிலையில், அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக எலைட் காரின் கேபின் அமைந்துள்ளது.

இந்த காரின் டேஸ்போர்டு மிகவும் கவர்ந்திழுக்கும் தன்மையோடு வடிவமைக்கப்பட்டு, தனித்தன்மையான வடிவில் அமைந்த ஏசி திறப்பிகள் மற்றும் எளிதில் பயன்படுத்த கூடிய வகையில் கன்ட்ரோல்களை கொண்ட கன்சோல் ஆகியவற்றை பெற்றுள்ளது. டேஸ்போர்டின் கீழ் பகுதி கருப்பு நிறத்தில் அமைந்துள்ள நிலையில், அதன் பகுதிக்கு மேல் பகுதி முழுமையாக பழுப்பு நிறத்தில் அமைந்துள்ளது.

இந்த காருக்குள் இருக்கும் வேறுபட்ட ஒரு அனுபவத்தை நாங்கள் மிகவும் ரசித்தோம். மேலும் இந்தியாவில் தற்போது பெரும்பாலான கார் தயாரிப்பாளர்களால் பின்பற்றப்படும் முறையே இதிலும் புகுத்தப்பட்டுள்ளது. சென்டர் ஏசி திறப்பிக்கு அப்படி கீழே, சென்டர் கன்சோலின் மேற்பகுதியில் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ஸ்கிரீன் ஒரு முக்கிய அம்சமாக அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதில் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும் வகையில், சற்று பெரிதாக அமைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இதற்கான கன்ட்ரோல்கள் அனைத்தும் டிஸ்ப்ளே சுற்றிலும் அமைந்து, கன்சோலின் பக்கவாட்டு பகுதியில் என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதிக்கான ஒரு பெரிய பட்டன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பில் ஒரு மேம்பட்டAVN (ஆடியோ விஷூவல் நேவிகேஷன்) அமைப்பு உடன் மேம்படுத்தப்பட்டு, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் அளிக்கப்படுகிறது.

கீழ் பகுதியில் உள்ள கிளைமேட் கன்ட்ரோல் கன்சோல், ஒரு மெலிந்த ஸ்கிரீன் உடன் நீல நிற ஒளிர்வு உடன் காணப்படுகிறது. கன்சோலின் கீழ் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய சேமிப்பு பகுதியில், பயணிகள் பயன்படுத்தும் போன்கள் மற்றும் மற்ற ஸ்பேர் பொருட்களை வைத்து கொள்ள முடியும். மேலும் இங்கு இரட்டை12V பவர் சாக்கெட்கள், ஒருUSB மற்றும் ஒருAUX போர்ட் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, காரில் செல்லும் பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் இதமாக மாற்றுகிறது.

இதில் உள்ள 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், லேதர் மூலம் மூடப்பட்டுள்ளதால், கேபின் அமைப்பில் சந்தையின் உயர்ந்த அனுபவத்தை பெறுகிறது.

இதில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரில், ஒரு அனாலாக் டச்சோமீட்டர் மற்றும் ஒரு ஸ்பீடோமீட்டர் உள்ளது. இவற்றில் எந்தொரு சூழ்நிலையிலும் அளவுகளை தெளிவாக காணும் வகையில், முட்கள் அனைத்தும் ஒளிர்வை கொண்டுள்ளன.

இந்த காரின் எல்லா டோர்களிலும் டோர் பாக்கெட்கள் உள்ளன. அந்த பாக்கெட்கள், எந்தொரு பொருட்களையும் உட்கொள்ள கூடிய வகையில் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளன என்பதை இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு காரியம் ஆகும்.

இதில் உள்ள ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ஹெட்ரெஸ்ட் ஆகியவை கூடுதல் இதமான அனுபவத்தை அளிக்கின்றன. மேலும் லும்பர் ஆதரவு மிகவும் அட்டகாசமாக உள்ளது. சீட் அப்ஹோல்டரி மூலம் கேபினுக்கு ஒரு பிரிமியம் அனுபவம் கிடைக்கிறது. இந்நிலையில் கேபினிக்கு கருப்பு மற்றும் பழுப்பு நிறத்திலான தையல், கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

மேற்கண்ட காரியங்களுடன் கியர் கினாப், பார்க்கிங் பிரேக் மற்றும் உட்புற டோர் ஹேண்டில் ஆகியவற்றில் மெட்டல் மேற்பூச்சு அளித்திருப்பது ஒரு கூடுதல் கவர்ச்சியாக அமைந்து, அதிக கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

 

செயல்பாடு

ீசல்:

உள்ளக மெக்கானிக்கல் தன்மையை பொறுத்த வரை, பழையஐ20யில் இருந்து எந்தொரு மாற்றத்தை அடையவில்லை. டீசல் பதிப்பிற்கு, அதே 1.4 லிட்டர்U2 CRDi என்ஜினை இந்த கார் பெற்று,1,396cc திறனை கொண்டுள்ளது. இந்த 16 வால்வு என்ஜின் மூலம்4,000rpm இல்90PS ஆற்றலும் 1,500rpm - 2,750rpm இடைப்பட்ட நிலையில்220Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இந்த என்ஜின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதாக நாங்கள் நினைக்கிறோம். முந்தையை பதிப்பை வைத்து பார்க்கும் போது, இது கூடுதல் ஆற்றலை வெளியீட்டையும், டர்போ லேக் குறைவாகவும் இருப்பதாக உணர்கிறோம். குறைந்த தர முடுக்குவிசையில் கூட, இந்த மூலம் நகர்புற சாலையில் சிறப்பான செயல்பாட்டை பெற முடிகிறது. இந்த என்ஜின் ஒரு 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைந்து செயல்படுவதில் எந்தொரு பிரச்சனையையும் காண முடிவதில்லை. ஏற்கனவே எதிர்பார்த்தது போல, உயர்ந்த கியர் குறைந்த ரிவ் இணைப்பு சிறப்பான செயல்பாட்டை அளிக்கிறத. குறிப்பாக, அதிக வேக அளவை மிக எளிதாக அடைய முடிகிறது. குரூசிங் செய்வதற்கு மிகவும் தகுந்த என்ஜினாக உள்ளது.

Performance Comparison (Diesel)

Hyundai Elite i20Maruti BalenoVolkswagen Polo
Power88.76bhp@4000rpm74bhp@4000rpm88.5bhp@4200rpm
Torque (Nm)224nm@1500-2750rpm190Nm@2000rpm230Nm@1500-2500rpm
Engine Displacement (cc)1396 cc1248 cc1498 cc
TransmissionManualManualManual
Top Speed (kmph)170 Kmph170 Kmph
0-100 Acceleration (sec)13.2 Seconds12.93 seconds
Kerb Weight (kg)-970kg1126kg
Fuel Efficiency (ARAI)22.54kmpl27.39kmpl20.14kmpl
Power Weight Ratio-76.28bhp/ton78.59bhp/ton
 

ெட்ரேல்:

பெட்ரோல் வகையை பொறுத்த வரை, இந்த காரில் ஒரு 1.2 லிட்டர் கப்பாVTVT என்ஜின் மூலம்1,197cc திறனை வெளியிடுகிறது.6,000rpm இல்83PS ஆற்றல் வெளியீட்டையும்4,000rpm இல்115Nm முடுக்குவிசையையும் அளிக்கிறது. குறிப்பாக உயர் வேகத்தில் இந்த என்ஜின் அதிகமாக செயல்படுவதாக எங்களுக்கு தோன்றுகிறது. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. இது மிகவும் மென்மையான என்ஜினாக இருந்து, நகர்புற சாலைகளில் மிகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஆனால் நெடுஞ்சாலைகளில் எடுத்து செல்லும் போது, அது திணறுகிறது. காரில் பயணிகளின் முழு கொள்ளளவை அடையும் பட்சத்தில், உங்கள் சுழல் உள்ளீடுகள் மற்றும் அதிவேக முந்தி செல்லுதல் மற்றும் கியர் குறைத்தல் போன்ற செய்கைகளுக்கு முன் கவனம் கொண்ட திட்டமிடல் இருக்க வேண்டும் என்பதை எப்போது நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இதன் கியர் லீவர் பயன்படுத்துவதற்கு நன்றாகவும், கியர் பற்களுக்கு சரியாக விழுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

Performance Comparison (Petrol)

Volkswagen PoloMaruti BalenoHyundai Elite i20
Power88.5bhp@4200rpm74bhp@4000rpm88.76bhp@4000rpm
Torque (Nm)230Nm@1500-2500rpm190Nm@2000rpm224nm@1500-2750rpm
Engine Displacement (cc)1498 cc1248 cc1396 cc
TransmissionManualManualManual
Top Speed (kmph)170 Kmph180 Kmph
0-100 Acceleration (sec)12.93 seconds13.57 Seconds
Kerb Weight (kg)1142kg975kg-
Fuel Efficiency (ARAI)20.14kmpl27.39kmpl22.54kmpl
Power Weight Ratio77.49bhp/ton75.89bhp/ton-

யணம் மற்றும் கையாளு திறன்:

 

எலைட்ஐ20 காரின் முந்தைய பதிப்பு உடன் ஒப்பிடும் போது, பயண தரம் மற்றும் இதமான தன்மையில் ஒரு படி முன்னேற்றம் தெரிகிறது. குண்டும் குழியும் உள்ள சாலைகளில் இந்த காரை எடுத்து செல்லும் போது, குறைந்த வேகத்தில் சென்று சிக்கி கொள்ளாத வரை, மிகவும் எளிதாக உள்ளது. இதன் சஸ்பென்ஸன் சிறப்பாக உள்ளதோடு, எந்தொரு சந்தர்ப்பத்திலும் துள்ளுவது இல்லை நகர்புற சாலைகளில் பயண வேகங்களில் ஸ்டீயரிங் வீல் மிகவும் லேசாக உள்ள நிலையில், வேகத்தை கூட்டும் தோறும் இதன் லேசான தன்மை மறைந்து கடினமாக மாறுகிறது. இது, கார் ஆர்வலர்களுக்கு விருப்பமான தன்மையாக உள்ளது.

காரின் வேகத்தை குறைக்கும் வகையில், முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகளும் பின்பக்கத்தில் டிரம்களும் அளிக்கப்பட்டு உள்ளன. முந்தைய மாடலில் எல்லா சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அமைப்பு மூலம் பிரேக்கிங் தன்மையில் அதிக உறுதியையையும், பிரேக்கிங்கில் பதட்டத்தை தவிர்ப்பதாகவும் அமைகிறது.

பாதுகாப்பு

இந்த காரில் பல கவர்ச்சிகரமான பாதுகாப்பு அம்சங்களைஹூண்டாய் நிறுவனம் நமக்கு அளித்துள்ளது. அதில் சில குறிப்பாக உயர் தர வகைகளுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

எல்லா வகைகளுக்கு பொதுவாக இரட்டை ஏர்பேக்குகள் அளிக்கப்பட்டு உள்ளது. இது உண்மையிலேயே ஒரு சிறந்த தன்மை ஆகும்.

இந்த காரின் உயர் வகைகளில் ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள், ஒரு பின்பக்க கேமரா, சென்ட்ரல் லாக்கிங், மற்றும் ஒரு எலெட்ரோகிரோபிக் பின்பக்க காட்சி மிரர் ஆகியவற்றை பெற்றுள்ளன. இது தவிர, ப்ரீடென்ஸர்கள் உடன் கூடிய சீட் பெல்ட்களின் பயனை முன்பக்க பயணிகள் பெற முடிகிறது. ஒரு கீலெஸ் என்ட்ரி சிஸ்டம் மற்றும் டைமர் உடன் கூடிய ஒரு பின்பக்க டிஃபோக்கர் ஆகியவை காணப்படுகின்றன. ஆம், இதில் ஒரு இம்மொபைலைஸரையும் பெற்றுள்ளது.

வகைகள்

இந்த காரில், இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா(ஓ) என்று 5 வகைகள் காணப்படுகின்றன. இதில் துவக்க வகையான இரா காரில் சென்ட்ரல் லாக்கிங், ஒரு ஸ்மார்ட் பெடல், இரட்டை ட்ரிப்மீட்டர், டிஜிட்டல் கடிகாரம், எரிபொருள் குறைவு எச்சரிப்பு, டோர் அஜார் வார்னிங் மற்றும் மாற்றி அமைக்கக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் ஆகியவை உள்ளன. அஸ்டா மற்றும் அஸ்டா (ஓ) ஆகிய வகைகளில், ஒரு முழுமையான ஆட்டோமெட்டிக் ஏர் கண்டீஷனிங் சிஸ்டம், ஒரு பின்பக்க வைப்பர் மற்றும் வாஷர், லக்கேஜ் லெம்ப், மின்னோட்ட முறையில் மடக்கக் கூடிய வெளிப்புற மிரர்கள், ஒரு பார்க்கிங் சென்ஸர் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோ அன்லாக் செயல்பாடு ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த காரில் உள்ள வகைகளில் அஸ்டா தான் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. ஆனால் ஸ்போர்ட்ஸ் வகையில், ஒரு சிறந்தVFM தேர்வாக அமைந்து, தேவைப்பட்டால் அம்சங்கள், பாதுகாப்பு, ஏற்றுக் கொள்ளக் கூடிய விலை ஆகிய அனைத்தும் சரிசமமாக அமைகிறது.

ஹூண்டாய் Elite i20 இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

 • இன்ஃபோடெயின்மெண்ட்: மேம்படுத்தப்பட்ட 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இசையை கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும் ஆர்க்ஏம்ஸ் சவுண்ட் உடன் கூடியதாக தற்போது வருகிறது.
 • ஹூண்டாய் ஐ20 காரில் முன்னால் பயன்படுத்தப்பட்ட அதே என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டாலும், கிடைக்கும் மைலேஜ்ஜில் 9 சதவீதம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 • இந்த எலைட்ஐ20 காரில் பின்பக்க ஆர்ம்ரெஸ்ட் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை, வழக்கமாக மிகவும் விலை உயர்ந்த சேடன்களில் மட்டுமே காண முடிகிறது.
 • டைனாமிக்ஸ் வழிகாட்டி உடன் கூடிய பின்பக்க பார்க்கிங் கேமரா, மிகவும் நெருக்கடியான பகுதியில் பார்க்கிங் செய்ய ஓட்டுநருக்கு பயனுள்ளதாக உள்ளது.
 • இந்த எலைட் ஐ20 காரில், ஹூண்டாய் ஆட்டோ லிங்க் அளிக்கப்படுகிறது. வாகனத்தின் நிலைப்பாடு மற்றும் ஓட்டுநர் தன்மையை ஆராயும் ரிமோட் அக்சிஸ் அம்சத்தை, பயனருக்கு அளிக்கிறது.

நாம் விரும்பாத விஷயங்கள்

 • பாதுகாப்பு: ஐசோபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள், உயர் தர வகையான அஸ்டா (ஓ) வகையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆனால் பேலினோ காரில், இது எல்லா வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது.
 • புஸ் பட்டன் ஸ்டார்ட், பின்பக்க டிஃபோக்கர் மற்றும் வைப்பர், சீட் பெல்ட்களின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி உள்ளிட்ட அம்சங்கள், உயர் தர வகையில் மட்டுமே அளிக்கப்படுகிறது.
 • இதுவரை எலைட் ஐ20 காரில்ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அம்சம் அளிக்கப்படவில்லை. ஆனால் இதன் பிரிவில் உள்ள எல்லா கார்களிலும் இந்த அம்சம் அளிக்கப்படுகிறது. இன்னும் தெளிவாக கூறினால், வோல்க்ஸ்வேகன் போலோ காரில் ஒரு இரட்டை கிளெட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அம்சத்தை பெற்றுள்ளது.

தனித்தன்மையான அம்சங்கள்

 • Pros & Cons of Hyundai Elite i20

  6 ஏர்பேக்குகள்– இந்த கார் உட்பட்டுள்ள பிரிவிலேயே 6 ஏர்பேக்குகள் அளிக்கும் ஒரே கார், எலைட் ஐ20 மட்டுமே. இதன்மூலம் இந்தியாவில் 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான விலையில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களிலேயே மிகவும் பாதுகாப்பான காராக தெரிகிறது.

 • Pros & Cons of Hyundai Elite i20

  இரட்டை டோன் வெளிப்புற அமைப்பியல்: இந்த எலைட் ஐ20 காரில் இரட்டை டோன் பெயிண்ட் தேர்வு அளிக்கிறது. இதன்மூலம் கார் கூட்டத்தில் இருந்து இந்த காரை தனியாக காட்டுகிறது. அதே நேரத்தில், அஸ்டா வகையில் இருக்கும் ஒரே காராக உள்ளது.

 • Pros & Cons of Hyundai Elite i20

  பின்பக்க ஏசி திறப்பிகள்– பின்பக்க ஏசி திறப்பியை கொண்ட ஒரே பிரிமியம் ஹேட்ச்பேக் காராக எலைட் ஐ20 காணப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பின்பக்கத்தில் உள்ள பயணிகளுக்கு இதமான அனுபவமாக அமைகிறது.

space Image

ஹூண்டாய் எலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்

4.6/5
அடிப்படையிலான1579 பயனர் மதிப்புரைகள்
Write a Review and Win
200 Paytm vouchers & an iPhone 7 every month!
Iphone
 • All (1579)
 • Looks (406)
 • Comfort (501)
 • Mileage (357)
 • Engine (286)
 • Interior (266)
 • Space (147)
 • Price (172)
 • More ...
 • நவீனமானது
 • பயனுள்ளது
 • VERIFIED
 • CRITICAL
 • Fantastic car.

  Awesome car with fantastic features like power steering, powerful engine, great average, low maintenance, and great infotainment system. The car comes with alloy wheels a...மேலும் படிக்க

  இதனால் nikhil
  On: Jan 26, 2020 | 60 Views
 • Great in performance.

  Its the best car in India for a lesser price, the car gives you better-built quality which Hyundai commits. This car has beaten all other cars in the quality of the mater...மேலும் படிக்க

  இதனால் vasu
  On: Jan 25, 2020 | 55 Views
 • Best Car.

   I love this car, first in its segment with six airbags, comfortable and luxurious feeling. Best in safety features ABS with EBD. Wireless phone charging, eco coating for...மேலும் படிக்க

  இதனால் jitender kumar
  On: Jan 26, 2020 | 42 Views
 • Poor Car.

   Bought i20 Asta in 2017 Aug. but totally disappointed with its milage, hardly 10-12 kmpl. Now in Jan .2020 air Conditioning system failed.

  இதனால் babu
  On: Jan 25, 2020 | 11 Views
 • Good Car.

  Comfortable car with good mileage.

  இதனால் ஆனந்த்
  On: Jan 27, 2020 | 5 Views
 • Elite i20 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

ஹூண்டாய் எலைட் ஐ20 வீடியோக்கள்

 • Toyota Glanza 2019 India vs Baleno, Elite i20, Jazz, Polo & Tata Altroz | CarDekho.com | #BuyOrHold
  7:27
  Toyota Glanza 2019 India vs Baleno, Elite i20, Jazz, Polo & Tata Altroz | CarDekho.com | #BuyOrHold
  Jun 06, 2019
 • 2018 Hyundai Elite i20 CVT (Automatic) Review In Hindi
  7:40
  2018 Hyundai Elite i20 CVT (Automatic) Review In Hindi
  Jun 08, 2018
 • 2018 Hyundai Elite i20 - Which Variant To Buy?
  8:34
  2018 Hyundai Elite i20 - Which Variant To Buy?
  Mar 29, 2018
 • 2018 Hyundai Elite i20 Facelift - 5 Things you need to know | Road Test Review
  4:44
  2018 Hyundai Elite i20 Facelift - 5 Things you need to know | Road Test Review
  Mar 20, 2018
 • 2018 Hyundai Elite i20 | Hits & Misses
  5:16
  2018 Hyundai Elite i20 | Hits & Misses
  Mar 17, 2018

ஹூண்டாய் ஐ20 நிறங்கள்

 • நட்சத்திர தூசி
  நட்சத்திர தூசி
 • உமிழும் சிவப்பு இரட்டை டோன்
  உமிழும் சிவப்பு இரட்டை டோன்
 • உமிழும் சிவப்பு
  உமிழும் சிவப்பு
 • பேஷன் ஆரஞ்சு
  பேஷன் ஆரஞ்சு
 • சூறாவளி வெள்ளி
  சூறாவளி வெள்ளி
 • மரியானா ப்ளூ
  மரியானா ப்ளூ
 • துருவ வெள்ளை இரட்டை டோன்
  துருவ வெள்ளை இரட்டை டோன்
 • துருவ வெள்ளை
  துருவ வெள்ளை

ஹூண்டாய் ஐ20 படங்கள்

 • படங்கள்
 • ஹூண்டாய் எலைட் ஐ20 front left side image
 • ஹூண்டாய் எலைட் ஐ20 side view (left) image
 • ஹூண்டாய் எலைட் ஐ20 rear left view image
 • ஹூண்டாய் எலைட் ஐ20 front view image
 • ஹூண்டாய் எலைட் ஐ20 rear view image
 • CarDekho Gaadi Store
 • ஹூண்டாய் எலைட் ஐ20 grille image
 • ஹூண்டாய் எலைட் ஐ20 front fog lamp image
space Image

ஹூண்டாய் எலைட் ஐ20 செய்திகள்

ஹூண்டாய் எலைட் ஐ20 ரோடு டெஸ்ட்

 • Hyundai Grand i10 Facelift Road-Test Review

  மாருதி சுஜூகி இன்கிஸ் போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக எப்படி முன்னெடுக்கப்படுகின்றது ? நாம் கண்டுபிடிக்கிறோம்.

  By SiddharthMay 10, 2019

Similar Hyundai Elite i20 பயன்படுத்தப்பட்ட கார்கள்

 • ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.2
  ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.2
  Rs4 லக்ஹ
  201476,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.4 சிஆர்டிஐ
  ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.4 சிஆர்டிஐ
  Rs4 லக்ஹ
  201463,237 Kmடீசல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் ஐ20 மேக்னா 1.2
  ஹூண்டாய் ஐ20 மேக்னா 1.2
  Rs4.25 லக்ஹ
  201527,012 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா 1.4 சிஆர்டிஐ
  ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா 1.4 சிஆர்டிஐ
  Rs4.25 லக்ஹ
  201486,000 Kmடீசல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் ஐ20 மேக்னா 1.4 சிஆர்டிஐ
  ஹூண்டாய் ஐ20 மேக்னா 1.4 சிஆர்டிஐ
  Rs4.5 லக்ஹ
  201434,050 Kmடீசல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா 1.4 சிஆர்டிஐ
  ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா 1.4 சிஆர்டிஐ
  Rs4.5 லக்ஹ
  201447,579 Kmடீசல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option 1.2
  ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option 1.2
  Rs4.5 லக்ஹ
  201530,001 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் ஐ20 மேக்னா 1.2
  ஹூண்டாய் ஐ20 மேக்னா 1.2
  Rs4.5 லக்ஹ
  201525,200 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க

Write your Comment மீது ஹூண்டாய் Elite i20

112 கருத்துகள்
1
D
deepak manhas
Jan 9, 2020 8:11:42 PM

Sir Asta m dual tone mil skta hai

  பதில்
  Write a Reply
  1
  U
  uday sarkar
  May 2, 2019 5:53:37 PM

  I Love my car I 20

   பதில்
   Write a Reply
   1
   R
   r a aasif marble
   Apr 8, 2019 11:53:14 AM

   MY DREAM CAR

    பதில்
    Write a Reply
    space Image
    space Image

    இந்தியா இல் ஹூண்டாய் Elite i20 இன் விலை

    சிட்டிஎக்ஸ்-ஷோரூம் விலை
    மும்பைRs. 5.59 - 9.41 லட்சம்
    பெங்களூர்Rs. 5.52 - 9.34 லட்சம்
    சென்னைRs. 5.59 - 9.41 லட்சம்
    ஐதராபாத்Rs. 5.59 - 9.41 லட்சம்
    புனேRs. 5.59 - 9.41 லட்சம்
    கொல்கத்தாRs. 5.52 - 9.34 லட்சம்
    கொச்சிRs. 5.6 - 9.44 லட்சம்
    உங்கள் நகரத்தை தேர்ந்தெடு

    ஹூண்டாய் கார்கள் டிரெண்டிங்

    • பிரபல
    • அடுத்து வருவது
    ×
    உங்கள் நகரம் எது?