2023 Hyundai i20 Sportz CVT வேரியன்ட்டை பற்றிய விவரங்களை 5 படங்களில் இங்கே பார்க்கலாம்
published on செப் 28, 2023 05:11 pm by shreyash for ஹூண்டாய் ஐ20
- 22 Views
- ஒரு கருத்தை எழுதுக
அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் i20 காரின் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது
ஹூண்டாய் i20 சமீபத்தில் சிறிய வடிவமைப்பு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது, மேலும் அதன் பவர்டிரெயின் ஆப்ஷன்களும் மாற்றப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட i20 கார்- எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா(O) ஆகிய 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது. ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் மிட்-ஸ்பெக் ஸ்போர்ட்ஸ் CVT ட்ரிம் என்ன வழங்குகிறது என்பதை இங்கே பார்ப்போம், ஏனெனில் இது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கான என்ட்ரி லெவல் ஆப்ஷனாகும். இதன் விலை இப்போது ரூ. 9.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
i20 ஸ்போர்ட்ஸ் காரின் முன்பக்கம் அதன் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களை போல இருக்கிறது, இதில் பாராமெட்ரிக் ஜுவல் பேட்டர்ன் கொண்ட கிரில் மற்றும் ஒரு முக்கிய ஸ்கிட் பிளேட் ஆகியவை உள்ளன. ஆனால் இது இன்னும் ஹாலோஜன் ஹெட்லைட் செட்டப்பை பெறுகிறது, மேலும் LED DRL -கள் பம்பரில் உள்ள ஏர் கர்ட்டெயின்களுக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளன. ஹையர் ஸ்பெக் ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (O) வேரியன்ட்களில், ஒருங்கிணைந்த LED DRL -களுடன் LED ஹெட்லைட்டுகள் கிடைக்கும்.
இதையும் பாருங்கள்: ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் காஸ்பர் இடையே 5 வித்தியாசங்கள்
முன்பக்கத்தில் நகரும் போது, இது பாடி கலர் கொண்ட கதவு கைப்பிடிகள் மற்றும் ORVM -களை பெறுகிறது, வெளிப்புற கண்ணாடிகளில் சைடு இன்டிகேட்டர்கள் உள்ளன. டாப்-ஸ்பெக் ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (O) கார் வேரியன்ட்களில் வழங்கப்படும் டைமண்ட் கட் அலாய் வீல்களை போலல்லாமல், ஸ்டைலிஸ்டு 16 இன்ச் ஸ்டீல் சக்கரங்களுடன் வருகிறது. மேலும், இந்த ஸ்போர்ட்ஸ் ட்ரிமின் டூயல்-டோன் பதிப்பை நீங்கள் தேர்வு செய்தால், ORVMகள் கருப்பு நிறமாக மாறும். டாப்-ஸ்பெக் i20 -ன் மோனோடோன் பதிப்புகள் குரோம் ஃபினிஷ்டு டோர் ஹேண்டில்களை பெறுகின்றன.
பின்புறத்தில், இந்த i20 ஸ்போர்ட்ஸ் மாடலில் Z-வடிவ LED டெயில் விளக்குகள் உள்ளன, அவை குரோம் அலங்காரம், பின்புற பம்பரில் சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டெனா ஆகியவற்றால் இணைக்கப்பட்டுள்ளன. இது பின்புற டிஃபோகரையும் பெறுகிறது, ஆனால் பின்புற வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவை கொடுக்கப்படவில்லை. இவை தவிர, இது i20 -யின் ,சிறப்பாகப் பொருத்தப்பட்ட பதிப்புகளைப் போலவே தோற்றமளிக்கிறது.
உள்ளே, i20 ஸ்போர்ட்ஸ் காரின் உட்புறத்தில் டூயல் டோன் பிளாக் மற்றும் சாம்பல் நிற கேபின் மற்றும் தோலினால் ஆன இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இது சரிசெய்யக்கூடிய முன்பக்க ஹெட்ரெஸ்ட்களையும் கொண்டுள்ளது, மேலும் ஓட்டுநர் இருக்கையின் உயரத்தை சரிசெய்யலாம். அம்சங்களை பொறுத்தவரை, i20 -யின் இந்த வேரியன்ட் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஆதரிக்கும் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் AC, க்ரூஸ் கன்ட்ரோல் , முன்பக்கத்தில் டைப்-C USB சார்ஜர் மற்றும் சக்திவாய்ந்த ORVM ஆகியவற்றை பெற்றுள்ளது. ஆனால் பிரீமியம் 7-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டத்துக்கு பதிலாக, இது 2 ட்வீட்டர்களுடன் பேசிக் 4-ஸ்பீக்கர் ஆடியோ செட்டப்பை பெறுகிறது.
i20 காரின் மிட்-ஸ்பெக் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டில் பின்புற AC வென்ட்கள் மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் போன்ற வசதிகள் உள்ளன. பின்புற பயணிகளுக்கும் டைப்-C USB போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள்(ஸ்டாண்டர்டு), EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்டிரெயின்கள் விவரம்
ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (83PS/115Nm) மட்டுமே வருகிறது. மிட்-ஸ்பெக் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டில், இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. CVT மாடல்களை பொறுத்தவரை, ஆற்றல் வெளியீடு 88PS ஆக அதிகரிக்கிறது, மேலும் இது 'நார்மல்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ்' டிரைவிங் மோடுகளையும் பெறுகிறது.
விலை & போட்டியாளர்கள்
ஹீண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் கார்களின் விலை ரூ. 6.99 லட்சம் முதல் ரூ. 11.01 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம் டெல்லி) இருக்கும். இது டாடா ஆல்ட்ரோஸ், மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா கார்களுக்கு போட்டியாக இருக்கும். i20 ஃபேஸ்லிஃப்ட் காரின் லோயர்-ஸ்பெக் மேக்னா வேரியன்ட்டுக்கான எங்கள் படத்தொகுப்பை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும் படிக்க: i20 ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful