• English
  • Login / Register

7 படங்களில் மாருதி பிரெஸ்ஸா -வின் பிளாக் எடிஷனின் விரிவான விவரங்கள்

published on மார்ச் 27, 2023 12:32 pm by shreyash for மாருதி brezza

  • 52 Views
  • ஒரு கருத்தை எழுதுக

சப்காம்பாக்ட் SUV -யின் புதிய பிளாக் எடிஷன் இப்போது  டீலர்ஷிப்புகளை அடைந்துவிட்டது.

Maruti Brezza Black Edition

மாருதி தனது அரெனா கார் வரிசைகள்  முழுவதும் பிளாக் எடிஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது (ஆல்டோ 800 மற்றும் ஈகோ தவிர்த்து), இவை "பேர்ல் மிட்நைட் பிளாக்" வெளிப்புற கலரில் வருகின்றன. பிரெஸ்ஸாவைப் பொறுத்தவரை, இந்த கலர் ஆப்ஷன் கூடுதலான விலை இல்லாமல் ZXi மற்றும் ZXi+ கார்வகைகளில் மட்டுமே கிடைக்கும் என்று மாருதி கூறுகிறது.

பிரெஸ்ஸாவின் பிளாக் பதிப்பின் கார்கள்  ஏற்கனவே டீலர்ஷிப்களை அடைந்துவிட்டதை நாங்கள் கண்டறிந்துள்ளோம், மேலும் இந்த புதிய கலர்  ஆப்ஷன்களைப்  பற்றிய உங்கள் முதல் பார்வை இதோ:

Maruti Brezza Black Edition

இது ப்ரெஸ்ஸாவின் ZXi டிரிம் ஆகும், இதில் டூயல்-LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ஃப்ளோட்டிங் LED டே டைம் ரன்னிங் விளக்குகள் உள்ளன. கறுப்பு நிற கிரில் மற்றும் முன்பக்க பம்பரில் சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளது. முதன்மையான மாடல்களில் இருந்து இது இரண்டாவதாக இருந்தாலும், ஃபாக் லைட்டுகள் இதில் இல்லை.

Maruti Brezza Black Edition Alloys

பிரெஸ்ஸா ஏற்கனவே அதன் டாப் வகைகளில் பிளாக்-அவுட் 16-அங்குல அலாய் வீல்களுடன் வருகிறது. கருப்பு கிளாடிங் மற்றும் சைடு பாடி மோல்டிங்குடன் புதிய பிளாக் எடிஷனின் தோற்றத்தை உண்மையாகவே அழகைக் கூட்டுகின்றன.

மேலும் படிக்க: ரூ.9.14 இலட்சத்தில் மாருதி பிரெஸ்ஸா CNG அறிமுகப்படுத்தப்பட்டது 

Maruti Brezza Black Edition Alloys

பிரெஸ்ஸாவின் பிளாக் எடிஷன் இன்னும் பின்புறத்தில் சில்வர் ஸ்கிட் பிளேட்டைப் பெறுகிறது. டெயில்லேம்ப்களைச் சுற்றியுள்ள கறுப்புக் கோடுகள் இங்கே அடர்த்தியாக அழகைக் கூட்டுகின்றன.

Maruti Brezza Interior

இந்த பிளாக் எடிஷன் மாருதி சப்காம்பாக்ட் SUV -யின் உட்புறம் மாற்றப்படவில்லை. வழக்கமானகார்களைப் போலவே இது இன்னும் ட்யூயல்-டோன் உட்புறத்தையே பெறுகிறது. இங்கு காணப்படும் ZXi கார் வேரியண்ட்சிறிய செவன் இன்ச் ஸ்மார்ட்பிளே புரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுகிறது. இது புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாடு, ஆட்டோமெட்டிக் ஏர் கண்டிஷனிங், குரூஸ் கன்ட்ரோல் மற்றும் டிஜிட்டல் TFT MID ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

Maruti Brezza Rear Seats

பிளாக் எடிஷன் பதிப்பு  பிரெஸ்ஸா -வின் அப்ஹோல்ஸ்டரியில் எந்த மாற்றமும் இல்லை. 

மேலும் படிக்க: மாருதி பிரெஸ்ஸா vs கிராண்ட் விட்டாரா: எந்த CNG SUV அதிக எரிபொருள் சிக்கனத்தைக் கொண்டது?

Maruti Brezza Black Edition Engine Bay

புதிய பிளாக் எடிஷன் பிரெஸ்ஸா எந்த வித இயந்திர மாற்றங்களையும் கொண்டிருக்கவில்லை. இது 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது (103PS/137Nm), ஐந்து-வேக மேனுவல் அல்லது நான்கு-வேக ஆட்டோமெட்டிக் தேர்வுகளுடன்  இணைக்கப்பட்டுள்ளது. 88 PS மற்றும் 121.5Nm இன் குறைந்த வெளியீட்டுடன் அதே இன்ஜினை சப் காம்பாக்ட்  SUV CNG கார்கள் பெற்றுள்ளன, ஐந்து-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் அவை இணைக்கப்பட்டுள்ளன.

 

விலைகள் & போட்டியாளர்கள்

பிரெஸ்ஸாவின் பிளாக் எடிஷனுக்கு எந்த ப்ரீமியமும் இல்லை  மற்றும் அதன் வழக்கமான வண்ண வகைகளின் விலைகளுக்கு ஒத்த விலையில் வழங்கப்படுகிறது. கருப்பு பதிப்பை அடிப்படையாகக் கொண்ட ZXi மற்றும் ZXi+ கார் வகைகளுக்கான விலைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

வேரியண்ட்


விலை 

ZXi


ரூ. 10.95 இலட்சம்

ZXi CNG MT


ரூ. 11.90 இலட்சம்

ZXi+ 


ரூ. 12.38 இலட்சம்

ZXi AT


ரூ. 12.45 இலட்சம்

ZXi+ AT


ரூ. 13.88 இலட்சம்

அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள்.

டாடா நெக்ஸான் ,கியா சோனெட்,ஹீண்டாய் வென்யு ,ரெனால்ட் கைகர்,நிஸான் மேக்னைட் மற்றும் மஹிந்திரா XUV300 போன்றவற்றுடன் மாருதி பிரெஸ்ஸா போட்டியிடுகிறது. பிரெஸ்ஸாவின் பிளாக் எடிஷன்,  டாடா நெக்ஸானின் டார்க் எடிஷனுக்கு நேரடி போட்டியாக உள்ளது. இதற்கிடையில், வரையறுக்கப்பட்ட ரன் X-Line வேரியண்ட்களில்  சோனெட்  மேட் கிரே ஃபினிஷைப்  பெறுகிறது.
மேலும் படிக்கவும்: பிரெஸ்ஸா ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Maruti brezza

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • M ஜி Majestor
    M ஜி Majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience