Maruti Baleno Regal பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது
published on அக்டோபர் 15, 2024 06:11 pm by dipan for மாருதி பாலினோ
- 60 Views
- ஒரு கருத்தை எழுதுக
பலேனோ ரீகல் எடிஷன், ஹேட்ச்பேக்கின் அனைத்து வேரியன்ட்களிலும் கூடுதல் விலை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கிடைக்கும்.
-
லிமிடெட் எடிஷனின் தொகுப்பின் ஒரு பகுதியாக ஆட்-ஆன் பாகங்கள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
-
முன் மற்றும் பின்புற லிப் ஸ்பாய்லர்கள், டூயல்-டோன் சீட் கவர்கள் மற்றும் ஒரு வாக்குவம் கிளீனர் ஆகியவை இதில் அடக்கம் .
-
பலேனோவில் 9-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி மற்றும் 6 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு தொகுப்பும் உள்ளது.
-
இன்ஜின் ஆப்ஷன்களில் 1.2-லிட்டர் பெட்ரோல் (90 PS/113 Nm) மற்றும் CNG வேரியன்ட் (77.5 PS/98.5 Nm) ஆகியவை அடங்கும்.
-
பலேனோவின் விலை ரூ.6.66 லட்சம் முதல் ரூ.9.83 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது.
மாருதி பலேனோ ரீகல் எடிஷன் ஹேட்ச்பேக்கின் அனைத்து வேரியன்ட்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த வேரியன்ட்களில் ரூ. 60,000க்கும் அதிகமான மதிப்புள்ள உபகரணங்களை கூடுதல் விலை இல்லாமல் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். இது கூடுதல் செலவில்லாமல் பலேனோவில் முன் லிப் ஸ்பாய்லர், வாக்யூம் கிளீனர் மற்றும் ஸ்டீயரிங் வீல் கவர் போன்ற வெளிப்புற மற்றும் உட்புற பாகங்கள் ஆகியவை கிடைக்கின்றன. பலேனோவின் புதிய ரீகல் பதிப்பில் கிடைக்கும் அனைத்து ஆக்சஸெரீகளையும் இங்கே பார்ப்போம்:
மாருதி பலேனோ ரீகல் பதிப்பு: இலவச ஆக்ஸசரீஸ்கள்
ஆக்ஸசரீஸ்களின் பெயர் |
சிக்மா |
டெல்டா |
ஜீட்டா |
ஆல்பா |
ஃபிரன்ட் லிப் ஸ்பாய்லர் |
✅ |
✅ |
✅ |
✅ |
ரியர் லிப் ஸ்பாய்லர் |
✅ |
✅ |
✅ |
✅ |
டூயல் டோன் சீட் கவர் |
✅ |
✅ |
✅ |
✅ |
ஆல் கிளைமேட் 3D மேட்ஸ் |
✅ |
✅ |
✅ |
✅ |
பாடி சைடு மோல்டிங் |
✅ |
✅ |
✅ |
✅ |
மட் ஃபிளாப்ஸ் |
✅ |
✅ |
✅ |
✅ |
3டி பூட் மேட் |
✅ |
❌ |
✅ |
✅ |
குரோம் மேல் கிரில் கார்னிஷ் |
✅ |
✅ |
✅ |
✅ |
பின்புற கார்னிஷ் |
✅ |
✅ |
✅ |
✅ |
இன்ட்டீரியர் ஸ்டைலிங் கிட் |
✅ |
✅ |
✅ |
✅ |
குரோம் ரியர் டோர் கார்னிஷ் |
✅ |
✅ |
✅ |
✅ |
வாக்குவம் கிளீனர் |
✅ |
✅ |
✅ |
✅ |
குரோம் ஃபாக் லைட் கார்னிஷ் |
❌ |
❌ |
✅ |
✅ |
ஃபாக் லைட்ஸ் |
❌ |
✅ |
(ஏற்கனவே உள்ளது) |
(ஏற்கனவே உள்ளது) |
நெக்ஸா பிராண்டிங் கொண்ட கருப்பு குஷன் |
✅ |
✅ |
✅ |
✅ |
லோகோ ப்ரொஜெக்டர் லைட் |
❌ |
❌ |
✅ |
✅ |
பாடி கவர் |
✅ |
✅ |
✅ |
✅ |
டோர் வைஸர் |
✅ |
✅ |
✅ |
✅ |
டோர் விண்டோ புரடெக்டர் |
✅ |
✅ |
✅ |
✅ |
ஸ்டீயரிங் கவர் |
✅ |
✅ |
✅ |
❌ |
அனைத்து கதவுகளுக்கும் ஜன்னல் கவர் |
✅ |
❌ |
❌ |
✅ |
பின்புற பார்சல் டிரே |
✅ |
❌ |
❌ |
❌ |
டயர் இன்ஃப்ளேட்டர் (டிஜிட்டல் காட்சியுடன்) |
✅ |
❌ |
❌ |
❌ |
பெர்ஃபியூம் ஜெல் |
✅ |
❌ |
❌ |
❌ |
சென்ட்ரல் குரோம் கார்னிஷ் |
✅ |
✅ |
❌ |
❌ |
குரோம் டோர் ஹேண்டில்கள் (1 ஹோல் உடன்) |
✅ |
❌ |
❌ |
❌ |
மொத்த செலவு |
ரூ.60,199 |
ரூ.49,990 |
ரூ.50,428 |
ரூ.45,829 |
மாருதி பலேனோ: வசதிகள் மற்றும் பாதுகாப்பு
பிரிமியம் ஹேட்ச்பேக்கின் விஷயங்களில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 9 இன்ச் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி ஆகியவை இதன் இந்த காரில் உள்ள வசதிகளில் அடங்கும்.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது அனைத்து பயணிகளுக்கும் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மாருதி பலேனோ: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
மாருதி பலேனோ பெட்ரோல்-பவர்டு மற்றும் CNG-இயங்கும் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2-லிட்டர் N/A பெட்ரோல் |
1.2-லிட்டர் N/A பெட்ரோல்+CNG |
பவர் |
90 PS |
77.5 PS |
டார்க் |
113 Nm |
98.5 PS |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT* |
5-ஸ்பீடு MT |
கிளைம்டு மைலேஜ் |
22.35 கிமீ/லி (MT), 22.94 கிமீ/லி (AMT) |
30.61 கிமீ/கிலோ |
*AMT = ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்
மேலும் படிக்க: Maruti Grand Vitara Dominion எடிஷன் அறிமுகமானது
மாருதி பலேனோ: விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி பலேனோவின் விலை ரூ.6.66 லட்சம் முதல் ரூ.9.83 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை இருக்கிறது. இது ஹூண்டாய் i20, டாடா ஆல்ட்ரோஸ், டொயோட்டா கிளான்ஸா போன்ற மற்ற ஹேட்ச்பேக்குகளுக்கு போட்டியாக உள்ளது. மற்றும் சிட்ரோன் சி3 கிராஸ் ஓவர் உடனும் போட்டியிடுகிறது.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: பலேனோ AMT