Maruti Grand Vitara Dominion எடிஷன் அறிமுகமானது
published on அக்டோபர் 08, 2024 06:29 pm by dipan for மாருதி கிராண்டு விட்டாரா
- 84 Views
- ஒரு கருத்தை எழுதுக
டொமினியன் பதிப்பு கிராண்ட் விட்டாராவின் டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுடன் கிடைக்கிறது.
-
மாருதி கிராண்ட் விட்டாரா டொமினியன் எடிஷன், வேரியன்ட்ட்டுகளுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புற ஆக்ஸசரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
-
வெளிப்புறத்தில் சைடு, டோர் வைசர் மற்றும் முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட் போன்றவற்றை கொண்டுள்ளது.
-
உட்புறத்தில் 3D மேட்கள், சீட் கவர்கள் மற்றும் டாஷ்போர்டு டிரிம் ஆகியவை உள்ளன.
-
டொமினியன் எடிஷன் -க்கான ஆஃபர் அக்டோபர் 2024 இறுதி வரை கிடைக்கும்.
மாருதி கிராண்ட் விட்டாரா பண்டிகைக் காலத்திற்கான புதிய டொமினியன் எடிஷனை பெற்றுள்ளது. இந்த லிமிடெட் ரன் எடிஷன் வெளிப்புற மற்றும் உட்புறம் ஆகியற்றில் பலவிதமான ஆக்ஸசரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஆல்பா, ஸீட்டா மற்றும் டெல்டா வேரியன்ட்களுடன் கிடைக்கிறது. கிராண்ட் விட்டாரா டொமினியன் எடிஷன், வழக்கமான வேரியன்ட்களை விட ரூ.52,699 வரை விலை அதிகம். கூடுதலான ஆக்ஸசரீஸ்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்:
மாருதி கிராண்ட் விட்டாரா டொமினியன் எடிஷன்: ஆக்ஸசரீஸ்கள்
ஆக்ஸசரீஸ்கள் |
டெல்டா |
ஜீட்டா |
ஆல்பா |
குரோம் முன் பம்பர் லிப் |
✅ |
✅ |
✅ |
முன்பக்க ஸ்கிட் பிளேட் |
✅ |
✅ |
✅ |
பிளாக் மற்றும் குரோம் ரியர் ஸ்கிட் பிளேட் |
✅ |
✅ |
✅ |
பாடி கவர் |
✅ |
✅ |
✅ |
கார் கேர் கிட் |
✅ |
✅ |
✅ |
டோர் வைஸர் |
✅ |
✅ |
✅ |
பிளாக் ORVM அலங்காரம் |
✅ |
✅ |
✅ |
பிளாக் ஹெட்லைட் கார்னிஷ் |
✅ |
✅ |
✅ |
குரோம் சைடு மோல்டிங் |
✅ |
✅ |
✅ |
பிளாக் குரோம் டெயில் லைட் அலங்காரம் |
✅ |
✅ |
✅ |
ஆல்-லெதர் வானிலை 3D மேட்ஸ் |
✅ |
✅ |
✅ |
டேஷ்போர்டில் வுடன் கார்னிஷ் |
✅ |
✅ |
✅ |
‘நெக்ஸா’ முத்திரையுடன் கூடிய குஷன் |
✅ |
✅ |
✅ |
டோர் ஜன்னல் புரடெக்டர் |
✅ |
✅ |
✅ |
பூட் லோட் லிப் புரடெக்ஷன் சில் |
✅ |
✅ |
✅ |
3டி போட் மேட் |
✅ |
✅ |
✅ |
சைடுஸ்டெப் |
✅ |
❌ |
❌ |
பிரெளவுன் கலர் சீட் கவர் |
❌ |
✅ |
❌ |
டூயல் டோன் சீட் கவர் |
✅ |
❌ |
❌ |
மொத்த விலை |
ரூ.48,599 |
ரூ.49,999 |
ரூ.52,699 |
டொமினியன் பதிப்பில் பக்கவாட்டு, டோர் வைசர்கள் மற்றும் முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள் போன்ற வெளிப்புற ஆக்ஸசரீஸ்கள் மற்றும் 3D பாய்கள், சீட் கவர்கள் மற்றும் குஷன்கள் போன்ற உட்புற ஆக்ஸசரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆக்ஸசரீஸ்கள் தனித்தனியாகவும் வாங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மாருதி, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா ஆகியவை 2024 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான கார் பிராண்டுகளாகும்.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை வயர்லெஸ் சப்போர்ட் செய்யும் 9 இன்ச் டச் ஸ்கிரீன், 6-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் சீட்கள் , பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைப் பெறுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் ஆகியவை உள்ளன.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
மாருதி கிராண்ட் விட்டாரா ஒரு மைல்டு ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் உள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் |
1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் |
1.5 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி |
பவர் |
103PS |
116 PS (இன்டெஇரேட்டட) |
88 PS |
டார்க் |
137 Nm |
122 Nm |
121.5 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
e-CVT (சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ்) |
5-ஸ்பீடு MT |
டிரைவ்டிரெய்ன் |
FWD, AWD (MT உடன் மட்டும்) |
FWD |
FWD |
மேலும் படிக்க: மாருதி இந்த பண்டிகைக் காலத்தில் அரீனா கார்களுக்கு ரூ.62,000க்கு மேல் தள்ளுபடி கிடைக்கும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி கிராண்ட் விட்டாராவின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.20.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. இது போன்ற மற்ற காம்பாக்ட் எஸ்யூவி -களான ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது. இது டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் ஆகிய கார்களுக்கு ஒரு ஸ்டைலான எஸ்யூவி-கூபேக்கு மாற்றாகக் இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மாருதி கிராண்ட் விட்டாரா ஆன் ரோடு விலை