விற்பனையில் 2.5 லட்சம் மைல்கல்லை கடந்தது Mahindra XUV700
எக்ஸ்யூவி700 இந்த விற்பனை மைல்கல்லை அடைய 4 ஆண்டுகளுக்கும் குறைவாகவே எடுத்துள்ளது.
2021 ஆண்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 அறிமுகமானது. இது அறிமுகமானதில் இருந்தே மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இப்போது இதன் விற்பனை மைல்கல் ஆனது 2.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக வரையிலான எண்ணிக்கையை எட்ட 7 மாதங்களுக்கு மேல் ஆனது. 2024 ஜூன் மாதத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையையும், 2023 ஜூலையில் 1 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையையும் பெற்றது.
எக்ஸ்யூவி700 வாடிக்கையாளர்கள் டர்போ-பெட்ரோல் இன்ஜினை விட டீசல் வேரியன்ட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 2025 ஜனவரி -யில் மொத்த விற்பனையான 8,399 யூனிட்களில், 74 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் டீசல் இன்ஜினை தேர்ந்தெடுத்தனர். இந்த போக்கு 2025 பிப்ரவரி -யிலும் தொடர்ந்தது. மொத்த விற்பனையான 5,560 யூனிட்களில் டீசல் 65 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. மேலும் இந்த 2024-25 நிதியாண்டில், கிட்டத்தட்ட 75 சதவீத வாடிக்கையாளர்கள் டீசல் இன்ஜினையே தேர்ந்தெடுத்துள்ளனர்.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 -ன் இன்ஜின் ஆப்ஷன்களை இங்கே பார்ப்போம்:
மஹிந்திரா எக்ஸ்யூவி700: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
மஹிந்திரா எக்ஸ்யூவி700 இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் வருகிறது: 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின். விரிவான விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
இன்ஜின் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
200 PS |
185 PS வரை |
டார்க் |
380 Nm |
450 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT* |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன்^ |
FWD |
FWD/AWD |
*AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ்
^FWD = ஃபிரன்ட்-வீல் டிரைவ்; AWD = ஆல்-வீல் டிரைவ்
மேலும் படிக்க: வெளியானது Mahindra XUV700 -யின் எபோனி எடிஷன்
மஹிந்திரா எக்ஸ்யூவி700: வசதி மற்றும் பாதுகாப்பு
மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆனது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 6-வே பவர் டிரைவர் இருக்கை மற்றும் 12-ஸ்பீக்கர் சோனி சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகிய வசதிகளும் உள்ளன.
இதன் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ISOFIX சைல்டு சீட் ஏங்கரேஜ்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். டாப்-எண்ட் வேரியன்ட்டில் அட்டானம்ஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன்-கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் அமைப்புகளுடன் (ADAS) வருகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி700: விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா எக்ஸ்யூவி700 விலை ரூ. 13.99 லட்சம் முதல் ரூ. 25.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது. இதன் 6- மற்றும் 7-சீட்டர் பதிப்புகள் டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் போட்டிக்கு போட்டியாக உள்ளன. 5 இருக்கைகள் கொண்ட பதிப்பு டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் மற்றும் சிறிய எஸ்யூவி -களான ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்றற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.