Mahindra XUV400 EV: இப்போது 5 புதிய பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது
இந்த அம்சங்கள் இப்போது ரூ.19.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கும் டாப்-ஸ்பெக் EL ட்ரிம் வரை மட்டுமே கொடுக்கபட்டுள்ளது.
மஹிந்திரா XUV300 SUV -யின் எலெக்ட்ரிக் வெர்ஷனான மஹிந்திரா XUV400 EV கார் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஆட்டோ-டிம்மிங் IRVM மற்றும் முன்பக்க ஃபாக் லைட்டுகள் உள்ளிட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் டாப்-ஸ்பெக் EL வேரியன்ட்டில் ஐந்து புதிய பாதுகாப்பு அம்சங்களை கார் தயாரிப்பு நிறுவனம் சேர்த்துள்ளது.
Prices
விலைகள்
வேரியன்ட் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
டாப்-ஸ்பெக் EL ட்ரிம் மட்டுமே இந்த கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது, இது ரூ. 20,000 பிரீமியம் பெறுகிறது. பேஸ்-ஸ்பெக் EC ட்ரிம்மின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
கூடுதல் அம்சங்கள்
ஐந்து புதிய பாதுகாப்பு அம்சங்களைத் தவிர, XUV400 EV இப்போது இரண்டு ட்வீட்டர்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வசதிக்காக பூட் லேம்ப் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்கவும்: ஆகஸ்ட் 15 நிகழ்வில் களமிறங்கும் எலெக்ட்ரிக் மஹிந்திரா தார் கான்செப்ட்
இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி -யில் ஏற்கனவே 7 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, எலக்ட்ரிக் சன்ரூஃப், அதிகபட்சம் 6 ஏர்பேக்குகள், ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் ரியர்வியூ கேமரா வழங்கப்பட்டுள்ளது.
அதே பவர்டிரெயின்
இதில் எந்த மாற்றமும் இல்லை. இது இன்னமும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது: 34.5kWh மற்றும் 39.4kWh இரண்டு பேட்டரி பேக்குகளும் 150PS மற்றும் 310Nm டார்க் திறனை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் முறையே 375 கிமீ மற்றும் 456 கிமீ பயணதூர ரேஞ்ச் -ஐ கொடுக்கும்.
போட்டியாளர்கள்
XUV400 EV இப்போது ரூ.15.99 லட்சம் முதல் ரூ.19.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இது டாடா நெக்ஸான் EV பிரைம் மற்றும் டாடா நெக்ஸான் EV மேக்ஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது, அதே நேரத்தில் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் MG ZS EVக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்கவும்: மஹிந்திரா XUV400 EV ஆட்டோமெட்டிக்