• English
  • Login / Register

Mahindra XUV 3XO (XUV300 ஃபேஸ்லிஃப்ட்) காரின் மற்றொரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது, பனோரமிக் சன்ரூஃப் இருப்பது உறுதியாகியுள்ளது

modified on ஏப்ரல் 08, 2024 07:44 pm by rohit for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO

  • 48 Views
  • ஒரு கருத்தை எழுதுக

XUV 3XO கார் XUV400 உடன் பகிர்ந்து கொள்ளும் புதிய டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் உட்பட  சில வசதிகளை சமீபத்திய டீசரில் பார்க்க முடிகின்றது.

Mahindra XUV 3XO cabin and premium features teased

  • ஃபேஸ்லிஃப்ட் மஹிந்திரா XUV300 -க்கு மஹிந்திரா XUV 3XO என இப்போது பெயரிடப்பட்டுள்ளது. 

  • சமீபத்திய டீசர் புதிய பெய்ஜ் அப்ஹோல்ஸ்டரி மற்றும் புதிய வடிவிலான கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை இந்த காரில் இருப்பதை காட்டுகிறது.

  • இது இந்த பிரிவின் முதலாவதாக கொடுக்கப்படவுள்ள பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஃப்ரீ ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் ஆகியவற்றையும் காட்டுகிறது.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை உள்ளன.

  • இப்போதுள்ள XUV300 காரில் கொடுக்கப்படுகின்ற பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இதிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • XUV 3XO ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. ஆரம்ப விலை ரூ 9 லட்சம் முதல் இருக்கலாம் (எக்ஸ்-ஷோரூம்). இது விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்லிப்டட் மஹிந்திரா XUV300 இப்போது XUV 3XO என்று அழைக்கப்படுகிறது. ஏற்கெனவே ஒரு டீசர் வெளியாகியிருந்த நிலையில் இப்போது மற்றொரு டீசரும் வெளியாகியுள்ளது. இது காரின் உட்புறம் மற்றும் பிரீமியம் வசதிகளை பற்றிய சில விவரங்களை நமக்கு வழங்குகிறது. இந்த அப்டேட்டட் எஸ்யூவியை மஹிந்திரா ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகப்படுத்தும்.

IFrameடீசரில் தெரிய வந்த கேபின் மற்றும் வசதிகள்

Mahindra 3XO panoramic sunroof teased

வீடியோவில் காணப்படுவது போல் XUV 3XO -ல் வழங்கப்படும் மிகப்பெரிய புதிய வசதி இந்த பிரிவில் முதலாவதாக கொடுக்கப்படவுள்ள பனோரமிக் சன்ரூஃப் ஆகும். டீசர் புதிய ஃப்ரீ-ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் (XUV400 இலிருந்து 10.25-இன்ச் யூனிட்) மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் பேனலையும் காட்டுகிறது.

Mahindra 3XO new free-floating touchscreen teased
Mahindra 3XO rear seats teased

புதிய வடிவிலான சென்ட்ரல் ஏசி வென்ட்கள் மற்றும் புதிய வடிவிலான பெய்ஜ் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றையும் இந்த காரில் பார்க்க முடிகின்றது. மஹிந்திரா XUV 3XO -க்கு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 3-பாயின்ட் சீட் பெல்ட்கள், பின்புற மையத்தில் இருப்பவர்கள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் கிடைக்கும்.

XUV 3XO கார் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வென்ட்லேட்டட் முன் இருக்கைகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை மஹிந்திரா இதை 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களுடன் (ADAS) கொடுக்கலாம்.

வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்கள்

Mahindra XUV 3XO headlight

XUV 3XO காரில் உள்ள கிரில்லில் புதிய ஸ்போர்ட்டியான ஹெட்லைட் ஹவுசிங் மற்றும் முக்கோண வடிவம் இருக்கும் (குரோம் ஃபினிஷ் செய்யப்பட்டவை).  இது புதிய அலாய் வீல்களுடன் ஃபாங் வடிவ LED DRLகள், புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்களையும் கொண்டுள்ளது.

Mahindra XUV 3XO LED taillights

பின்புறத்தில் கனெக்டட் LED டெயில்லைட்கள் மற்றும் உயரமான பம்பரை பெறுகிறது. எஸ்யூவி -யின் டெயில்கேட் புதிய லைட்டிங் செட்டப் உடன் புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது, இப்போது மஹிந்திராவின் "ட்வின் பீக்ஸ்" லோகோவிற்கு கீழே "XUV 3XO" பேட்ஜ் இருக்கின்றது.

மேலும் பார்க்க: Kia Carens Prestige Plus (O): புதிய வேரியன்ட் 8 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

என்னென்ன பவர்டிரெயின் தேர்வுகள் கிடைக்கும்?

மஹிந்திரா XUV 3XO -ஐ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்:

விவரங்கள்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் (TGDi)

1.5 லிட்டர் டீசல்

பவர்

110 PS

130 PS

117 PS

டார்க்

200 Nm

250 Nm வரை

300 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT

6-ஸ்பீடு MT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT

இப்போதுள்ள மாடலின் AMT -க்கு பதிலாக டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டி டிரான்ஸ்மிஷனுடன் இந்த புதிய சப்-4m எஸ்யூவியை மஹிந்திரா கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எதிர்பார்க்கப்படும் அறிமுகம்

மஹிந்திரா XUV 3XO ஏப்ரல் 29 அன்று அறிமுகமான சிறிது நேரத்திலேயே விற்பனைக்கு வரலாம். இதன் விலை ரூ. 9 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர்; மற்றும் இரண்டு சப்-4மீ கிராஸ்ஓவர்களான, மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் ஆகியற்றுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: XUV300 AMT

was this article helpful ?

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி 3XO

1 கருத்தை
1
P
pramodmangrulkar
Apr 8, 2024, 5:19:53 PM

What is it's seating capacity? 5 or 7? Does it have all front facing seats?

Read More...
    பதில்
    Write a Reply

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • டாடா சீர்ரா
      டாடா சீர்ரா
      Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • க்யா syros
      க்யா syros
      Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • பிஒய்டி sealion 7
      பிஒய்டி sealion 7
      Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • எம்ஜி majestor
      எம்ஜி majestor
      Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • டாடா harrier ev
      டாடா harrier ev
      Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    ×
    We need your சிட்டி to customize your experience