Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்களின் விவரங்கள் வெளியீடு
modified on நவ 25, 2024 05:51 pm by dipan for மஹிந்திரா be 05
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு EV -களும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் இருக்கும். இன்னும் கிளைம்டு ரேஞ்ச் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
-
XEV 9e மற்றும் BE 6e ஆகியவை மஹிந்திராவின் புதிய INGLO கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டவை.
-
XEV 9e மற்றும் BE 6e ஆகியவற்றுக்கு 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக்குகள் ஆப்ஷன் கொடுக்கப்படும் என்பதை மஹிந்திரா உறுதி செய்துள்ளது.
-
175 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும். 20 நிமிடங்களில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய உதவும்.
-
இந்த கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியர் வீல் டிரைவ் கொண்டதாக இருக்கும் இந்த EV -கள் 231 PS மற்றும் 285.5 PS அவுட்புட்டை கொடுக்கக்கூடியவை.
-
இரண்டு EV -களும் மல்டி ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகள் கிடைக்கும்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை கொடுக்கப்படலாம்.
-
XEV 9e காரின் விலை ரூ. 38 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் BE 6e காரின் விலை ரூ. 24 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
மஹிந்திரா XEV 9e எஸ்யூவி-கூபே மற்றும் BE 6e எஸ்யூவி கார்களை வரும் நவம்பர் 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக மஹிந்திரா இரண்டு மாடல்களின் பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் சார்ஜிங் திறன்கள் பற்றிய விவரங்களை இப்போது வெளியிட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே:
என்ன விவரங்கள் வெளியாகியுள்ளன ?
இரண்டு EV -களும் மஹிந்திராவின் EV-குறிப்பிட்ட INGLO கட்டமைப்பு தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன. மஹிந்திரா இதை குறிப்பாக EV -களுக்காக வடிவமைத்துள்ளது. XEV 9e மற்றும் BE 6e ஆகியவை 59 kWh மற்றும்/அல்லது 79 kWh பேட்டரி பேக்குகளின் ஆப்ஷன் உடன் கிடைக்கும் என்று மஹிந்திரா உறுதி செய்துள்ளது.
175 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த தளம் சப்போர்ட் செய்யும். இதன் மூலமாக 20 நிமிடங்களில் 20 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை பேட்டரிகளை சார்ஜ் செய்ய முடியும். ரியர்-ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இது 231 PS முதல் 285.5 PS வரை அவுட்புட்டை கொடுக்கக்கூடியது.
மாடல்-வாரியான கிளைம்டு ரேஞ்ச் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட INGLO தளமானது சுமார் 450 கி.மீ முதல் 500 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கலாம். ரியர்-வீல் டிரைவ் (RWD), ஃபிரன்ட்-வீல் டிரைவ் (RWD), FWD), அல்லது ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்களுடன் கிடைக்கலாம்.
மேலும் படிக்க: Hyundai Creta EV ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது
XEV 9e மற்றும் BE 6e: இதுவரை நமக்கு தெரிந்த விஷயங்கள்
XEV 9e என்பது XUV.e9 கான்செப்ட்டின் உற்பத்திக்கு தயாராக உள்ள பதிப்பாகும். இது XUV.e8 எஸ்யூவி கான்செப்ட்டின் எஸ்யூவி-கூபே வெர்ஷன் ஆக உள்ளது. XUV.e8 கருத்து மஹிந்திரா XUV700 இன் ஆல்-எலக்ட்ரிக் வெர்ஷன் ஆக உள்ளது. BE 6e என்பது BE.05 கான்செப்ட்டின் தயாரிப்பு பதிப்பாகும். இது 2022 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
முந்தைய டீஸர்களில் மஹிந்திரா இந்த இரண்டு எலக்ட்ரிக் கார்களின் வடிவமைப்புகளையும் காட்டியிருந்தது. BE 6e ஆனது ஆங்கிள் பானெட், கிடைமட்டமாக வைக்கப்பட்டுள்ள டூயல்-பேரல் LED ஹெட்லைட்கள், C- வடிவ LED DRL -கள் மற்றும் நேர்த்தியான பம்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
XEV 9e ஆனது அதன் கூபே ரூஃப்லைன் காரணமாக மிகவும் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. மேலும் முன்பக்கத்தில் இன்வெர்டட் L-வடிவ கனெக்டட் LED DRL -கள் மற்றும் வெர்டிகலாக உள்ள டூயல்-பேரல் LED ஹெட்லைட்கள் உடன் நிமிர்ந்த முன்பக்க வடிவமைப்பை கொண்டுள்ளது. இதில் கனெக்டட் LED டெயில் லைட்களும் கொடுக்கப்படும்.
உள்ளே XEV 9e டிரிபிள் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, சென்ட்ரல் டச் ஸ்கிரீன் மற்றும் பயணிகள் டிஸ்ப்ளே கொண்ட டிரிபிள் ஸ்கிரீன் செட்டப்பை கொண்டிருக்கும். BE 6e ஆனது மறுபுறம் டூயல் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டு EVகளும் இல்லுமினேட்டட் 2-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் இருக்கும்.
மேலும் பார்க்க: Suzuki e Vitara மற்றும் Maruti Suzuki eVX கான்செப்ட்: படங்களில் வடிவமைப்பு ஒப்பீடு
XEV 9e மற்றும் BE 6e: எதிர்பார்க்கப்படும் வசதிகள்
XEV 9e ஆனது மல்டி-சோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் வென்டிலேட்டட், பவர்டு சீட்கள் உள்ளிட்ட பல பிரீமியம் வசதிகளுடன் வரலாம். இது ஒரு EV என்பதால் வெஹிகிள் டூ லோடிங் (V2L) மற்றும் மல்டி ரீஜெனரேஷன் மோட்களும் கிடைக்கும்.
அதே போல மல்டி ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற பல வசதிகள் BE 6e காரிலும் கிடைக்கும்.
இரண்டு கார்களிலும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் பாதுகாப்பு சிறப்பான முறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
XEV 9e மற்றும் BE 6e: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா XEV 9e விலை ரூ. 38 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது வரவிருக்கும் டாடா ஹாரியர் EV மற்றும் டாடா சஃபாரி EV போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்,
BE 6e காரின் விலை சுமார் ரூ. 24 லட்சத்தில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா கர்வ்வ் EV, MG ZS EV, மற்றும் வரவிருக்கும் மாருதி eVX மற்றும் ஹூண்டாய் கிரெட்டா EV போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful