Mahindra BE 6e காரை 10 படங்களில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்
சிறிய 59 kWh பேட்டரி பேக் கொண்ட மஹிந்திரா BE 6e -ன் விலை ரூ. 18.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுகம் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா -வுக்கானவை).
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மஹிந்திரா BE 6e மற்றும் XEV 9e தனது இரண்டு புதிய EV-களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் மஹிந்திரா BE 6e கார் தயாரிப்பாளரின் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன எலக்ட்ரிக்-மட்டும் 'BE' சப் பிராண்டின் முதல் தயாரிப்பு ஆகும். உள்ளேயும் வெளியேயும் அதன் ஆக்ரோஷமான வடிவமைப்புடன் BE 6e மற்ற EV -களின் கூட்டத்திலிருந்து தனித்து நிற்கிறது. 10 படங்களின் உதவியுடன் BE 6e காரை விவரங்களை விரிவாக பார்ப்போம்:
முன்பக்கம்
மஹிந்திரா BE 6e ஆனது தடிமனான கட்கள் மற்றும் ஃபோல்டுகளுடன் கூடிய ஷார்ப்பான மற்றும் ஆக்ரோஷமான முன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. போனட் ஏர் டேமை காற்றை எடுத்துக் கொள்ளும் வகையில் ஃபங்ஷனல் ஸ்கூப் காரில் உள்ளது. இல்லுமினேட்டட் 'BE' லோகோவும் கொடுக்கப்பட்டுள்ளது. இது கிடைமட்டமாக அடுக்கப்பட்ட LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் உடன் சி-வடிவ LED DRL -களும் உள்ளன. EV -களுக்கு வழக்கமான இருக்கும் வடிவத்தை போல் கிரில் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
பம்பர் பிளாக் கலரில் உள்ளது. ஹெட்லைட்கள் மற்றும் DRL -களுக்கு இடையே உள்ள பகுதி பாடி கலரில் ஸ்கெட்ச் செய்யப்பட்டுள்ளது. சில்வர் ஸ்கிட் பிளேட், முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபாக் லேம்ப்கள் ஆகியவை முன்பக்கத்தை சுற்றி கொடுக்கப்பட்டுள்ளன.
பக்கவாட்டு தோற்றம்
மஹிந்திரா BE 6e -ன் ஆக்ரோஷமான லைன்களுடன் அதன் பக்கவாட்டு பகுதி முழுவதும் மட்டுமல்லாமல் வீல் ஆர்ச் -களின் மீது கிளாஸ் பிளாக் கிளாடிங் மற்றும் எஸ்யூவி -யின் நீளம் முழுவதுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கிளாடிங் ஆங்கிள் லைன்களுடன் பின்புற டோரின் கீழ் பகுதியில் 'INGLO' பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
இது முன்பக்க டோர்களில் ஃப்ளஷ்-ஃபிட்டட் ஹேண்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பின்புற டோர் ஹேண்டில்கள் சி-பில்லரில் கொடுக்கப்பட்டுள்ளன. இது A- மற்றும் B-பில்லர் மற்றும் வெளிப்புற ரியர்வியூ மிரர்களில் பிளாக் ஃபினிஷ் கொண்ட வேரியன்ட் எலமென்ட்களும் உள்ளன. 19-இன்ச் ஏரோடைனமிக்-டிசைன் வடிவ அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் மஹிந்திராவும் 20-இன்ச் யூனிட்களை கூடுதல் ஆப்ஷனாக கொடுத்துள்ளது.
பின்புறம்
மஹிந்திரா BE 6e ஆனது, முன்புற LED DRL -கள் போன்ற C-வடிவ LED டெயில் லைட்களை பெறுகிறது. டெயில்கேட் மஹிந்திரா EV களுக்கு எக்ஸ்க்ளூஸிவ் ஆன ‘இன்ஃபினைட் பாஸிபிலிட்டிஸ்’ என்ற லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. பூட் பகுதியில் பூட்லிப் ஸ்பாய்லருடன் நீண்டு செல்லும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் மற்றொரு ஸ்பாய்லர் பின்புற கண்ணாடியின் மேல் உள்ளது.
பிளாக் கலர் பின்புற பம்பரில் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. மற்றும் இன்டெகிரேட்டட் ரிஃப்ளெக்டர் உடன் இரண்டு சில்வர் ஸ்கிட் பிளேட்கள் உள்ளன.
மேலும் பார்க்க: மஹிந்திரா BE 6e மற்றும் XEV 9e: கான்செப்ட் மற்றும் ரியாலிட்டி
பூட் ஸ்பேஸ் மற்றும் ஃபிரங்க்
மஹிந்திரா BE 6e 455 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்குகிறது. இது பானட்டின் கீழ் 45-லிட்டர் ஸ்டோரேஜ் பகுதியையும் கொண்டுள்ளது. இது பொதுவாக ஃபிரங்க் (முன்பக்க ட்ரங்க்) என்று அழைக்கப்படுகிறது.
இன்ட்டீரியர்
மஹிந்திரா BE 6e -ன் உட்புறம் டூயல்-டோன் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இது 2-ஸ்போக் ஸ்டீயரிங் கொண்டுள்ளது. இது ஒரு ஒளிரும் 'BE' லோகோவுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சக்கரத்திற்குப் பின்னால் இரண்டு ஃப்ரீ-ஸ்டாண்டிங் ஸ்கிரீன்கள் ஒரு கண்ணாடி பேனலின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மூலம் நிரப்பப்படுகிறது.
மஹிந்திரா BE 6e டேஷ்போர்டிலிருந்து சென்டர் கன்சோல் வரை கர்வ்டு டிரிமை கொண்டுள்ளது. இது காக்பிட் போன்ற உணர்வை காருக்கு அளிக்கிறது. இந்த கிளாஸி-பிளாக் கன்சோல் டிரைவரின் ஏசி வென்ட்களை கொண்டுள்ளது மற்றும் கேபினை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது.
மஹிந்திரா BE 6e -ன் இருக்கைகளில் அனைத்து பயணிகளுக்கும் அடெஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்களுடன் ஃபேப்ரிக் மற்றும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றின் மிக்ஸ்டு ஆக கொடுக்கப்பட்டுள்ளன. டோர்கள் கேபினின் தீமில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. மேலும் உட்புற டோர் ஹெண்டில்களும் ஃபேப்ரிக் -ல் கொடுக்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா BE 6e ஆனது டூயல் ஜோன் ஏசி, கலர் லைட்களுடன் கூடிய பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற பல வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்புக்காக இது 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக 6), பார்க் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS ஆகியவற்றை அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் டிரைவர் டிரெளவுஸினெஸ் டிடெக்ஷன் போன்ற வசதிகளுடன் இதை வழங்குகிறது.
மேலும் படிக்க: Mahindra BE 6e மற்றும் XEV 9e டெலிவரி விவரங்கள்
பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்
மஹிந்திரா BE 6e இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் ரியர் வீல் டிரைவ் (RWD) செட்டப் உடன் வருகிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:
பேட்டரி பேக் |
59 kWh |
79 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் (கள்) எண்ணிக்கை |
1 |
1 |
பவர் |
231 PS |
286 PS |
டார்க் |
380 Nm |
380 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC பகுதி 1+2) |
535 கி.மீ |
682 கி.மீ |
டிரைவ்டிரெய்ன் |
RWD |
RWD |
மஹிந்திரா BE 6e வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, பெரிய பேட்டரி பேக் 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொடுக்கிறது. மற்றும் 59 kWh பேட்டரி 140 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இரண்டும் அந்தந்த பேட்டரிகளை 20 நிமிடங்களில் 20-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். மஹிந்திரா BE 6e உடன் 7.3 kWh மற்றும் 11.2 kWh ஆகிய இரண்டு AC சார்ஜர் ஆப்ஷன்களையும் கொடுக்கும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
59 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட மஹிந்திரா BE 6e இன் என்ட்ரி-லெவல் ஒன் வேரியன்ட்டின் விலை ரூ. 18.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). மற்ற வேரியன்ட்களுக்கான விலை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BE 6e ஆனது டாடா கர்வ்வ் EV, MG ZS EV மற்றும் வரவிருக்கும் மாருதி eVX மற்றும் ஹூண்டாய் கிரெட்டா EV ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
மஹிந்திரா BE 6e பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் தெரிவியுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மஹிந்திரா BE 6e ஆட்டோமெட்டிக்