• English
  • Login / Register

Mahindra BE 6e மற்றும் XEV 9e டெலிவரி விவரங்கள்

published on நவ 27, 2024 10:00 pm by rohit for மஹிந்திரா be 6

  • 79 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இரண்டு EV கார்களும் 2025 ஆண்டு ஜனவரி மாத இறுதியில் டீலர்ஷிப்களை வந்தடையும். வாடிக்கையாளர்களுக்கான விநியோகங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் 2025 -க்கு இடையில் தொடங்கும்.

Mahindra BE 6e and XEV 9e delivery timeline out

மஹிந்திராவின் இரண்டு புதிய கார்களான மஹிந்திரா BE 6e மற்றும் மஹிந்திரா XEV 9e ஆகியவை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றி தொடக்க விலை ரூ.18.90 லட்சம் மற்றும் ரூ.21.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக உள்ளது. அறிமுகத்தின் போது முழு வேரியன்ட்கள், விலை விவரங்கள் மற்றும் டெலிவரி பற்றி சில விவரங்களை வெளியிட்டது. அவற்றை இங்கே பார்ப்போம்.

வெளியீடு மற்றும் டெலிவரி

இரண்டு புதிய EV -களும் 2025 ஜனவரி மாத இறுதியில் டீலர்ஷிப்களுக்கு வரும் என மஹிந்திரா கூறியுள்ளது. ஆகவே வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் மஹிந்திரா இரண்டு EV -களின் முழுமையான வேரியன்ட் வாரியான விலை விவரங்களை வெளியிடும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த இரண்டு  வாடிக்கையாளர் டெலிவரி பிப்ரவரி அல்லது மார்ச் 2025 முதல் தொடங்கும் என்றும் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

இரண்டு புதிய மஹிந்திரா EV -களின் விரைவான கண்ணோட்டம் இங்கே:

இரண்டு EV -களுக்கான எதிர்கால வடிவமைப்பு

Mahindra XEV 9e front
Mahindra BE 6e front

இரண்டு EV -களும் ஆல் LED லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ​​XEV 9e ஆனது கனெக்டட் LED DRL ஸ்டிரிப் உள்ளது. BE 6e ஆனது C-வடிவ LED DRL -களை பெறுகிறது. XEV 9e ஆனது வெர்டிகலாக உள்ள டூயல்-பாட் LED புரொஜெக்டர் ஹெட்லைட்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் அவை BE 6e காரில் கிடைமட்டமாக கொடுக்கப்பட்டுள்ளன.

இரண்டிற்கும் இடையே உள்ள மற்ற வடிவமைப்பு ஒற்றுமைகள் 19-இன்ச் ஏரோடைனமிக் வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் (20 -இன்ச் யூனிட்களை பெறுவதற்கான ஆப்ஷன் உடன்), மற்றும் முன்பக்கத்தில் ஃப்ளஷ்-டைப் டோர் ஹேண்டில்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களிலும் பின்புற டோர் ஹேண்டில்கள் அவற்றின் சி-பில்லர்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாடல்களில் உள்ள ‘XEV 9e’ மற்றும் ‘BE 6e’ மோனிகர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

இன்ட்டீரியரில் மினிமலிஸ்ட் தோற்றம்

இரண்டு EV-களின் கேபினில் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், மையத்தில் இல்லுமினேட்டட் லோகோவும் (XEV 9e -ல் இன்ஃபினிட்டி லோகோ மற்றும் 6e -ல் 'BE' லோகோ) உள்ளது. BE 6e -ன் கேபினில் கிரே கலர் சீட் அப்ஹோல்ஸ்டரி இருந்தாலும் XEV 9e 2-டோன் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

Mahindra XEV 9e interior
Mahindra XEV 6e interior

இரண்டு EV -களில் உள்ள மிகப்பெரிய பேசு பொருள் டிஜிட்டல் ஸ்கிரீன்களுக்கான அவற்றின் இன்டெகிரேட்டட் செட்டப் ஆகும். XEV 9e மூன்று 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் உள்ளன (டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பயணிகள் பக்க யூனிட் உட்பட) BE 6e ஆனது கோ-டிரைவர் பக்க டிஸ்ப்ளே கொடுக்கப்படவில்லை.

மேலும் பார்க்க: மறைக்கப்படாத புதிய Honda Amaze முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது

காரில் தொழில்நுட்பம் நிரம்பியுள்ளது

இரண்டு EV -களும் வசதி நிறைந்த கார்களாக உள்ளன. மஹிந்திரா வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், மல்டி-ஜோன் ஏசி, 1400 W 16-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இரண்டு பாதுகாப்பு பேக்கேஜில் 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், பார்க் அசிஸ்ட் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) உடன் வருகின்றன.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்

மஹிந்திரா BE 6e மற்றும் XEV 9e ஆகியவற்றை பின்வரும் எலக்ட்ரிக் பவர் டிரெய்ன்களுடன் வழங்குகிறது.

விவரங்கள்

மஹிந்திரா BE 6e

மஹிந்திரா XEV 9e

பேட்டரி பேக்

59 kWh/ 79 kWh

59 kWh/ 79 kWh

கிளைம்டு ரேஞ்ச் (MIDC P1+P2)

535 கி.மீ / 682 கி.மீ

542 கி.மீ /  656 கி.மீ

மின் மோட்டார் எண்

1

1

பவர்

231 PS/ 286 PS

231 PS/ 286 PS

டார்க்

380 Nm

380 Nm

டிரைவ்டிரெய்ன்

RWD*

RWD*

*RWD: ரியர் வீல் டிரைவ்

இரண்டும் ரியர்-வீல்-டிரைவ் (RWD) செட்டப் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தால் INGLO கட்டமைப்பு தளம் (அவை அடிப்படையாக கொண்டது) ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷனையும் சப்போர்ட் . மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன: ரேஞ்ச், எவ்ரிடே மற்றும் ரேஸ். 

இரண்டு EV -களும் 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றன, இது பேட்டரி பேக்குகளை 20 நிமிடங்களில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். 7.3 kWh மற்றும் 11.2 kWh ஆகிய இரண்டு சார்ஜர் ஆப்ஷன்கள் இரண்டு மாடல்களுக்கும் சார்ஜ் செய்யக்கூடிய அடிப்படையில் கிடைக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

Mahindra XEV 9e rear
Mahindra BE 6e rear

மஹிந்திரா BE 6e காரின் விலை ரூ. 18.90 லட்சத்தில் இருந்து.  XEV 9e காரின் விலை ரூ.21.90 லட்சத்தில் இருந்து (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) தொடங்குகிறது. XEV 9e ஆனது வரவிருக்கும் டாடா ஹாரியர் EV மற்றும் டாடா சஃபாரி EV உடன் போட்டியிடுகிறது. BE 6e ஆனது டாடா கர்வ்வ் EV, MG ZS EV மற்றும் வரவிருக்கும் மாருதி eVX மற்றும் ஹூண்டாய் கிரெட்டா EV கார்களுடன் போட்டியிடும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: மஹிந்திரா BE 6e ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Mahindra be 6

1 கருத்தை
1
O
omparkash
Nov 28, 2024, 2:24:26 PM

Hii Apa ke kard

Read More...
    பதில்
    Write a Reply

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience