கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்புற மறைக்கப்படாத படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன
இப்போது படம் பிடிக்கப்பட்டுள்ள மாடல் சைனா-ஸ்பெக் கியா சோனெட் ஆகும், இது ஃபாங் வடிவ LED DRL -கள் மற்றும் கனெக்டட் டெயில்லைட் அமைப்புடன் காணப்பட்டது.
-
செப்டம்பர் 2020 -ல் கியா நிறுவனம் இந்தியாவில் சோனெட் -டைஅறிமுகப்படுத்தியது
-
இப்போது ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட காரின் வெளிப்புறம் முதல்முறையாக எந்தவிதமான உறைகளும் இல்லாமல் காணப்பட்டது
-
புதிய அலாய் வீல் வடிவமைப்புகள் மற்றும் மாற்றப்பட்ட பம்பர்கள் ஆகியவையும் மாற்றத்துக்கு உட்பட்டுள்ளன.
-
முந்தைய உளவு காட்சிகளில் புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் டேன் மற்றும் பிளாக் சீட்கள் இருப்பதை காட்டியுள்ளன.
-
விலை ரூ. 8 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்); இது 2024 -ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும்.
கியா சோனெட் சப்-4m எஸ்யூவி இடத்தில் கிடைக்கும் மிகவும் பிரீமியம் கார்களில்ஒன்றாகும். கியா சோனெட் தற்போதைய தோற்றத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ளது, மேலும் அதன் ஃபேஸ்லிஃப்ட் சில காலமாக செயல்பாட்டில் உள்ளது, இதற்கிடையில் இது பல முறை சோதனை செய்யப்பட்டது, மேலும் அதன் சைனா-ஸ்பெக் மாடலின் மறைக்கப்படாத படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகின, இது முதல் முறையாக எக்ஸ்டீரியர் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.
கவனிக்கத்தக்கது என்ன?
கியா எஸ்யூவியின் முன்புற மற்றும் பின்புற வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது. புதிய சோனெட் ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லைட் கிளஸ்டர்கள் மற்றும் ஃபாங் வடிவ LED DRL -கள் மற்றும் மாற்றப்பட்ட முன்பக்க பம்பருடன் வருகிறது. கிரில் அளவு மற்றும் வடிவமைப்பு, அதிர்ஷ்டவசமாக, டிங்கர் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா-ஸ்பெக் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இங்கே காணப்பட்ட மாதிரியிலிருந்து வடிவமைப்பில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பக்கங்களில் மாற்றங்கள் புதிய அலாய் வீல்களுடன் மட்டுமே காணப்படுகின்றன, பின்புறத்தில் புதிய செல்டோஸ் போன்ற இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்கள் மற்றும் ஒரு பெரிய பம்பருடன் காணப்பட்டது.
சமீபத்திய புகைப்படங்களில், எஸ்யூவியின் இரண்டு வெவ்வேறு வேரியன்ட்களை பார்க்க முடிகிறது (அநேகமாக மிட்-ஸ்பெக் மற்றும் டாப்-ஸ்பெக் டிரிம்கள்). இது தனித்துவமான 16-இன்ச் அலாய் வீல் டிசைன்கள் மற்றும் ஒன்றின் பாடி கலர்டு டோர் ஹேண்டில்கள் நிற மற்றும் மற்றொன்றில் குரோம் ஃபினிஷ்கள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம் மூலம் தெளிவாகிறது. மற்றொரு முக்கிய வேறுபாடு டாப்-ஸ்பெக் டிரிமில் மல்டி-ரிஃப்ளெக்டர் எல்இடி ஹெட்லைட்களை வழங்குவதாகும், அதேசமயம் மிட்-ஸ்பெக் வேரியன்ட் ஹாலோஜன் புரொஜெக்டர் யூனிட்களை பெறுகிறது.
உட்புற விவரங்கள்
சமீபத்திய உளவு காட்சிகள், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி -யின் உட்புறத்தில் எந்தப் பார்வையையும் தரவில்லை என்றாலும், இந்தியா-ஸ்பெக் சோதனை வாகனத்தின் முந்தைய பார்வை சில முக்கியமான புதுப்பிப்புகளைப் பரிந்துரைத்தது .அவை புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல், புதிய பிளாக் மற்றும் டேன் நிற சீட் அப்ஹோல்ஸ்டரியாகவும் இருந்தன, இது ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
போர்டில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
உளவு காட்சி எஸ்யூவி சிங்கிள்-பேன் சன்ரூஃப் தொடரும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அரை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல், 10.25-இன்ச் தொடுதிரை மற்றும் ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை காரில் உள்ள எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களாகும்.
ஒரு சில பாதுகாப்பு அம்ச மேம்பாடுகளில் 360 டிகிரி கேமரா மற்றும் சில மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS) வடிவத்தில் இருக்கக்கூடும், இது முன்புற கண்ணாடியில் பொருத்தப்பட்ட கேமராவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கியா புதிய சோனெட்டிற்கு ஆறு ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் மவுன்ட்ஸ் மற்றும் முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றை வழங்கும்.
இதையும் படியுங்கள்: 360 டிகிரி கேமரா கொண்ட10 மலிவு விலை கார்கள்: மாருதி பலேனோ, டாடா நெக்ஸான், கியா செல்டோஸ் மற்றும் பிற
ஹூட்டில் மாற்றங்கள் எதுவுமில்லை
எஸ்யூவி -யின் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கியா எந்த மாற்றத்தையும் செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தற்போதைய இந்தியா-ஸ்பெக் சோனெட் பின்வரும் இன்ஜின்-கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது:
விவரக் குறிப்பு |
1.2-லிட்டர் பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
83 PS |
120 PS |
116 PS |
டார்க் |
115 Nm |
.172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT
|
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடுAT |
கியா டீசல் பவர்டிரெய்னுக்கான வழக்கமான மேனுவல் டிரான்ஸ்மிஷனை மீண்டும் கொண்டு வரக்கூடும் என்று வதந்திகள் உலவுகின்றன, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்)இருந்து தொடங்கலாம். இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், மஹிந்திரா XUV300,ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவருக்கு மாற்றாக இருக்கும்.