சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் Kia EV6 Facelift அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

க்யா ev6 க்காக மார்ச் 26, 2025 09:25 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

2025 EV6 ஆனது பழைய மாடல் விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் வருகிறது. 650 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொண்ட பெரிய பேட்டரி பேக்குடன் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • இது ஸ்லீக்கரான எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், முக்கோண வடிவ எல்இடி DRL -கள் மற்றும் 19-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.

  • புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.

  • டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.

  • பாதுகாப்புக்காக 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 ADAS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • 84 kWh பேட்டரி பேக் மற்றும் 325 PS மற்றும் 605 Nm அவுட்புட் கொண்ட டூயல் எலக்ட்ரிக் மோட்டார் இதில் உள்ளது.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட 2025 EV6 ஆனது இப்போது ரூ. 65.90 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). இது முன்பு இருந்த மாடலின் விலையிலேயே கிடைக்கும். EV6 ஆனது இப்போது ஆல்-வீல்-டிரைவ் AWD (ஆல்-வீல்-டிரைவ்) செட்டப்பில் மட்டுமே கிடைக்கும். மேலும் இப்போதைக்கு RWD (ரியர்-வீல்-டிரைவ்) ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. 2025 கியா EV6 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:

வெளிப்புறம்

மிட்-சைக்கிள் அப்டேட் உடன் வெளிப்புற வடிவமைப்பு இப்போது ஷார்ப்பாக மாறியுள்ளது மற்றும் 2025 இவி6 காரில் முக்கோண வடிவ எல்இடி டிஆர்எல் -கள் மற்றும் ஸ்லீக்கரான எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவி -களில் பொதுவானதாக காணப்படும் பிளாங்க்-ஆஃப் கிரில் மற்றும் ஒரு பம்பர் உள்ளது. இது முன்பை விட காரை ஆக்ரோஷமானதாக காட்ட உதவும்.

பக்கவாட்டில் இது 19-இன்ச் டூயல்-டோன் ஏரோடைனமிகலாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களை பார்க்க முடிகிறது. பிரீமியம் டச் கொடுக்கும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்களை இது கொண்டுள்ளது. இருப்பினும் பின்புறத்தில் கர்வ்டு ஆன கனெக்டட் எல்இடி டெயில் லைட்ஸ், ரூஃபில் ஒரு ஸ்பாய்லர் மற்றும் பம்பரில் ஒரு பிளாக் டிஃப்பியூசர் ஆகியவற்றுடன் பழைய மாடலை போலவே தெரிகிறது.

இன்ட்டீரியர்

புதிய கியா EV6 ஆனது டூயல்-12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் டச்-பேஸ்டு ஏசி கண்ட்ரோல் பேனலுடன் வெளிச்செல்லும் மாடலின் டேஷ்போர்டு அமைப்புடன் வருகிறது. இப்போதுள்ள ஒரு மாற்றம் என்னவென்றால் புதிய 3-ஸ்போக் டூயல்-டோன் ஸ்டீயரிங் வீல் உடன் இது வருகிறது. இது நவீனமாகவும் ஸ்போர்ட்டியாகவும் தெரிகிறது.

கியா EV6 -யில் சேர்க்கப்பட்டுள்ள புதிய ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் தவிர சென்டர் கன்சோல் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக உள்ளது. இருக்கைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பழைய மாடலை போலவே அனைத்து இருக்கைகளும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்களை பெறுகின்றன.

மேலும் படிக்க: BIMS 2025: இந்தியா-ஸ்பெக் மாடலில் ஒரு பெரிய மாற்றத்துடன் புதிய ஹூண்டாய் கிரெட்டா என் லைன் தாய்லாந்தில் வெளியிடப்பட்டது

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்க்கு மற்றும் டச் ஸ்கிரீனுக்கு மற்றொன்று) மற்றும் 12-இன்ச் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆகியவை உள்ளன. இது சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் டிஜிட்டல் கீ வசதியுடன் வருகிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களை பெறுகிறது. இது லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கொலிஷன் மிட்டிகேஷன் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளுடன் வருகிறது.

பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்

2025 கியா EV6 ஆனது முன்பை விட பெரிய மற்றும் ஒரே ஒரு பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் வருகிறது. மேலும் 650 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொண்டுள்ளது. விரிவான விவரங்கள் இங்கே:

பேட்டரி பேக்

84 kWh

எலக்ட்ரிக் மோட்டார் (கள்) எண்ணிக்கை

2

பவர்

325 PS

டார்க்

605 Nm

கிளைம்டு ரேஞ்ச் (ARAI MIDC)

663 கி.மீ

டிரைவ்டிரெய்ன்

ஆல்-வீல் டிரைவ் (AWD)

கியா EV6 ஆனது 0-100 கிமீ/மணி வேகத்தை 5.3 வினாடிகளில் எட்டும். 350 kW ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 18 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் வரை பேட்டரி பேக்கை சார்ஜ் செய்யலாம்.

போட்டியாளர்கள்

2025 கியா இவி 6 பழைய காரை போலவே ஹூண்டாய் அயோனிக் 5, வோல்வோ C40 ரீசார்ஜ், மெர்சிடிஸ்-பென்ஸ் EQA மற்றும் BMW iX1 ஆகியவற்றுக்கு போட்டியாக தொடரும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Kia ev6

explore மேலும் on க்யா ev6

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.7 - 9.84 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை