இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 ஃபாஸ்ட் EV சார்ஜர்கள்
published on மே 29, 2024 08:33 pm by dipan for ஆடி இ-ட்ரான்
- 55 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் EV -களின் புரட்சியானது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்கள் அதிகமாக வழி வகுத்துள்ளது.
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன (EV) சந்தை வளர்வதால் ஃபாஸ்ட் மற்றும் சிக்கனமாக சார்ஜிங் உள்கட்டமைப்புக்கான தேவையும் அதிகரிக்கிறது. பிரபலமான வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதன் மூலம் இந்த தேவையை பூர்த்தி செய்ய முயற்சி செய்து வருகின்றன. இந்த வளர்ந்து வரும் பிரிவில் சமீபத்திய முயற்சி சென்னையில் ஹூண்டாய் நிறுவியிருக்கும் 180 கிலோவாட் சார்ஜர் ஆகும். இது தமிழ்நாட்டில் முதல் முறையாகும்.
ஹூண்டாயின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைத் தொடர்ந்து இந்தியாவில் தற்போது பயன்படுத்தக்கூடிய ஃபாஸ்ட் EV சார்ஜர்களின் பட்டியலைத் தொகுக்க முடிவு செய்தோம். இந்தியாவின் எதிர்கால எலக்ட்ரிக் பிரிவில் போக்கை மாற்றியமைக்கும் முன்னணி வசதிகள் பற்றிய ஒரு நெருக்கமான பார்வை இங்கே:
ஆடி - 450kW
ஆடி நாட்டின் மிக சக்திவாய்ந்த சார்ஜிங் நிலையத்தை உருவாக்க ChargeZone உடன் இணைந்து பணியாற்றியது. மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் அமைந்துள்ள ஆடி சார்ஜிங் ஹப் 450kW திறன் கொண்டது. இது ஒரு எலக்ட்ரிக் வாகனத்திற்கு 360kW பவரை வழங்குகிறது. மேலும் அதிக செயல்திறனை உறுதிப்படுத்த லிக்விட்-கூல்டு தொழில்நுட்பம் கொண்ட 500 amp கன் -ஆல் இயக்கப்படுகிறது. நீங்கள் ஆச்சரியப்பட்டால் ஆடி இ-ட்ரான் GT 300kWக்கு மேல் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. அந்த அல்ட்ராஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி 100 கி.மீ ரேஞ்ச் -க்கு தேவைப்படும் சார்ஜை காரில் ஏற்ற 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
சார்ஜிங் ஹப்பில் ஐந்து சார்ஜிங் பேக்கள் மற்றும் 24 மணி நேர அணுகலுடன் கூடிய ஒருங்கிணைந்த லவுஞ்ச் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் இது முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படுகிறது மற்றும் கூடுதல் மின் தேவைகளுக்காக சோலார் கூரை பேனல்களை கொண்டுள்ளது. சார்ஜர்கள் உலகளவில் இணக்கமானவை மற்றும் வெவ்வேறு சார்ஜிங் போர்ட்களுடன் எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்த முடியும்.
கியா - 240 kW
கியா கொச்சியில் 240 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை அமைத்துள்ளது. இது 2022 ஆண்டில் அறிமுகமானபோது இது இந்தியாவின் ஃபாஸ்ட் சார்ஜிங் மையமாக இருந்தது. கொச்சியில் உள்ள கியா DC ஃபாஸ்ட் சார்ஜர் கியா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமானது இல்லை. அனைத்து EV உரிமையாளர்களுக்கும் இதில் தங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை கட்டணம் செலுத்தி சார்ஜ் செய்யலாம். குறிப்பாக கியா EV6 350kW ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டது. எனவே அந்த உரிமையாளர்கள் இந்த வகையான சார்ஜர்களை அதிகம் பயன்படுத்தலாம்.
எக்ஸிகாம் - 200kW
எக்ஸிகாம் இந்தியாவில் 5000 -க்கும் மேற்பட்ட EV சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவியுள்ளது. 200 kW மாடல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. எலக்ட்ரிக் பேருந்துகளை கூட சார்ஜ் செய்யும் திறன் கொண்டவை!. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்நிறுவனம் இன்னும் ஒருபடி மேலே சென்று 400 kW சார்ஜர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் அத்தகைய சார்ஜரை நிறுவுவது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதன் விளைவாக இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஹூண்டாய் - 180 kW
ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் 180 கிலோவாட் திறன் கொண்ட புதிய சார்ஜரை நிறுவியுள்ளது. இருப்பினும் ஹூண்டாய் முன்பு நாடு முழுவதும் 11 இடங்களில் 150 kW சார்ஜர்களை நிறுவியிருந்தது. இந்த சார்ஜர்கள் கியாவை போலவே உலகளாவிய சப்போர்ட் கொண்டவை மற்றும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும். ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தில் மேலும் 1000 சார்ஜர்களை நிறுவும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. ஹூண்டாய் வரிசையில் Ioniq 5 EV இந்த ஃபாஸ்ட் சார்ஜிங்கை எளிதாகப் பயன்படுத்தும், கோனா எலக்ட்ரிக் ஒரு மணி நேரத்திற்குள் 0-80 சதவீதம் டாப் அப் செய்ய 50kW மட்டுமே தேவைப்படும்.
ஷெல் - 120 kW
நாட்டில் பல எரிபொருள் ஸ்டேஷன்களில் அதிக எண்ணிக்கையிலான பப்ளிக் EV சார்ஜர்களை கொண்ட நிறுவனங்களில் ஷெல் ஒன்றாகும். இந்த EV சார்ஜர்கள் உலகளாவிய பிளக்குகளுடன் 120kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகின்றன. எனவே எந்தவொரு உற்பத்தியாளரிடமிருந்தும் எந்த EV -யையும் சார்ஜ் செய்ய அவற்றைப் பயன்படுத்தலாம். ஷெல் சார்ஜிங் ஹப் ஆனது வாரத்தில் ஏழு நாட்களும் அல்லது ஒவ்வொரு ஷெல் நிலையத்தை பொறுத்து திறந்திருக்கும்.
நீங்கள் பார்த்த இந்தியாவின் ஃபாஸ்ட் EV சார்ஜிங் ஸ்டேஷன் எது? கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: e-ட்ரான் ஆட்டோமெட்டிக்