• English
    • Login / Register

    Skoda Kylaq கார் அறிமுக விலையில் ஏப்ரல் மாத இறுதி வரை கிடைக்கும்

    dipan ஆல் ஏப்ரல் 02, 2025 04:08 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 12 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்டீஜ் என நான்கு வேரியன்ட்களில் கைலாக் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.

    இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி -யாக ஸ்கோடா கைலாக் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 7.89 லட்சம் முதல் ரூ. 14.40 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது. இது 4 மாதங்களுக்கு முன்பு 2024 டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டாலும் இந்த மாத இறுதி வரை காரின் விலையை உயர்த்துவதில்லை என்று முடிவு செய்துள்ளது. இதற்கு கைலாக் 33,333 முன்பதிவுகளுக்கு மட்டுமே அறிமுக விலை பொருந்தும் என்று ஸ்கோடா தெரிவித்திருந்தது. 

    ஸ்கோடா கைலாக் காரை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்:

    வெளிப்புறம்

    Skoda Kylaq front

    ஸ்கோடா கைலாக் காரின் முன்பக்கம் பிளாக் கலரில் பிரபலமான ஸ்கோடா "பட்டர்ஃபிளை" கிரில் மற்றும் டூயல்-பாட் எல்இடி ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இது ப்ரோ-வடிவ எல்இடி டிஆர்எல் -களும் உள்ளன. சப்-4மீ எஸ்யூவிக்கு முரட்டுத்தனமான கவர்ச்சியை வழங்க முன்பக்க பம்பரின் நடுப்பகுதி பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    Skoda Kylaq rear

    பக்கவாட்டில் பார்க்கும் போது இது 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், பிளாக் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் பிளாக் பாடி கிளாடிங் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது ஒரு கான்ட்ராஸ்ட் தோற்றத்தை அளிக்கிறது. நவீன கால கார்கள் போன்ற கனெக்டட் எல்இடி டெயில் லைட்கள் இல்லை என்றாலும் ரேப்பரவுண்ட் டெயில் லைட்ஸ் மற்றும் ஸ்கோடா எழுத்துகளுடன் கூடிய பிளாக் ஸ்ட்ரிப் இணைக்கப்பட்டுள்ளன. பின்புற பம்பர் பிளாக் மற்றும் ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட்டை கொண்டுள்ளது.

    இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    Skoda Kylaq dashboard

    உள்ளே ஸ்கோடா கைலாக் பிளாக் மற்றும் கிரே கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள லேயர்டு டேஷ்போர்டு வடிவமைப்புடன் வருகிறது. இதில் இரண்டு டிஜிட்டல் ஸ்கிரீன்கள், 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் குரோம் பெரிய ஏசி வென்ட்கள் உள்ளன. இது ஒரு பிளாக் சீட் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது. அனைத்து இருக்கைகளிலும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்களும் உள்ளன.

    Skoda Kylaq single-pane sunroof

    ஸ்கோடா கைலாக் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன், 8 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகளுடன் வருகிறது. இது ஆட்டோ ஏசி, சிங்கிள்-பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வென்டிலேஷன் ஃபங்ஷன் உடன் 6-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    பாதுகாப்பைப் பொறுத்தவரையில் கைலாக்கில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன. இது சென்சார்களுடன் பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் பின்புற டிஃபோகர் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. ஸ்கோடா கைலாக் பாரத் NCAP -லிருந்து 5-ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

    மேலும் படிக்க: அறிமுகமான இரண்டே மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் விற்பனையான Kia Syros

    பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    Skoda Kylaq engine

    ஸ்கோடா கைலாக், ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியாவிலிருந்து 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, அதன் விரிவான விவரங்கள் இங்கே:

    இன்ஜின்

    1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

    பவர்

    115 PS

    டார்க்

    178 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT*

    மைலேஜ்

    19.68 கிமீ/லி (MT) / 19.05 கிமீ/லி (AT)

    *AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    ஸ்கோடா கைலாக் காரின் விலை ரூ. 7.89 லட்சம் முதல் ரூ. 14.40 லட்சம் (அறிமுக, எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது. டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, சோனெட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மேலும் கியா சிரோஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Skoda kylaq

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience