Hyundai Venue எக்ஸிகியூட்டிவ் வேரியன்டை பற்றிய விவரங்களை 7 படங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்

published on ஏப்ரல் 22, 2024 05:31 pm by rohit for ஹூண்டாய் வேணு

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் வென்யூவின் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னைத் தேடும் எஸ்யூவி ஆர்வலர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட சமீபத்திய என்ட்ரி-லெவல் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் ஒரே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

IMG_256

2024 மார்ச் மாதத்தில் ஹூண்டாய் வென்யூவின் புதிய எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியது, இது மிட்-ஸ்பெக் S மற்றும் S(O) டிரிம்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்பியது. இந்த வேரியன்ட் இப்போது சப்-4m எஸ்யூவியின் டர்போ-பெட்ரோல் இன்ஜின் வரிசைக்கான என்ட்ரி-லெவல் ஆப்ஷனாக இது உள்ளது. வென்யூ எஸ்யூவியின் எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டை வாங்க நீங்கள் திட்டமிட்டால், அதில் உள்ள சிறப்பு என்ன என்பதை படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்:

வெளிப்புறம்

வென்யூ எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டில் சாதாரண ஆட்டோ-ஹாலோஜன் ஹெட்லைட் மட்டுமே உள்ளது. இது நெக்ஸ்ட்-இன்-லைன் S(O) வேரியன்ட்டில் காணப்படும் புரொஜெக்டர் யூனிட்களுடன் வேறுபடுகிறது. இதில் LED DRL-கள் மற்றும் கார்னரிங் லைட்டுகள் இல்லை. இவை S(O) டிரிமில் சேர்க்கப்பட்டுள்ளன. வென்யூ எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டில் டார்க் குரோம் கிரில் உள்ளது, இந்த எஸ்யூவியின் அனைத்து வேரியன்ட்களிலும் உள்ள உள்ள ஒரு ஸ்டாண்டர்டான வசதியாகும்.

Hyundai Venue Executive side
Hyundai Venue Executive 16-inch wheels with stylised covers

வென்யூ எக்ஸிகியூட்டிவின் பக்கவாட்டில் பார்க்கும் போது அதன் பாடி கலரிலிலேயே உள்ள டோர் ஹேண்டில்கள் மற்றும் ORVM இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். ஹூண்டாய் இந்த வேரியன்ட்டை ஸ்டைலிஷ் 16 இன்ச் வீல்களுடன் வசீகரிக்கும் வீல் கவர்கள் மற்றும் ரூஃப் ரெயில்களுடன் ஸ்போர்ட்டி தன்மையை கொடுக்கின்றது.

Hyundai Venue Executive rear
Hyundai Venue rear featuring the 'Executive' badge

பின்புறத்தில் வென்யூ எக்ஸிகியூட்டிவ் டெயில்கேட்டில் 'எக்ஸிகியூட்டிவ்' மற்றும் 'டர்போ' பேட்ஜ்களை கொண்டுள்ளது. இவை இதன் அடையாளத்தை வேறுபடுத்தி காட்டுகின்றது. இருப்பினும், S(O) வேரியன்ட்டை போல இல்லாமல், இது கனெக்டட் LED டெயில்லைட்களை கொண்டிருக்கவில்லை. லைட்டிங் செட்டப்பின் கீழ் இந்த வேரியன்ட்டின் ரியர் ப்ரொபைலில் 'வென்யூ' மோனிகருடன் 'ஹூண்டாய்' லோகோவையும் நாம் பார்க்க முடிகின்றது.

உட்புறம்

Hyundai Venue Executive cabin
Hyundai Venue Executive rear seats with 2-step recline function for the backrests

வென்யூ எக்ஸிகியூட்டிவ் ஒரு ஸ்டைலான பிளாக் மற்றும் பெய்ஜ் கலர் கேபின் தீம்மை கொண்டுள்ளது. இது ஏசி வென்ட்கள், சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் வீலை சுற்றி சில்வர் ஆக்ஸெண்ட்களையும் கொண்டுள்ளது. கேபினுக்குள் அனைத்து பயணிகளுக்கும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள், 60:40 ஸ்பிலிட் ஃபோல்டிங் ரியர் சீட்கள், ஸ்டோரேஜுடன் கூடிய முன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பின்புற சீட்களுக்கு 2-படி ரெக்லைன் ஃபங்ஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும், S(O) வேரியன்டை போல் இல்லாமல் வென்யூ எக்ஸிகியூட்டிவில் ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் இதில் இல்லை.

Hyundai Venue Executive 8-inch touchscreen

 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங்-மவுண்டட் கண்ட்ரோல்கள், க்ரூஸ் கன்ட்ரோல்கள், ரியர் வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏர் கண்டிஷனிங் மற்றும் வாஷர் செயல்பாட்டுடன் கூடிய ரியர் வைப்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட் பெல்ட்கள் உள்ளிட்டவற்றுடன் வென்யூ எக்ஸிகியூட்டிவ் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது.

மேலும் படிக்க: இந்த ஏப்ரலில் ஒரு ஹூண்டாய் எஸ்யூவியை டெலிவரி எடுக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்

ஹூண்டாய் வென்யூ எக்ஸிகியூட்டிவ் இன்ஜின் ஆப்ஷன்

புதிய வென்யூ எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 120 PS மற்றும் 172 Nm டார்க்கை வழங்குகிறது, இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. மாறாக S(O) வேரியன்ட் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கான (DCT) கூடுதல் தேர்வை வழங்குகிறது.

ஹூண்டாய் அதன் சப்காம்பாக்ட் எஸ்யூவியை மற்ற இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது. முதலாவது 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (N/A) பெட்ரோல் இன்ஜின் 83 PS மற்றும் 114 Nm டார்க் அவுட்புட்டை கொடுக்கின்றது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆப்ஷன் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் 116 PS மற்றும் 250 Nm டார்க்கை உருவாக்கும், மேலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: கோடைக்காலத்தில் உங்கள் காரில் ஏன் சரியான டயர் அழுத்தம் இருக்க வேண்டும் என்பதைப் பாருங்கள்

விலை மற்றும் போட்டியாளர்கள்

ஹூண்டாய் வென்யூ எக்ஸிகியூட்டிவ் ரூ. 10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விற்பனை செய்யப்படுகிறது. சப்-4m எஸ்யூவி பிரிவில் இது டாடா நெக்ஸான், கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் போன்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க: ஹூண்டாய் வென்யூ ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் வேணு

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience