• English
    • Login / Register

    புதிய Hyundai Venue E+ வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    ஹூண்டாய் வேணு க்காக செப் 06, 2024 08:07 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 78 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    சன்ரூஃப் உடன் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான சப்காம்பாக்ட் எஸ்யூவி -யாக ஹூண்டாய் வென்யூ இப்போது மாறியுள்ளது.

    Hyundai Venue

    • எஸ்யூவி -யின் பேஸ்-ஸ்பெக் E மற்றும் மிட்-ஸ்பெக் S வேரியன்ட்களுக்கு இடையே புதிய E+ வேரியன்ட் விற்பனைக்கு வந்துள்ளது.

    • பேஸ்-ஸ்பெக் E -யை விட கூடுதலாக கிடைக்கும் ஒரே வசதி சன்ரூஃப் ஆகும்.

    • இந்த வேரியன்ட்டில் உள்ள மற்ற செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, முன்பக்க பவர் விண்டோஸ் மற்றும் மேனுவல் ஏசி ஆகியவை உள்ளன.

    • 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

    • 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கனெக்ட் செய்யப்பட்ட 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே இது கிடைக்கும்.

    • இதன் விலை ரூ.7.94 லட்சம் முதல் ரூ.13.48 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரையில் பட்ஜெட் மார்கெட் கார்களில் கூட மிகவும் விரும்பப்படும் ஒன்றாக சன்ரூஃப் வசதி மாறியுள்ளது. ஹூண்டாய் இந்த வசதியை அந்தந்த மாடல்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வேரியன்ட்களிலும் வழங்கத் தொடங்கியுள்ளது. அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் ஹூண்டாய் வென்யூ ஆகும். இது இப்போது ஒரு புதிய லோயர்-ஸ்பெக் E+ வேரியன்ட்டை பெற்றுள்ளது, இது சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் வருகிறது. 

    விலை

    E

    E+ (சன்ரூஃப் உடன்)

    வித்தியாசம்

    ரூ.7.94 லட்சம்

    ரூ.8.23 லட்சம்

    + ரூ.29,000

    விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

    ஹூண்டாய் வென்யூ -வின் புதிய சன்ரூஃப் பொருத்தப்பட்ட E+ வேரியன்ட், பேஸ்-ஸ்பெக் E வேரியன்ட்டை காட்டிலும் ரூ.29,000 அதிகம். ரூ. 8.23 லட்சம் என்ற விலையில் வென்யூ இப்போது இந்தியாவில் சன்ரூஃப் உடன் கிடைக்கும் விலை குறைவான சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆகும்.

    Hyundai Venue with sunroof

    E+ வேரியன்ட்டின் மற்ற வசதிகள்

    வென்யூவின் இந்த புதிய வேரியன்ட், செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, அனைத்து இருக்கைகளுக்கும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள், 60:40 ஸ்பிளிட் பின் இருக்கைகள், முன் பவர் விண்டோஸ் மற்றும் மேனுவல் ஏசி போன்ற வசதிகளுடன் வருகிறது. இது டில்ட்-அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் வீல், முன்புறத்தில் டைப்-சி USB சார்ஜர் மற்றும் டே/நைட் ஐஆர்விஎம் (ரியர் வியூ மிரர் உள்ளே) ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த புதிய E+ வேரியன்ட்டில் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), EBD உடன் ABS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயின்ட் சீட் பெல்ட் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் பார்க்க: சன் ரூஃப் உடன் Hyundai Exter -ன் புதிய வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளன

    பவர்டிரெய்ன் விவரங்கள்

    ஹூண்டாய் வென்யூவின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

    இன்ஜின்

    1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

    பவர்

    83 PS

    டார்க்

    114 Nm

    டிரான்ஸ்மிஷன்

    5-ஸ்பீடு MT

    Hyundai Venue Rear

    வென்யூ இ+ வேரியன்ட் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும். வென்யூவின் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களில் 120 PS 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன்) மற்றும் 116 PS 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் கிடைக்கும் (6-ஸ்பீடு MT உடன்).

    விலை & போட்டியாளர்கள்

    ஹூண்டாய் வென்யூவின் விலை ரூ.7.94 லட்சம் முதல் ரூ.13.48 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது. இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், மஹிந்திரா XUV 3XO, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் உடனும் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் காருடனும் போட்டியிடும்.

    வாகன உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    மேலும் படிக்க: ஹூண்டாய் வென்யூ ஆன் ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Hyundai வேணு

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience