ஹூண்டாய் எக்ஸ்டர் vs டாடா பன்ச்: ஆகஸ்ட் 2023 விற்பனை மற்றும் செப்டம்பர் மாத காத்திருப்பு காலம்
published on செப் 13, 2023 06:56 pm by rohit for ஹூண்டாய் எக்ஸ்டர்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் எக்ஸ்டெர் காத்திருப்பு காலம் 3 முதல் 8 மாதங்கள் வரையாகும். அதே நேரத்தில் டாடா பன்ச் காரை ஒரு மாதம் முதல் 3 மாதங்களில் வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும்.
-
ஹூண்டாய் எக்ஸ்டர் ஜூலை 2023 இல் டாடா பன்ச் -க்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது
-
டாடா ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10,000 பன்ச் கார்களை விற்பனை செய்கிறது.
-
ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியதில் இருந்து 7,000 எக்ஸ்டர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
-
இரண்டு எஸ்யூவி -களும் ஒரே மாதிரியான விலை வரம்பை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) கொண்டுள்ளன.
அக்டோபர் 2021 முதல் மைக்ரோ எஸ்யூவி களத்தில் ஏகபோக உரிமை செலுத்தி வந்த டாடா பன்ச் ஜூலை 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டரின் வடிவத்தில் நேரடி போட்டியை எதிர்கொண்டுள்ளது. ஹூண்டாய் எஸ்யூவிக்கு மார்க்கெட்டில் அறிமுகத்திய ஒரு மாதத்திலேயே 50,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது டாடா பன்ச் -சின் தேவையை பாதித்ததா? கடந்த இரண்டு மாதங்களில் பெட்ரோல்-மட்டும் பயன்படுத்தும் மைக்ரோ-எஸ்யூவிகள் இரண்டின் விற்பனையையும் அவற்றின் தற்போதைய காத்திருப்பு நேரத்தையும் கீழே பார்க்கலாம்.
விற்பனை விவரம்
Model மாடல் |
ஜூலை 2023 |
ஆகஸ்ட் 2023 |
ஹூண்டாய் எக்ஸ்டர் |
7,000 கார்கள் |
7,430 கார்கள் |
டாடா பன்ச் |
12,019 கார்கள் |
14,523 கார்கள் |
ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2023 -ல் விற்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் பன்ச் அதன் பிரதான போட்டியாளரை விட முன்னிலை பெற்றுள்ளது. டாடா தொடர்ந்து 10,000 க்கு மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது அதேசமயம் எக்ஸ்டரின் விற்பனை சுமார் 7,000 வாகனங்களையே சுற்றி உள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டரின் வருகையைத் தொடர்ந்து பன்ச் சிஎன்ஜி வேரியன்ட் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றையும் சேர்த்தது. பன்ச் அதன் போட்டியாளரை முந்தியிருக்கும் மற்றொரு விஷயம் அதன் மாதாந்திர உற்பத்தி திறன் ஆகும்.
மேலும் படிக்க: Tata Punch CNG vs Hyundai Exter CNG - கிளைம்டு மைலேஜ் ஒப்பீடு
ஒரு வாகனத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல எவ்வளவு காலம் ஆகும்?
மாடல் |
செப்டம்பர் 2023 காத்திருப்பு காலம் |
ஹூண்டாய் எக்ஸ்டர் |
3 முதல் 8 மாதங்கள் வரை |
டாடா பன்ச் |
1 முதல் 3 மாதங்கள் வரை |
இரண்டு மாடல்களின் கிடைக்கும் காலத்தை கருத்தில் கொண்டு பார்த்தால் இது டாடா எஸ்யூவி -தான் முன்னிலையில் உள்ளது. நீங்கள் இப்போது ஒரு எக்ஸ்டரை வாங்கினால், அதை டெலிவரி எடுக்க இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும், மேலும் எந்த பெரிய நகரத்திலும் அது உடனடியாகக் கிடைக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட் மற்றும் நிறத்தை பொறுத்து ஒவ்வொரு மாடலுக்கான காத்திருப்பு நேரம் மாறுபடும் என்பதை நினைவில் வைக்கவும்.
தொடர்புடையது: ரூ. 1 கோடி வென்ற கேபிசி 2023 போட்டியாளருக்கு Hyundai Exter கார் பரிசாக வழங்கப்பட்டது
வேரியன்ட்கள் மற்றும் விலை
ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டரை EX, S, SX, SX (O) மற்றும் SX (O) கனெக்ட் ஆகிய ஆறு வேரியன்ட்களில் விற்பனை செய்கிறது - இதன் விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 10.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயம் செய்துள்ளது. பன்ச் நான்கு பரந்த வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது - பியூர், அட்வென்ச்சர், அகாம்ப்லிஷ்ட் மற்றும் கிரியேட்டிவ் - அதன் ஹூண்டாய் போட்டியாளரை போலவே ஒரே விலை வரம்பை கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: ஹூண்டாய் எக்ஸ்டர் vs டாடா பன்ச்: படங்களில் ஒப்பீடு
மேலும் படிக்க: ஹூண்டாய் எக்ஸ்டர் AMT
0 out of 0 found this helpful