ரூ. 1 கோடி வென்ற கேபிசி 2023 போட்டியாளருக்கு Hyundai Exter கார் பரிசாக வழங்கப்பட்டது
published on செப் 07, 2023 06:49 pm by rohit for ஹூண்டாய் எக்ஸ்டர்
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரூ. 7 கோடி -க்கான கேள்வி -க்கு சரியான பதிலை சொல்லும் போட்டியாளர்களுக்கு, போனஸ் பரிசாக ஹூண்டாய் வெர்னாவாக அப்கிரேட் செய்யப்படும்.
-
எக்ஸ்டர் ஹூண்டாயின் புதிய என்ட்ரி லெவல் எஸ்யூவி ஆகும்.
-
5 வேரியன்ட்களில் விற்கப்படுகிறது: EX, S, SX, SX (O) மற்றும்SX (O) கனெக்ட். .
-
இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது: 1.2-லிட்டர் N.A. மற்றும் 1.2-லிட்டர் பெட்ரோல்+சிஎன்ஜி பவர்டிரெய்ன்.
-
இந்த காரில் உள்ள அம்சங்களில் 8-இன்ச் டச்ஸ்கிரீன், டூயல்-கேமரா டேஷ்கேம் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும்.
-
விலை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) தொடங்குகிறது.
இந்தியாவின் பிரபலமான டிவி கேம் ஷோக்களில் ஒன்றான கோன் பனேகா குரோர்பதி (கேபிசி). அதன் 15 -வது சீசன் தற்போது ஒளிபரப்பப்படுகிறது. நிகழ்ச்சியின் சமீபத்திய வெளியீடாக இப்போது அதன் முதல் போட்டியாளரான ஜஸ்கரன் ரூ.1 கோடியை வென்றுள்ளார், கூடுதலாக போனஸ் பரிசாக புத்தம் புதிய ஹூண்டாய் எக்ஸ்டரையும் பெற்றுள்ளார்.
அவர் ரூ.1 கோடி வென்ற பிறகு வினாடி வினாவில் இருந்து அவர் விளையாடுவதை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்தார், அவர் ரூ. 7 கோடி பரிசாகக் கேள்விக்கு சரியாகப் பதிலளித்திருந்தால், புதிய ஹூண்டாய் வெர்னாவைப் பெற்றிருப்பார். மைக்ரோ எஸ்யூவியின் எந்த வேரியன்ட் வெற்றியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும், இது ஃபுல்லி லோடட் SX(O) கனெக்ட் டிரிம் ஆக இருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம்.
ஹூண்டாய் எக்ஸ்டர்: சுருக்கமான விவரம்
எக்ஸ்டர் என்பது மைக்ரோ எஸ்யூவி ஸ்பேஸில் ஹூண்டாயின் போட்டியாளர் மற்றும் அதன் எஸ்யூவி வரிசையில் புதிய என்ட்ரி-லெவல் மாடலாக களமிறங்கியுள்ளது (முன்பு, இது வென்யூ -வாக இருந்தது). இது கிராண்ட் i10 நியோஸின் அதே தளத்தை அடிப்படையாக கொண்டது, மேலும் பாக்ஸி டிசைன் மற்றும் கேபினுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
ஹூட்டுக்கு கீழே என்ன இருக்கிறது?
ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி ஆனது 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் (83PS/114Nm), 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷன்களுடன் (69PS/95Nm) வருகிறது.
தொடர்புடையவை: ஹீண்டாய் எக்ஸ்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ
வசதிகள் நிரம்பியுள்ளது
ஹூண்டாய் எக்ஸ்டரில் 8-இன்ச் டச் ஸ்க்ரீன், டிஜிட்டலைஸ் செய்யப்பட்ட டிரைவர் டிஸ்ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவை உள்ளன. இது சிங்கிள் பேன் சன்ரூஃப், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் போன்ற வசதிகளுடன் வருகிறது.
ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ISOFIX சைல்டு சீட் மவுண்ட்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டூயல்-கேமரா டேஷ்கேம் மற்றும் ரிவர்சிங் கேமரா மூலம் பாதுகாப்பு கவனிக்கப்படுகிறது.
இதையும் பாருங்கள்: ஹீண்டாய் எக்ஸ்டர் vs டாடா பன்ச்: படங்களில் ஒப்பீடு
விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் எக்ஸ்டரின் விலையை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.10 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) நிர்ணயித்துள்ளது. மைக்ரோ எஸ்யூவி -யின் ஒரே நேரடி போட்டியாளர் டாடா பன்ச் ஆகும், ஆனால் இது ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், சிட்ரோன் சி3 மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ் ஓவர் ஆகியவற்றுக்கு மாற்றாகவும் இதை பார்க்கலாம்.
மேலும் படிக்க: ஹீண்டாய் எக்ஸ்டர் AMT