அறிமுகத்திற்கு முன்னரே 10,000 க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்ற ஹூண்டாய் எக்ஸ்டர்
published on ஜூலை 11, 2023 01:38 pm by ansh for ஹூண்டாய் எக்ஸ்டர்
- 52 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் எக்ஸ்டரின் டெலிவரி ஜூலை 11 ஆம் தேதி முதல் தொடங்கும்.
-
எக்ஸ்டரின்- விலை ரூ.5.99 லட்சம் (அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.
-
மைக்ரோ-எஸ்யூவி க்கான முன்பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது.
-
1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் அதே சமயம் CNG இன்ஜின்களின் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.
-
8- இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , வாய்ஸ்-எனேபில்டு சிங்கிள்-பேன் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
மூன்று மாத கால காத்திருப்புக்குப் பிறகு, ஹூண்டாய் எக்ஸ்டர் சந்தையில் நுழைந்ததுள்ளது, இதன் ஆரம்ப விலை ரூ 5.99 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்டர் டாடா பன்ச் மற்றும் மாருதி இக்னிஸ் ஆகியவற்றுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும் மற்றும் இது ஏற்கனவே அதிகளவு முன்பதிவுகளையும் பெற்றுள்ளது. அதன் முன்பதிவு மற்றும் டெலிவரி விவரங்கள் இதோ:
முன்பதிவு & டெலிவரி
எக்ஸ்டருக்கான முன்பதிவுகள் 2 மாதங்களுக்கும் மேலாக ரூ. 11,000 டோக்கன் தொகைக்கு திறக்கப்பட்டுள்ளன, அது அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் 10,000-க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றிருந்தது. ஹூண்டாய் இதன் டெலிவரிகள் ஜூலை 11 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பவர்டிரெயின்
எக்ஸ்டர் 82PS மற்றும்113Nm அவுட்புட்டைக் கொடுக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பெற்றுள்ளது இந்த யூனிட் 5 வேக மேனுவல் உடனோ அல்லது 5 வேக AMT உடனோ இணைக்கப்பட்டுள்ளது அதே இன்ஜினை பயன்படுத்தும் CNG பவர்டிரெய்னையும் இது பெறுகிறது மற்றும் 69PS மற்றும் 95Nm -ன் குறைந்த அவுட்புட்டைக் உருவாக்குகிறது. இந்த CNG வேரியன்ட்கள் அனைத்தும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகின்றன.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 8 -இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குரல் கட்டளைகளுடன் கூடிய சிங்கிள்-பேன் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் இரண்டு கேமராக்கள் கொண்ட டாஷ் கேமரா ஆகிய அம்சங்களால் ஹூண்டாய் எக்ஸ்டரை நிறைத்துள்ளது.
மேலும் படிக்கவும்: கிரான்ட் i10 நியோஸ் ஐ விட இந்த 5 கூடுதல் அம்சங்களைப் பெற்றுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர்
இதன் ஸ்டாண்டர்டான பாதுகாப்பு கிட்டில் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM) மற்றும் அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள் ஆகியவை அடங்கும். மைக்ரோ-எஸ்யூவிஇன் உயர் கார் வகைகள் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), டே அண்ட் நைட் IRVM, ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் ரியர்வியூ கேமரா போன்ற அம்சங்களையும் பெறுகின்றன.
விலை & போட்டியாளர்கள்
இதன் முழு விலை பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் மேனுவல் வேரியன்ட்களின் விலைகள் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளன. எக்ஸ்டெர் டாடா பன்ச் மற்றும் மாருதி இக்னிஸ் ஆகியவற்றுக்கு நேரடி போட்டியாக உள்ளது, ஆனால் . சிட்ரோன் C3, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் ஆகியவற்றுக்கும் ஒரு மாற்றாக கருதப்படலாம்.
மேலும் படிக்க: எக்ஸ்டர் AMT