• English
  • Login / Register

20 படங்களில் விரிவான விவரங்களுடன் ஹூண்டாய் எக்ஸ்டர்

published on ஜூலை 19, 2023 04:05 pm by ansh for ஹூண்டாய் எக்ஸ்டர்

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் எக்ஸ்டரின் கேபின், வண்ணங்களைத் தவிர கிராண்ட்  i10 நியோஸ் காரின் கேபினைப் போலவே உள்ளது.

Hyundai Exter

  • எக்ஸ்டர் ஆனது கிரான்ட் i10 நியோஸ் -ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதேபோன்ற வடிவமைக்கப்பட்ட கேபினைப் பகிர்ந்து கொள்கிறது.

  • H-வடிவ லைட் வடிவமைப்புடன் முன்புறம் மற்றும் பின்புறத்துடன் ஒரு வலுவான எஸ்யூவி வடிவமைப்பைப் பெறுகிறது.

  • பகுதியளவு தோலினால் ஆன இருக்கைகளுடன் ஆல்-பிளாக் கேபினுடன் வருகிறது.

  • 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒற்றை-பேன் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • 83PS மற்றும் 114Nm ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

  • ஹூண்டாய், எக்ஸ்டரின் விலையை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.10 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம் டெல்லி) நிர்ணயித்துள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டர்,  ஹூண்டாய் நிறுவனத்தின் கேரேஜிலிருந்து வெளிவந்த சமீபத்திய கார், ரூ. 6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் அது  கிரான்ட் i10 நியோஸ் ஹேட்ச்பேக்கை அடிப்படையாக கொண்டுள்ளது. இது ஹேட்ச்பேக்கின் அதே கேபின் வடிவமைப்பைப் பெறுகிறது ஆனால் எஸ்யூவி அவதாரத்தில் வருகிறது. எக்ஸ்டர்  உடன் சிறிது நேரம் செலவழித்துள்ளோம், இப்போது, ​​இந்த விரிவான படங்கள் மூலம் நீங்கள் அதைப் பார்க்கலாம்:

வெளிப்புறம்

முன்பக்கம்

Hyundai Exter Front

ஹூண்டாய் எக்ஸ்டெர் நன்கு வரையறுக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் பெட்டி போன்ற அவுட்லைன் கொண்ட ஒரு வலுவான முன்பகுதியைப் பெறுகிறது. இது ஒரு கடினமான கிரில்லைப் பெறுகிறது, இது பெரும்பாலான சங்கி பம்பர் -ஐ எடுத்துக்கொண்டு விளிம்புகள் வரை நீண்டு, சதுர வடிவ ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுக்கான ஹௌசிங்குடன் இணைகிறது. முக்கிய ஸ்கிட் பிளேட் வடிவமைப்புக்கு ஏற்றபடி முரட்டுத்தனத்தை சேர்க்கிறது.

Hyundai Exter Headlamps and DRLs

மைக்ரோ-எஸ்யூவி ஆனது ஸ்பிளிட்-ஹெட்லைட் வடிவமைப்பிற்காக தனித்தன்மையான H-வடிவ LED DRL-களை பானட் லைனில் பெறுகிறது.

மேலும் படிக்கவும்: ஹூண்டாய் கிரான்ட் i10 நியோஸ் vs வென்யு Vs எக்ஸ்டர்:விலை ஒப்பீடு

பக்கவாட்டுப் பகுதி

Hyundai Exter Side

எக்ஸ்டரின் பக்கவாட்டுப் பகுதி, அது உண்மையில் எவ்வளவு உயரமானது மற்றும் நிமிர்ந்து இருக்கிறது என்பதற்கான சிறந்த தோற்றத்தை உங்களுக்கு வழங்குகிறது. இது ஒரு பரந்த நிலைப்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட பின்புற ஹேஞ்ச் -களுடன் தெளிவான வடிவத்தைப் பெறுகிறது, கூடுதல் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக தடிமனான கிளாடிங்குடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் டாப் டிரிமில் இங்கு பார்க்கப்பட்டால், பிளாக் அவுட் செய்யப்பட்ட தூண்கள் மற்றும்  ரூஃப் ரெயில்கள் போன்ற பிரீமியம் டச்களை பெறுகிறது.

Hyundai Exter C-Pillar

கிரில்லைப் பொருத்த சி-பில்லரில் ஒரு சிறிய கடினமான பகுதியும் உள்ளது.

Hyundai Exter Alloy Wheels

ஹூண்டாய் எஸ்யூவி ஆனது 15-இன்ச் டூயல்-டோன் டைமண்ட்-கட் அலாய் வீல்களுடன் 175-இன்ச் ரப்பரால் மூடப்பட்டுள்ளது.

பின்பக்கம்

Hyundai Exter Rear

பின்பக்க தோற்றமானது நாம் முன்பக்கத்தில் பார்த்த வலுவான தோற்றத்தைக் கொண்டுள்ளது, வடிவமைப்புடன் நன்றாகப் பொருந்துகிறது. இது நேர் கோடுகளுடன் கூடிய உறுதியான பின்புற தோற்றம்  மற்றும் உயரமான சில்வர் ஸ்கிட் பிளேட்டுகளைக் காட்டும் பெரிய பம்பரைப் பெறுகிறது.

Hyundai Exter Tail lamp
Hyundai Exter

டெயில் விளக்குகள் H-வடிவ LED  உறுப்புடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை ஹூண்டாய் லோகோவைக் கொண்டிருக்கும் கிரில்லின் அதே கடினமான தோற்றத்துடன் தடிமனான கருப்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளன.

உட்புறம்

டாஷ்போர்டு

Hyundai Exter Dashboard

எக்ஸ்டர் ஆனது கிரான்ட் i10 நியோஸ் போன்ற டேஷ்போர்டு லே அவுட்டைப் பெறுகிறது மற்றும் வண்ணத் திட்டம் மட்டுமே வித்தியாசமாக இருக்கும். எக்ஸ்டெர் முற்றிலும் கருப்பு நிற கேபினுடன் வருகிறது, ஆனால் ரூஃபின் லூனிங் மற்றும் தூண்களின் உட்புறங்களுக்கு சாம்பல் நிறத்துடன் வருகிறது. வெளிப்புற நிறத்தின் அடிப்படையில் கேபின் உச்சரிப்புகளுடன் கூடிய வண்ணம் பல நிறைந்துள்ளது.

Hyundai Exter Dashboard Pattern

இங்கே, டாஷ்போர்டின் பயணிகள் பக்கத்தில் உள்ள வைர வடிவத்தையும், ஏசி வென்ட்டைச் சுற்றி நீல நிறச் இன்செர்ட்டையும், காஸ்மிக் ப்ளூ வெளிப்புற ஷேடுடன் (எக்ஸ்டீரியர் ஷேடைப் பொறுத்து நிறம் மாறுபடும்) பொருந்தும். சிறிய பொருட்களை வைப்பதற்கும் ஒரு சிறிய இடம் உள்ளது.

மேலும் படிக்கவும்:  ஹூண்டாய் எக்ஸ்டர் ஆனது டாடா பன்ச்  ஐ விட கூடுதலாக  இந்த 7 அம்சங்களைப் பெறுகிறது

Hyundai Exter Steering Wheel

கிரான்ட் i10 நியோஸ் இலிருந்து எக்ஸ்டர் -ன் டாஷ்போர்டில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகும். மைக்ரோ எஸ்யூவி ஆனது 4.2-இன்ச் TFT மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளேவுடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட செட்டப்பை பெறுகிறது. டாப் வேரியண்ட் தோலினால் உறையிடப்பட்ட ஸ்டீயரிங் வீலுடன் வருகிறது, வெளிப்புறத்துடன் பொருந்தக்கூடிய கான்ட்ராஸ்ட் தையல் இங்கே காணப்படுகிறது.

Hyundai Exter Dashcam

இந்தக் கண்ணோட்டத்தில், எக்ஸ்டரின் டூயல்-கேமரா வடிவமைப்புக்கு ஏற்றபடி டாஷ் கேம் IRVM க்கு பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் சிறிது இடதுபுறம், முன்னோக்கிச் செல்லும் சாலையைப் பற்றிய ஓட்டுநரின் பார்வையில் தலையிடாது.

Hyundai Exter AMT Transmission
Hyundai Exter Paddle Shifters

பேடில் ஷிஃப்டர்களுடன் எக்ஸ்டர்  AMTயை வழங்குவதன் மூலம் ஹூண்டாய் இந்த பிரிவில் தனது போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது.

இன்ஃபோடெயின்மென்ட் & கிளைமேட் கன்ட்ரோல்

Hyundai Exter Infotainment System

எக்ஸ்டர் ஆனது, கிராண்ட் i10 நியோஸிலும் காணப்படுவது போல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8-இன்ச் டச் ஸ்கிரீன்  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்குகிறது.

Hyundai Exter Automatic Climate Control

ஆட்டோ  AC -க்கான கிளைமேட் கன்ட்ரோல்ம் (பின்புற AC வென்ட்களுடன்) ஹூண்டாய் ஹேட்ச்பேக்கில் உள்ள பேனலைப் போலவே உள்ளது. வட்ட வடிவ  AC வென்ட்களைப் போலவே, டயல் சுற்றுப்புறங்களுக்கும் பிரகாசமான ஆக்ஸன்ட்களை பெறுவீர்கள்.

Hyundai Exter Wireless Phone Charger

கிளைமேட் கன்ட்ரோல்களின் கீழ், வயர்லெஸ் சார்ஜிங் பேட் மற்றும் USB Type-C மற்றும் டைப்-ஏ போர்ட்கள் மற்றும் 12V பவர் சாக்கெட் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.

மேலும் காணவும்: நீங்கள்  ஹூண்டாய்  எக்ஸ்டர்-ஐ 9 வெவ்வேறு வண்ணங்களில் வாங்கலாம்

இருக்கைகள்

Hyundai Exter Seats

இது நடுவில் துணி மற்றும் பக்கவாட்டில் தோல் கூறுகளுடன் கூடிய பகுதி -தோலினால் மூடப்பட்ட இருக்கைகளைப் பெறுகிறது. துணி பேக்ரெஸ்ட்களின் நிறமும் வெளிப்புற ஷேடுகளைப் பொறுத்தது. இங்கே, காஸ்மிக் ப்ளூ பெயிண்ட் ஆப்ஷனாக கிடைக்கும், பொருந்தக்கூடிய இருக்கைகளில் குறுக்கு தையல் மற்றும் பீடிங் ஆகியவற்றைப் பெறுகிறது.

Hyundai Exter Sunroof

இந்த இருக்கைகளில் இருந்து, நீங்கள் குரலால் இயங்கும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் அணுகலாம், இது ஹூண்டாய் எக்ஸ்டரின் சிறப்பம்சமாகும் மற்றும் மைக்ரோ-எஸ்யூவி பிரிவில் முதல் வரவு ஆகும்.

Hyundai Exter

ஹூண்டாய் எக்ஸ்டெர் காரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.10 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் மற்றும் டாடா பன்ச் மற்றும் மாருதி இக்னிஸ் ஆகியவற்றுக்கு நேரடி போட்டியாக உள்ளது.. மைக்ரோ-எஸ்யூவிக்கு ம் மாருதி ஃப்ரான்க்ஸ், சிட்ரோன் C3, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகியவற்றுக்கு மாற்றாக கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும்: ஹூண்டாய் எக்ஸ்டர் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai எக்ஸ்டர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience