• English
  • Login / Register

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் vs கியா செல்டோஸ் vs மாருதி கிராண்ட் விட்டாரா vs ஹோண்டா எலிவேட்: கார்களின் விலை ஒப்பீடு

published on ஜனவரி 17, 2024 05:46 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா

  • 482 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவை டீசல் இன்ஜினை வழங்கும் ஒரே சிறிய எஸ்யூவி -கள் ஆக உள்ளன. அதே நேரத்தில் கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் ஆகியவை ஆப்ஷனலாக ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெறுகின்றன.

2024 ஹூண்டாய் கிரெட்டா  -வுக்கான விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. காரின் விலை 11 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகின்றது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா -வில் கூடுதலான வசதிகள், புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உள்ளேயும் வெளியேயும் வடிவமைப்பிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த காம்பாக்ட் எஸ்யூவி, விலை அடிப்படையில் அதன் பிரிவில் உள்ள கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகிய கார்களுடன் எப்படி போட்டியிடுகின்றது என்பதை இங்கே பார்ப்போம்.

பெட்ரோல் மேனுவல்

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

கியா செல்டோஸ்

மாருதி கிராண்ட் விட்டாரா

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்

ஹோண்டா எலிவேட்

E - ரூ.11 லட்சம்

HTE- ரூ.10.90 லட்சம்

சிக்மா - ரூ.10.70 லட்சம்

E- ரூ.11.14 லட்சம்

 
       

SV- ரூ. 11.58 லட்சம்

EX - ரூ.12.18 லட்சம்

HTK- ரூ.12.10 லட்சம்

டெல்டா - ரூ. 12.10 லட்சம்

 

V- ரூ. 12.31 லட்சம்

     

S- ரூ 12.81 லட்சம்

 

S - ரூ.13.39 லட்சம்

HTK பிளஸ்- ரூ.13.50 லட்சம்

ஜெட்டா - ரூ 13.91 லட்சம்

 

VX- ரூ.13.70 லட்சம்

S(O) - ரூ.14.32 லட்சம்

   

G- ரூ.14.49 லட்சம்

 
 

HTK பிளஸ் டர்போ iMT - ரூ.15 லட்சம்

     

SX - ரூ.15.27 லட்சம்

HTX- ரூ.15.18 லட்சம்

ஆல்பா - ரூ.15.41 லட்சம்

 

ZX- ரூ. 15.10 லட்சம்

SX டெக் - ரூ. 15.95 லட்சம்

   

V- ரூ.16.04 லட்சம்

 
   

ஆல்பா AWD - ரூ. 16.91 லட்சம்

   

SX (O) - ரூ. 17.24 லட்சம்

   

V AWD - ரூ.17.54 லட்சம்

 
 

HTX பிளஸ் டர்போ iMT - ரூ.18.28 லட்சம்

     
  • மாருதி கிராண்ட் விட்டாரா இங்கு மிகக் குறைந்த தொடக்க விலையுடன் அதாவது ரூ.10.70 லட்சத்தில் உள்ளது. இது ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்டை விட ரூ.30,000 குறைவாகவும், கியா செல்டோஸை விட ரூ.20,000 குறைவாகவும் உள்ளது.

 Honda ELevate

  • ஹோண்டா எலிவேட் ரூ. 11.58 லட்சம் ஆரம்ப விலையாக இருந்தாலும், அதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட் ரூ.15.10 லட்சத்தில் உள்ளது, இது இந்த ஒப்பீட்டில் அனைத்து எஸ்யூவி -களிலும் மிகவும் குறைவான விலையில் உள்ளது. இதற்கிடையில், செல்டோஸ் மற்றும் ஹைரைடரின் டாப்-எண்ட் பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்களை விட டாப்-ஸ்பெக் பெட்ரோல்-மேனுவல் கிரெட்டா மிகவும் விலை குறைவு.

  • இங்குள்ள ஒவ்வொரு எஸ்யூவி -யும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது. கிரெட்டா மற்றும் செல்டோஸில், இது 115 PS மற்றும் 144 Nm 6-ஸ்பீடு மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா இன்ஜின் 121 PS அவுட்புட்டுடன், 6-ஸ்பீடு மேனுவலுடன் அதிக பன்ச்சை கொடுக்கின்றது. 

  • செல்டோஸ் அதன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (160 PS / 253 Nm) iMT கியர்பாக்ஸ் (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனை வழங்கும் பிரிவில் உள்ள ஒரே எஸ்யூவி -யாக தனித்து நிற்கிறது.

Maruti Grand Vitara

  • மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் அதே 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினுடன் (103 PS / 137 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இங்கு மிகக் குறைவான பவரை கொண்ட ஆப்ஷனாகும், ஆனால் ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷனை பெறும் ஒரே சிறிய எஸ்யூவி -கள் இவை மட்டுமே.

இதையும் பார்க்கவும்: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டாவின் ஒவ்வொரு வேரியன்ட்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

பெட்ரோல் ஆட்டோமெட்டிக்

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

கியா செல்டோஸ்

மாருதி கிராண்ட் விட்டாரா

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்

ஹோண்டா எலிவேட்

   

டெல்டா - ரூ.13.60 லட்சம்

 

V- ரூ.13.41 லட்சம்

     

S- ரூ.14.01 லட்சம்

 
       

VX- ரூ.14.80 லட்சம்

S (O) CVT - ரூ.15.82 லட்சம்

 

ஜெட்டா - ரூ.15.41 லட்சம்

G- ரூ.15.69 லட்சம்

 
 

HTX CVT- ரூ.16.58 லட்சம்

ஆல்பா - ரூ.16.91 லட்சம்

S (ஹைப்ரிட்)- ரூ.16.66 லட்சம்

ZX- ரூ.16.20 லட்சம்

SX டெக் CVT - ரூ 17.45 லட்சம்

   

V- ரூ.17.24 லட்சம்

 

SX (O) CVT - ரூ 18.70 லட்சம்

 

ஜெட்டா பிளஸ் (ஹைப்ரிட்) - ரூ.18.33 லட்சம்

G (ஹைப்ரிட்)- ரூ.18.69 லட்சம்

 
 

HTX பிளஸ் டர்போ DCT- ரூ.19.18 லட்சம்

     
 

GTX பிளஸ் (S) டர்போ DCT- ரூ 19.38 லட்சம்

     
 

X லைன் (S) - ரூ 19.60 லட்சம்

     

SX (O) டர்போ DCT - ரூ 20 லட்சம்

GTX பிளஸ் டர்போ DCT - ரூ 19.98 லட்சம்

ஆல்பா பிளஸ் (ஹைப்ரிட்) - ரூ 19.83 லட்சம்

   
 

X லைன் டர்போ DCT - ரூ 20.30 லட்சம்

 

V (ஹைபிரிட்)- ரூ 20.19 லட்சம்

 

2024 Hyundai Creta

  • 2024 கிரெட்டா பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கை பொறுத்தவரை, இது நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ஆப்ஷன்களுடன் (செல்டோஸ் போன்றது) CVT மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷனை (DCT) வழங்குகிறது.

  • CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட ஹோண்டா எலிவேட், மிகவும் குறைவான விலையில் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கொண்ட காம்பாக்ட் எஸ்யூவி -யாக உள்ளது, இது என்ட்ரி லெவல் கிராண்ட் விட்டாரா பெட்ரோல்-ஆட்டோ வேரியன்ட்டை விட ரூ.19,000 குறைவாக உள்ளது.

  • டாப்-ஸ்பெக் X லைன் டிரிமில், கியா செல்டோஸ் DCT இந்த ஒப்பீட்டில் மிகவும் விலையுயர்ந்த பெட்ரோல் ஆட்டோமெட்டிக் மாடலாக இருக்கின்றது.

 Toyota Urban Cruiser Hyryder

  • கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடரின் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்கள் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு எஸ்யூவி -களும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் வழங்கப்படுகின்றன, இது e-CVT கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும். இந்த யூனிட் 27.97 கிமீ/லி வரையிலான மைலேஜை கொடுக்கும் என உறுதியளிக்கிறது.

இதையும் பார்க்கவும்: ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் vs கியா செல்டோஸ்: மைலேஜ் ஒப்பீடு

டீசல் மேனுவல்

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

கியா செல்டோஸ்

E - ரூ.12.45 லட்சம்

HTE iMT - ரூ.12.00 லட்சம்

EX - ரூ.13.68 லட்சம்

HTK iMT- ரூ.13.60 லட்சம்

S - ரூ.14.89 லட்சம்

HTK பிளஸ் iMT - ரூ.15 லட்சம்

S(O) - ரூ.15.82 லட்சம்

 
 

HTX iMT - ரூ.16.68 லட்சம்

SX டெக் - ரூ.17.45 லட்சம்

 

SX (O) - ரூ.18.75 லட்சம்

HTX பிளஸ் iMT - ரூ.18.28 லட்சம்

  • ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு சிறிய எஸ்யூவிகள் மட்டுமே இன்னும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இரண்டும் ஒரே 1.5-லிட்டர் டீசல் யூனிட்டை (116 PS / 250 Nm) பயன்படுத்துகின்றன. இருப்பினும், புராப்பர் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனின் ஆப்ஷனை வழங்கும் கிரெட்டா, செல்டோஸ் டீசல் 6-ஸ்பீடு iMT உடன் வருகிறது.

 Kia Seltos

  • இதேபோன்ற விலையில் இருந்தாலும், செல்டோஸ் டீசல் ஹூண்டாய் கிரெட்டாவை விட ரூ.45,000 குறைவாக உள்ளது. கியாவின் டாப்-ஸ்பெக் டீசல்-மேனுவல் ஆப்ஷன் கூட ரூ.47,000 குறைவானது.

டீசல் ஆட்டோமெட்டிக்

ஹூண்டாய் கிரெட்டா

கியா செல்டோஸ்

S(O) - ரூ.17.32 லட்சம்

 
 

HTX- ரூ.18.18 லட்சம்

 

GTX பிளஸ் (S) - ரூ.19.38 லட்சம்

 

X-லைன் (S) - ரூ.19.60 லட்சம்

SX (O) - ரூ.20 லட்சம்

GTX பிளஸ் - ரூ.19.98 லட்சம்

 

X- லைன் - ரூ.20.30 லட்சம்

  • டீசல் ஆட்டோமேட்டிக்கை பொறுத்தவரை, செல்டோஸ் மற்றும் கிரெட்டா இரண்டும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் வருகின்றன.

  • கியா செல்டோஸை விட 86,000 ரூபாய் குறைவான என்ட்ரி-லெவல் டீசல்-ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை கிரெட்டா வழங்குகிறது.

  • மேட் வெளிப்புறத்துடன் கூடிய செல்டோஸ் X லைன் வேரியன்ட் இந்த ஒப்பீட்டில் மிகவும் விலையுயர்ந்த டீசல் ஆட்டோமெட்டிக் மாடலாகும், மேலும் இன்று காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் மிகவும் விலையுயர்ந்த தேர்வாகும்.

2024 ஹூண்டாய் கிரெட்டா இப்போது பிரீமியம் வசதிகளின் அடிப்படையில் கியா செல்டோஸுடன் நெருக்கமாகப் பொருந்துகிறது, இரண்டு எஸ்யூவி -களும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ள மற்ற போட்டியாளர்களை விட அதிகமாக வழங்குகின்றன. ஹோண்டா எலிவேட் அதன் சிறந்த வேரியன்ட்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான விலையாக இருப்பதாக தோன்றலாம், அவை அவ்வளவு பொருத்தமாக இல்லை. இதற்கிடையில், மாருதி மற்றும் டொயோட்டா எஸ்யூவி உடன்பிறப்புகள் மைலேஜை கொடுக்கும் ஹைபிரிட் மற்றும் AWD ஆப்ஷனை உள்ளடக்கிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளையும் வழங்குகின்றன, ஆனால் செயல்திறன் அடிப்படையில் இது அவ்வளவு சிறப்பானதாக இல்லை.

அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது புதிய கிரெட்டாவின் விலையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பிரிவில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா டீசல்

was this article helpful ?

Write your Comment on Hyundai கிரெட்டா

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience