சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவுக்கான Hyundai i20 Facelift காரின் ஃபர்ஸ்ட் லுக் இங்கே

published on செப் 04, 2023 01:17 pm by tarun for ஹூண்டாய் ஐ20

ஃபேஸ்லிஃப்ட்டில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு மாற்றங்கள் குறைவாவே உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சில புதிய அம்சங்கள் காருக்கு புதிய பொலிவை தரும்.

  • டீஸரில் மாற்றியமைக்கப்பட்ட முன் கிரில், புதுப்பிக்கப்பட்ட LED விளக்குகள் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள பம்பர் ஆகியவற்றை பார்க்க முடிகிறது.

  • உலகளவில் வழங்கப்படும் புதிய அலாய் வீல்கள் மற்றும் ரெட்டன் பின்பக்க பம்பரையும் பெற்றுள்ளது.

  • புதிய அம்சங்களில் புதிய டிஜிட்டல் கிளஸ்டர், டூயல் கேமரா டேஷ்கேமரா மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை அடங்கும்.

  • பாதுகாப்புக்காக ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டானதாகவும், 360 டிகிரி கேமராவும் இருக்கலாம்.

  • ஹூண்டாய் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களை இதில் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தியாவுக்கான ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் முதல்முறையாக வெளியாகியுள்ளது, எதிர்பார்க்கப்பட்ட பண்டிகை கால வெளியீடான, நவம்பர் 2023 க்குள் இது அறிமுகப்படுத்தப்படலாம். இப்போதுள்ள பிரீமியம் ஹேட்ச் தலைமுறை 2020 -ல் அறிமுகமானது, அதன் பிறகு இப்போதுதான் முதல் பெரிய அப்டேட்டை பெறுகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் ஏற்கனவே மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

புதிதாக என்ன இருக்கிறது?

View this post on Instagram

A post shared by Hyundai India (@hyundaiindia)

முன்பக்கத்தில் உள்ள மாற்றங்கள் மிகவும் நுட்பமாக தோன்றினாலும் ஸ்போர்ட்டியர் லுக்கை கொடுக்கிறது. புதிய ட்வீக் செய்யப்பட்ட ஹூண்டாய் கேஸ்கேடிங் கிரில், அதேபோன்ற இன்வெர்டட் LED டேடைம் விளக்குகள் (DRL) கொண்ட புதிய ஹெட்லேம்ப் லைட் டிஸைன், புதிய வடிவத்திலான பம்பர் மற்றும் சைடு இன்டேக்குகள் உள்ளன. ஹூண்டாய் லோகோ அனைத்து சமீபத்திய மாடல்களிலும் நாம் பார்ப்பது போல் புதிய தோற்றத்தை கொண்டுள்ளது. மேலும், முன்புறம் உலகளவில் விற்கப்படும் i20 போலவே தோற்றமளிக்கிறது, இது மே மாதத்தில் ஃபேஸ்லிப்ட் அப்டேட்டை பெற்றது.

எதிர்பார்க்கப்படும் பிற மாற்றங்கள்

சர்வதேச அளவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலின் படி, 2023 ஹூண்டாய் i20 புதிய அலாய் வீல்களையும் பெறும். பின்புறம் ஒரு கூர்மையான பம்பர் மற்றும் மிகவும் முக்கிய ஸ்கிட் பிளேட் மூலம் புதுப்பிக்கப்பட வாய்ப்புள்ளது. உட்புறம் புதிய அப்ஹோல்ஸ்டரியுடன் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: ஹூண்டாய் எக்ஸ்டெர் டாப்-ஸ்பெக் AMTக்கு எதிராக ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ-பெட்ரோல் இரட்டை கிளட்ச் கியர்பாக்ஸ் (DCT) - எதைத் தேர்ந்தெடுப்பது?

எதிர்பார்க்கப்படும் புதிய அம்சங்கள்

அப்டேட்டட் ஹேட்ச்பேக்கிற்கான புதிய அம்ச சேர்க்கைகளில் புதிய டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், டூயல் கேமரா டேஷ் கேம் மற்றும் மல்டி-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை அடங்கும். ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாகவும், 360 டிகிரி கேமரா ஆகியவை மூலமாக பாதுகாப்பை மேம்படுத்த முடியும். எதிர்காலத்தில் பல மாடல்களில் பிரீமியம் ஆட்டோமேட்டிக் டிரைவிங் அனுபவத்தை தரும் ADAS இருக்கும் என்று ஹூண்டாய் முன்பு தெரிவித்திருந்தது, ஆனால் i20 ஃபேஸ்லிஃப்ட்டில் அந்த தொழில்நுட்பத்தை தற்போதைக்கு வழங்க வாய்ப்பில்லை.

எலக்ட்ரிக் சன்ரூஃப், 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற பல நுணுக்கமான அம்சங்கள் நிறைந்த காராக இது இருக்கிறது.

அப்டேட்டட் பவர்டிரெயின்கள்

i20 ஃபேஸ்லிஃப்ட் அதே 83PS 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் தொடரலாம், இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் தொடர்ந்து மாறக்கூடிய (CVT) டிரான்ஸ்மிஷன்களின் தேர்வை பெறுகிறது. 120PS/172Nm 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினும் தக்கவைக்கப்படும். 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் முந்தையதை போலவே வழங்கப்படும், 6-ஸ்பீடு iMT பதிலாக 6-ஸ்பீடு மேனுவல் ஸ்டிக் கொடுக்கப்படலாம். இருப்பினும், ஹூண்டாய் ஹேட்ச்பேக் டீசல் இன்ஜின் ஆப்ஷனை மீண்டும் கொடுக்க வாய்ப்பில்லை.

மேலும் படிக்க: A.I. பரிந்துரைக்கும் இந்தியாவில் உள்ள ரூ.20 லட்சத்துக்கும் குறைவான டாப் 3 ஃபேமிலி எஸ்யூவிகள்

எதிர்பார்க்கப்படும் விலை

புதிய ஹூண்டாய் ஐ20 அதன் தற்போதைய விலை வரம்பான ரூ.7.46 லட்சம் முதல் ரூ.11.88 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம். மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா மற்றும் டாடா ஆல்ட்ரோஸ் போன்றவற்றுக்கு போட்டியாக இந்த ஹேட்ச்பேக் கார் இருக்கும். மேலும் i20 N லைன் மாடலும் ஃபேஸ்லிஃப்ட்டில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க: i20 ஆன் ரோடு விலை

t
வெளியிட்டவர்

tarun

  • 28 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹூண்டாய் ஐ20

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை