வைரலான மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் நீர்வீழ்ச்சி விபத்தில் என்ன தவறு நடந்தது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
modified on மார்ச் 01, 2023 07:03 pm by tarun for mahindra scorpio n
- 44 Views
- ஒரு கருத்தை எழுதுக
சன்ரூஃப்கள் பராமரிப்பு மட்டுமில்லாமல் வேறு பிரச்சினைகளையும் கொண்டு வரக்கூடும். மேலும் சில நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு கூட கேள்விக்குறியாகிவிடலாம்.
-
ஸ்கார்பியோ N -காரின் ஸ்பீக்கர்கள் மற்றும் கேபின் லைட் பேனல் வழியாக நீர் காருக்குள்ளே ஊடுடுருவியது பற்றிய வீடியோ ஒன்று வைரலானது.
-
சரியாக மூடப்படாத சன்ரூஃப் அல்லது அடைபட்ட டிரெயின் ஹோல்கள் இதற்கான காரணங்களாக இருந்திருக்ககூடும்.
-
ரூஃபில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் பேனல் சன்ரூஃபிற்குக் கீழே பொருத்த்தப்பட்டிருப்பதால் அதன் வழியாகவும் நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம்.
-
இந்த நிகழ்வினால் எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் பாதிப்படைந்திருக்கக் கூடும் மற்றும் கார் பாகங்கள் துருப்பிடிக்கு சிக்கலும் ஏற்படலாம்.
சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ N காரின் நீர்வீழ்ச்சியின் கீழ் நீர்க்கசிவாகும் வீடியோ வெளியாகி வைரலானது. காரின் உரிமையாளர் தனது ஸ்கார்பியோ N Z8L 4WD-இல் ஸ்பிட்டி என்ற இடத்துக்கு பயணம் செய்த போது இந்த நிகழ்வு பயணப்பாதையில் நிகழ்ந்தது.
என்ன தவறு நிகழ்ந்தது?
அந்த நபர் அவரது ஸ்கார்பியோ N -காரை ’விரைவாக மற்றும் இலவசமாக கார் வாஷ் செய்யும் நோக்கத்துடன்’ ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் கொண்டு சென்று நிறுத்தினார். ரூஃபில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்கள் மற்றும் கேபின் லைட் பேனல் வழியாக காருக்குள்ளே நீர் கசியத் தொடங்கியது. பேசன்ஜர் விண்டோவும் திறந்திருந்தது அதன் வழியாகவும் பெரும்பாலும் நீர் கசிந்துள்ளது; ஆனால் அதை மூடிய பிறகும் கூட நீர்க்கசிவு தொடர்ந்துள்ளது.
ஏன் இவ்வாறு நிகழ்ந்தது?
இந்த நிகழ்வுக்கு பல காரணங்கள் இருக்கலாம், முதலாவதாக சன்ரூஃப் முறையாக மூடப்படவில்லை. சன்ரூஃப் சரியாக அதன் இடத்தில் உள்ளதா எனவும் பேனலுக்கு இடையில் இடைவெளி இல்லை என்பதையும் சோதிப்பது மிகவும் அவசியம். சன்ரூஃப்களின் வடிவமைப்பு அப்படி அமைந்திருப்பதால் இது மாதிரியான பிரச்சினைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, அதில் நீர் சேர்வதும் சாத்தியமான ஒன்றுதான். பொதுவாக இந்த சன்ரூஃப் பேனல்களில் டிரெயின் துளைகள் (நீரை வடிகட்டும் துளைகள்) இருக்கும் .அதன்வழியாக சேர்ந்துள்ள நீர் பாதுகாப்பான வெளியேற்று பாதை வழியாக வெளியேறிவிடும்.
மேலும் படிக்க: மஹிந்திரா ஸ்கார்பியோ வின் லோ-என்ட் மாறுபாடுகள் கொண்ட கார்களுக்கான காத்திருப்பு காலம் முடிந்து இதோ அவை வெளிவர உள்ளன .
இந்த டிரெயின் துளைகளின் (வடிகட்டு துளைகளில்) தூசி, அழுக்கு அல்லது இலைகள் அடைத்திருந்தால் சன்ரூஃப் பேனலில் நீர் சேரத் துவங்கிவிடும். நீர்வீழ்ச்சியிலிருந்து விழுந்த அதிகப்படியான நீர் டிரெயின் துளையின் கொள்ளளவைவிட மிக அதிகமாக இருந்தது, அதனால் நகரும்போது ரூஃபில் சேர்ந்துள்ள நீர் கசியத் தொடங்கியது.
குறிப்பாக ஸ்கார்பியோ என் காரிலுள்ள மற்றொரு பிரச்சினை சன்ரூஃபில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் அவை சன்ரூஃப் பேனலுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் எப்பொழுதெல்லாம் சன்ரூஃபில் நீர் சேர்கிறதோ அது ஸ்பீக்கர்கள் மற்றும் கேபின் லைட் ஸ்விட்சுகள் வழியாக கசியத் தொடங்கும்.
பொதுவாக கார்களின் முதலாளிகள் இம்மாதிரி நீர்வீழ்ச்சிகளில் கார்களை ஓட்டுவது என்பது புதிய விஷயம் அல்ல. ஆனால் இம்மாதிரி ஒரு நிகழ்ச்சி இவ்வளவு கூடுதல் விலையுயர்ந்த கார்களுக்கு இதுவரை நடந்தது இல்லை ஒரு வேளை XUV700 இம்மாதிரி நீர்வீழ்ச்சிக்கு கீழ் பயணித்திருந்தால் பெரிய சன்ரூஃப் இருந்தாலும் கூட அந்தக் காரில் ஒன்றும் நிகழ்ந்திருக்காது.
மேலும் படிக்க: விவரம் இதோ! மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் மாறுபாடுகள் வாரிய அம்சங்கள்
கேபினுக்குள்ளே நீர் கசிவதால் எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் செயல்படாமல் போகலாம். மற்றும் கார் பாகங்கள் துருப்பிடிக்கலாம் என்று கூறுவது இந்த விஷயத்தில் சரியானதாக இருக்கும். சன்ரூஃபை இம்மாதிரியான செயல்பாடுகளின்போது தவிர்த்துவிடுவது பரிந்துரைக்கப்படுகிறது, அதுவே உங்களுக்கும் உங்கள் காருக்கும் பாதுகாப்பானது.
மேலும் படிக்கவும்: மஹிந்திரா ஸ்கார்பியோ என் இன் விலை
0 out of 0 found this helpful