உற்பத்திக்குத் தயாராக உள்ள Mahindra BE 05 பற்றிய சிறிய பார்வை இங்கே
published on ஆகஸ்ட் 17, 2023 03:41 pm by tarun for மஹிந்திரா be 05
- 47 Views
- ஒரு கருத்தை எழுதுக
BE 05, ஐசிஇ செயல்பாடு இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள மஹிந்திராவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி 2025- ம் ஆண்டில் வெளிவரும்.
-
உற்பத்திக்குத் தயாராக உள்ள மஹிந்திரா BE 05 அவதார் அதன் திட்டமிட்ட மாடலில் இருந்து சில வசதிகளை கொண்டிருக்கும்.
-
கண்ணாடி கூரை, ஃபிளஷ் டோர் கைப்பிடிகள், C வடிவ எல்இடி டெயில் லைட்ஸ் ஆகியவற்றை பெறும்.
-
அதிநவீன இன்டீரியர் டச் ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் டிரைவர் டிஸ்பிளேவுக்காக இன்டெகிரேட்டட் டூயல் ஸ்கிரீன்களை கொண்டிருக்கும்.
-
60kWh பேட்டரி பேக் மூலமாக 450 கிலோமீட்டர் ரேஞ்ச் வரை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
-
விலை தோராயமாக ரூ. 25 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ஆக இருக்கலாம்; அக்டோபர் 2025-ல் விற்பனை தொடங்கவுள்ளது.
மஹிந்திராவின் தலைமை வடிவமைப்பு அதிகாரியான பிரதாப் போஸ் உற்பத்திக்குத் தயாராக உள்ள மஹிந்திரா BE 05 அவதாரின் விரைவுப் பார்வையை நமக்கு அளித்துள்ளார். இதன் கான்செப்ட் வடிவம் ஆகஸ்ட் 2022ல் உருவானது. இது மஹிந்திராவின் முதல் ‘மின்சாரப் படைப்பு’ மாடல் ஆகும். அக்டோபர் 2025 -ல் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த டீசர் எதை காட்டுகிறது?
View this post on Instagram
இந்த படத்தில் டாப் ஆங்கிளில் இருந்து BE 05 காட்டப்படுகிறது. நம்மால் முன்புற பின்புற டிசைன்களைப் பார்க்கமுடியவில்லை. பானட் டிசைன் அதன் கான்செப்ட் வடிவத்தை போலவே தொடர்ந்து போல்டான மடிப்புகளுடன் நேரான தோற்றத்தைக் கொண்டுள்ளது. முழு நீளத்துக்கும் பளபளப்பான கருப்புப் பூச்சு இருக்குமென்று தெரிகிறது. பெரிய எல்இடி டிஆர்எல்களை இது கொண்டதாக இருக்கலாம்.
கேபினின் பெரும்பகுதியை மூடக்கூடியதாக உள்ள நிலையான கண்ணாடிக்கூரை உள்ள மஹிந்திராவின் முதல் கார் இதுவாக இருக்கும். BE 05 -ன் கதவுகள் XUV700 போலவே வெளியே தெரியாத கைப்பிடிகளுடன் இருக்கும். கடைசியாக, பின்புறக் கதவு கம்பீரமான தோற்றத்துடன் முழு நீளத்துக்கும் C வடிவில் இணைக்கப்பட்ட எல்இடி பின் விளக்குகளுடன் மற்றும் ஸ்பாய்லருடன் இருக்கும்.
இன்டீரியரையும் நம்மால் சிறிதளவு பார்க்க முடிகிறது. இது முழுக்கவே அதிநவீனமான இன்டெகிரேட்டட் டூயல் டிஸ்பிளே ஸ்கிரீன்களுடன் பிரீமியமாகத் தோன்றுகிறது. BE 05-யின் கேபின் கான்செப்ட் வடிவத்தைப் போன்றே இருக்குமென்று நாம் எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: இந்த 15 விரிவான படங்கள் வழியாக மஹிந்திரா தார் இவி-யைப் பாருங்கள்
இதுவரை தெரிந்த பிற விபரங்கள்
மஹிந்திரா BE 05 எஸ்யூவி -யானது மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்டுள்ள இங்லோ (INGLO) பிளாட்பாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இதன் 60kWh பேட்டரி பேக் 450 கிலோமீட்டர் வரையிலும் கார் செல்வதற்கான ஆற்றலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 175 kW வரையிலும் விரைவாக சார்ஜ் ஏறுமென்று மஹிந்திரா தெரிவிக்கிறது. இதன் மூலமாக வெறும் 30 நிமிடங்களில் 5 முதல் 80 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
இங்லோ பிளாட்பாரம் ஆனது முன்பக்கம், பின்பக்கம், என அனைத்துச் சக்கரங்களின் டிரைவ்டிரெயின்களுக்கும் இடமளிக்கும் திறனுடையது. மஹிந்திராவை பொறுத்தவரை, பின் சக்கர டிரைவ் மாடல்கள் 285பிஎஸ் வரையிலான செயல்திறனை கொடுக்கும் எனக் கூறுகிறது. AWD மாடல் 394PS வரையிலும் வழங்கக்கூடும்.
மேலும் படிக்க: 10 படங்களில் புதிய மஹிந்திரா குளோபல் பிக் அப் -பை பாருங்கள்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
MG ZS EV -க்குப் போட்டியான BE 05 -ன் விலை ரூ. 25 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) இருக்குமென எதிர்பார்க்கிறோம். எனினும், அடுத்தடுத்து வரவுள்ள ஹூண்டாய் கிரெட்டா இவி மற்றும் டாடா கர்வ் இவி ஆகியவற்றின் போட்டியையும் இது எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
0 out of 0 found this helpful