சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் 7 எலக்ட்ரிக் கார்களின் விவரங்கள் இங்கே

published on ஜூலை 15, 2024 05:58 pm by anonymous for எம்ஜி comet ev

இந்தியாவில் ஹேட்ச்பேக் முதல் எஸ்யூவி வரை மிகக் குறைவான விலையில் நீங்கள் வாங்கக்கூடிய மிகவும் ஏழு EV -கள் இவைதாம்.

இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலையால் எலக்ட்ரிக் கார் விற்பனையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறைந்த பராமரிப்பு செலவுகள் மற்றும் விரிவடைந்து வரும் சார்ஜிங் உள்கட்டமைப்பு ஆகியவற்றால் இப்போது புதிதாக கார் வாங்குபவர்கள் EV -களை அவர்களது கவனத்தில் கொண்டு தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் உள்ள பல கார் தயாரிப்பாளர்கள் பல்வேறு ஆப்ஷன்களை அவர்களுக்கான கொடுக்கின்றனர்.

எலக்ட்ரிக் கார்களில் நீங்கள் ஒன்றை வாங்க திட்டமிட்டால், இந்த அறிக்கையில் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் குறைவான விலையில் உள்ள 7 எலக்ட்ரிக் கார்களை நாங்கள் உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

எம்ஜி காமெட் இவி

விலை

ரூ.6.99 லட்சம் முதல் ரூ.9.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

நகர போக்குவரத்தில் சிரமமின்றி ஓட்டும் அனுபவத்தை அதன் சிறிய வடிவ காரணிக்கு நன்றி தெரிவிக்கும் காரைத் தேடுகிறீர்களா?. அப்படியென்றால் எம்ஜி காமெட் இவி உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். 2023 ஆண்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டது, MG -யிலிருந்து இந்த 3-டோர் மைக்ரோ-எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் ஆனது ஒரே ஒரு 17.3 kWh பேட்டரி பேக் ஆப்ஷனுடன் வருகிறது. இது 230 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.

பவர்டிரெய்ன் விவரங்கள்

எம்ஜி காமெட் இவி

பேட்டரி பேக்

17.3 kWh

எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை

1

பவர் / டார்க்

42 PS/ 110 Nm

கிளைம்டு ரேஞ்ச்

230 கி.மீ

சார்ஜிங் நேரம்

3.5 மணிநேரம் (7.4 kW சார்ஜர்) / 7 மணிநேரம் (3.3 kW சார்ஜர்)

MG காமெட் EV ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் /Apple CarPlay உடன் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் டெக்னாலஜி, 12V பவர் அவுட்லெட்டுகள், USB சார்ஜிங் போர்ட்கள் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக இது டூயல் முன் ஏர்பேக்ஸ், EBD உடன் ABS, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், சென்சார்கள் கொண்ட ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைப் பெறுகிறது.

டாடா டியாகோ EV

விலை

ரூ.7.99 லட்சம் முதல் ரூ.11.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

டியாகோ இவி டாடா மோட்டார்ஸின் என்ட்ரி லெவல் ஆல் எலக்ட்ரிக் காராகும். இது MG காமெட் EV -க்கு மாற்றாகும். மேலும் ரூ. 10 லட்சத்திற்கு குறைவான EV -யை நீங்கள் பரிசீலிக்கிறீர்கள் என்றால் இதையும் நீங்கள் பார்க்கலாம். இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் இது கிடைக்கும். டியாகோ EV ஆனது 315 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜரை சப்போர்ட் செய்கிறது. இதன் மூலமாக 58 நிமிடங்களில் எலக்ட்ரிக் காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

பவர்டிரெய்ன் விவரங்கள்

டாடா டியாகோ EV

பேட்டரி பேக்

19.2 kWh

24 kWh

பவர் / டார்க்

61 PS/ 110 Nm

75 PS/ 114 Nm

கிளைம்டு ரேஞ்ச்

250 கி.மீ

315 கி.மீ

சார்ஜிங் நேரம்

2.6 மணிநேரம் (7.2 kW சார்ஜர்) / 6.9 மணிநேரம் (3.3 kW சார்ஜர்) / 58 நிமிடங்கள் (DC ஃபாஸ்ட் சார்ஜர்)

3.6 மணிநேரம் (7.2 kW சார்ஜர்) / 8.7 மணிநேரம் (3.3 kW சார்ஜர்) / 58 நிமிடங்கள் (DC ஃபாஸ்ட் சார்ஜர்)

ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8-ஸ்பீக்கர் ஹர்மன் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளை டியாகோ EV கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக டூயல் முன் ஏர்பேக்ஸ், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர்-பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் கொண்ட ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கும்.

டாடா பன்ச் EV

விலை

ரூ.10.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

2024 ஜனவரியில் டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி -யின் ஆல்-எலக்ட்ரிக் எடிஷனை அறிமுகப்படுத்தியது. டாடாவின் EV போர்ட்ஃபோலியோவில் முற்றிலும் புதிய Acti.ev கட்டமைப்பு தளத்தில் உருவாக்கப்பட்ட முதல் தயாரிப்பு இதுவாகும். பன்ச் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: 25 kWh மற்றும் 35 kWh, பெரிய 35 kWh பேக் 421 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்கும் திறன் கொண்டது.

பவர்டிரெய்ன் விவரங்கள்

டாடா பன்ச் EV

பேட்டரி பேக்

25 kWh

35 kWh

பவர் / டார்க்

82 PS/ 114 Nm

122 PS/ 190 Nm

கிளைம்டு ரேஞ்ச்

315 கி.மீ

421 கி.மீ

சார்ஜிங் நேரம்

3.6 மணிநேரம் (7.2 kW சார்ஜர்) / 9.4 மணிநேரம் (3.3 kW சார்ஜர்) / 56 நிமிடங்கள் (DC ஃபாஸ்ட் சார்ஜர்)

5 மணிநேரம் (7.2 kW சார்ஜர்) / 13.5 மணிநேரம் (3.3 kW சார்ஜர்) / 56 நிமிடங்கள் (DC ஃபாஸ்ட் சார்ஜர்)

பன்ச் EV ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்ஸ் ஸ்டாண்டர்டாக பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைப் பெறுகிறது.

சிட்ரோன் eC3 EV

விலை

ரூ.12.76 லட்சம் முதல் ரூ.13.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

இந்தியாவில் சிட்ரோனின் முதல் ஆல் எலக்ட்ரிக் கார் EC3 ஆகும். இது டாடா பன்ச் EV உடன் நேரடியாக போட்டியிடுகிறது மற்றும் டாடா டியாகோ EV மற்றும் MG காமெட் EV -க்கு பிரீமியம் மாற்றாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொறுத்தவரையில் இது C3 ஹேட்ச்பேக்கை போலவே உள்ளது. ஆனால் ICE-பவர்டு மாடலில் இருந்து இதை வேறுபடுத்தி காட்டும் வகையில் 'e' பேட்ஜிங்கை கொண்டுள்ளது. 29.2 kWh பேட்டரி பேக்குடன் இது கிடைக்கிறது. eC3 ஆனது 57 PS எலக்ட்ரிக் மோட்டாருடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 320 கி.மீ ரேஞ்சை கொடுக்கிறது.

பவர்டிரெய்ன் விவரங்கள்

சிட்ரோன் eC3

பேட்டரி பேக்

29.2 kWh

பவர் / டார்க்

57 PS/ 143 Nm

கிளைம்டு ரேஞ்ச்

320 கி.மீ

சார்ஜிங் நேரம்

10.5 மணிநேரம் (3.3 kW சார்ஜர்) / 57 நிமிடங்கள் (DC ஃபாஸ்ட் சார்ஜர்)

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.2 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேனுவல் ஏசி, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கீலெஸ் என்ட்ரி, உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் சீட் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற வசதிகளை சிட்ரோன் eC3 கொண்டுள்ளது. பாதுகாப்பு வசதிகளில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்ஸ் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் கொண்ட ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை இதில் உள்ளன.

டாடா டிகோர் EV

விலை

ரூ.12.49 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

டாடா டிகோர் EV ஆனது டியாகோ EV க்கு செடான் மாற்றாக உள்ளது. மற்றும் இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. அதன் வெளிப்புறம் முழுவதும் புளூ கலர் இன்செர்ட்கள் மற்றும் EV பேட்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ICE-பவர்டு டாடா டியாகோவில் இருந்து வேறுபட்டது. டிகோர் EV ஆனது ஒரு 26 kWh பேட்டரி பேக் தேர்வுடன் வருகிறது. இது 75 PS எலக்ட்ரிக் மோட்டாருடன் கனெக்ட் செய்ய்யப்பட்டுள்ளது, இது 315 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது.

பவர்டிரெய்ன் விவரங்கள்

டாடா டிகோர் EV

பேட்டரி பேக்

26 kWh

பவர் / டார்க்

75 PS/ 170 Nm

கிளைம்டு ரேஞ்ச்

315 கி.மீ

சார்ஜிங் நேரம்

9.4 மணிநேரம் (3.3 kW சார்ஜர்) / 59 நிமிடங்கள் (DC ஃபாஸ்ட் சார்ஜர்)

டிகோர் EV -யில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ உடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8-ஸ்பீக்கர் ஹர்மன் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் கிடைக்கும். பாதுகாப்புக்காக டூயல் ஃபிரன்ட் ஏர்பேக்ஸ், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர்-பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் கொண்ட ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை கிடைக்கும்.

டாடா நெக்ஸான் EV

விலை

ரூ.14.49 லட்சம் முதல் ரூ.19.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

நீங்கள் சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் EV-யை தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய ஆப்ஷன்களில் ஒன்று டாடா நெக்ஸான் EV ஆகும். 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், டாடா புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் EV -யை அறிமுகப்படுத்தியது, இது கனெக்டட் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட் செட்டப் உள்ளிட்ட டிஸைன் அப்டேட்களுடன் வந்தது. மேலும் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. டாடா நெக்ஸான் EV இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் 465 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.

பவர்டிரெய்ன் விவரங்கள்

டாடா நெக்ஸான் EV

பேட்டரி பேக்

30 kWh

40.5 kWh

பவர் / டார்க்

129 PS/ 215 Nm

143 PS/ 215 Nm

கிளைம்டு ரேஞ்ச்

325 கி.மீ

465 கி.மீ

சார்ஜிங் நேரம்

4.3 மணிநேரம் (7.2 kW சார்ஜர்) / 10.5 மணிநேரம் (3.3 kW சார்ஜர்) / 56 நிமிடங்கள் (DC ஃபாஸ்ட் சார்ஜர்)

6 மணி நேரம் (7.2 kW சார்ஜர்) / 15 மணி நேரம் (3.3 kW சார்ஜர்) / 56 நிமிடங்கள் (DC ஃபாஸ்ட் சார்ஜர்)

நெக்ஸான் EV ஆனது வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஒரு சிங்கிள்-பேன் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைப் பெறுகிறது.

மஹிந்திரா XUV400

விலை

ரூ.15.49 லட்சம் முதல் ரூ.19.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

இந்த பட்டியலில் கடைசி மாடலாக மஹிந்திரா XUV400 உள்ளது. இது சமீபத்தில் புதிய கேபின் தீம் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற நவீன வசதிகள் உட்பட சில வேரியன்ட்கள் மற்றும் சில வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் (34.5 kWh மற்றும் 39.5 kWh) கிடைக்கிறது. XUV400 ஆனது 150 PS எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது, இதன் கிளைம்டு ரேஞ்ச் 456 கி.மீ ஆக உள்ளது.

பவர்டிரெய்ன் விவரங்கள்

மஹிந்திரா XUV400

பேட்டரி பேக்

34.5 kWh

39.5 kWh

பவர் / டார்க்

150 PS/ 310 Nm

150 PS/ 310 Nm

கிளைம்டு ரேஞ்ச்

375 கி.மீ

456 கி.மீ

சார்ஜிங் நேரம்

6.5 மணிநேரம் (7.4 kW சார்ஜர்) / 13.5 மணிநேரம் (3.3 kW சார்ஜர்) / 50 நிமிடங்கள் (DC ஃபாஸ்ட் சார்ஜர்)

6.5 மணிநேரம் (7.4 kW சார்ஜர்) / 13.5 மணிநேரம் (3.3 kW சார்ஜர்) / 50 நிமிடங்கள் (DC ஃபாஸ்ட் சார்ஜர்)

மஹிந்திரா XUV400 ஆனது வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், சிங்கிள்-பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப்.ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவையும் உள்ளன.

இவை இந்தியாவில் கிடைக்கும் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் 7 EV -கள் ஆகும். நீங்கள் எந்த EV -யை தேர்வு செய்வீர்கள் என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா -வுக்கானவை

லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: MG காமெட் EV ஆட்டோமெட்டிக்

A
வெளியிட்டவர்

Anonymous

  • 40 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on M ஜி comet ev

Read Full News

explore similar கார்கள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.9.99 லட்சம்*
Rs.12.49 - 16.49 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.9.99 - 14.29 லட்சம்*
Rs.7.99 - 11.49 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை