2023 தீபாவளிக்கு மாருதி அரீனா மாடல்களில் ரூ.59,000 வரை தள்ளுபடி பெறலாம்
published on நவ 07, 2023 05:28 pm by rohit for மாருதி ஆல்டோ 800
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
கீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சலுகைகள் நவம்பர் 12 வரை மட்டுமே செல்லுபடியாகும், அதன் பிறகு அவை மீண்டும் பழைய விலைக்கே திருத்தப்படும்.
-
மாருதி செலிரியோக்கு அதிகபட்சமாக தள்ளுபடியாக ரூ.59,000 கிடைக்கும்.
-
மாருதி எஸ்-பிரஸ்ஸோ ரூ.54,000 வரை தள்ளுபடியை பெறுகிறது.
-
உங்கள் தற்போதைய கார் 7 ஆண்டுகளுக்கு மேல் பழையதாக இருந்தால், வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் மீதான எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.5,000 குறைக்கப்படும்.
-
ஆல்டோ 800 மற்றும் டிசையர் ரூ.15,000 மற்றும் ரூ.10,000 மட்டுமே எக்ஸ்சேஞ்ச் போனஸாக கிடைக்கும்.
தீபாவளி மிகவும் நெருங்கி வரும் இந்த நேரம் நல்ல சந்தர்ப்பமாகும். இந்த நேரத்தில் பலர் கார்கள் உட்பட புதிய தயாரிப்புகளை வாங்குவதன் மூலமாக, கூடுதலாக கிடைக்கும் தள்ளுபடிகளினால் கூடுதல் பணத்தை மிச்சப்படுத்துகிறார்கள். சில அரினா கார்களுக்கு தீபாவளியை முன்னிட்டு பிரத்யேக சலுகைகளை மாருதி வெளியிட்டுள்ளது. இந்த சலுகை நவம்பர் 12, 2023 வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவே அவற்றைப் பார்ப்போம்:
ஆல்டோ 800
தள்ளுபடி |
விலை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 |
மொத்த பலன்கள் |
ரூ.15,000 வரை |
-
இப்போது நிறுத்தப்பட்டுள்ள மாருதி ஆல்டோ 800 காரின் மீதமுள்ள வாகனங்கள் மட்டுமே மேலே குறிப்பிட்ட எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் வழங்கப்படுகிறன.
-
என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக்கின் அனைத்து பெட்ரோல் (பேஸ்-ஸ்பெக் ஸ்டாண்டர்ட் வாகனத்தைத் தவிர) மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களும் இந்த நன்மைகளைப் பெறுகின்றன.
-
ஆல்டோ 800 இன் விற்பனையை நிறுத்தும் முன்பு மாருதி அதை ரூ.3.54 லட்சம் முதல் ரூ.5.13 லட்சம் வரை விற்பனை செய்தது.
ஆல்டோ கே10
சலுகை |
தொகை |
ரொக்கத் தள்ளுபடி |
30,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.4,000 |
மொத்த பலன்கள் |
ரூ.49,000 வரை |
-
மாருதி ஆல்டோ கே10 யின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு வேரியன்ட்களுக்கும் மாருதி நிறுவனம் இந்த தள்ளுபடிகளை வழங்குகிறது.
-
அதன் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு 20,000 ரூபாய் மட்டுமே ரொக்க தள்ளுபடி கிடைக்கும், அதே நேரத்தில் கார்ப்பரேட் தள்ளுபடி எதுவும் கிடைக்காது.
-
ஆல்டோ கே10 -ன் விலை ரூ.3.99 லட்சத்தில் இருந்து ரூ.5.96 லட்சம் வரை என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்-பிரஸ்ஸோ
சலுகை |
தொகை |
ரொக்கத் தள்ளுபடி |
ரூ.30,000 |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.20,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.4,000 |
மொத்த பலன்கள் |
ரூ.54,000 வரை |
-
மாருதி எஸ்-பிரஸ்ஸோவின் அனைத்து வேரியன்ட்களும் (சிஎன்ஜி தவிர) மேற்கூறிய சேமிப்புகளுடன் வருகின்றன.
-
சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு அதே பணத் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும் ஆனால் அவைகளுக்கு கார்ப்பரேட் தள்ளுபடி இல்லை.
-
மாருதி தன்னுடைய ஹேட்ச்பேக்கை ரூ.4.26 லட்சம் முதல் ரூ.6.12 லட்சம் வரை விற்பனை செய்கிறது
மேலும் பார்க்க: உங்கள் நிலுவையில் உள்ள சலான்களை செலுத்துங்கள்
இகோ
சலுகை |
தொகை |
ரொக்கத் தள்ளுபடி |
ரூ.15,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.10,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.4,000 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.29,000 வரை |
- சிஎன்ஜி வேரியன்ட்களை தவிர, மாருதி இகோவின் அனைத்து டிரிம்களிலும் இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
- சிஎன்ஜி வேரியன்ட் அதே எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் வழங்கப்படுகிறது, ஆனால் ரொக்க தள்ளுபடி ரூ. 5,000 வரை குறைகிறது, மேலும் கார்ப்பரேட் தள்ளுபடி இல்லை.
- மாருதியின் அடிப்படைத் தேவைக்கு ஏற்ற இந்த காரின் விலை ரூ.5.27 லட்சத்தில் இருந்து ரூ.6.53 லட்சம் வரை இருக்கும்.
செலிரியோ
சலுகை |
தொகை |
ரொக்கத் தள்ளுபடி |
ரூ.35,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.20,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.4,000 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.59,000 sவரை |
-
மேலே குறிப்பிடப்பட்ட பலன்கள் மாருதி செலிரியோவின் மிட்-ஸ்பெக் VXi, ZXi மற்றும் டாப்-ஸ்பெக் ZXi+ டிரிம்களுக்கு (மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன்) மட்டுமே கிடைக்கும்.
-
அதன் லோவர்-ஸ்பெக் LXi டிரிம் மற்றும் அனைத்து ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வகைகளும் ரூ. 30,000 ரொக்கத் தள்ளுபடியைப் பெறுகின்ற, மற்ற சலுகைகள் அப்படியே நீடிக்கின்றன.
-
மாருதி நிறுவனம் செலிரியோ சிஎன்ஜி காரை ரூ.30,000 ரொக்க தள்ளுபடியுடன் வழங்குகிறது, ஆனால் சலுகையில் கார்ப்பரேட் தள்ளுபடி எதுவும் இல்லை.
-
இந்த கச்சிதமான ஹேட்ச்பேக்கின் விலை ரூ.5.37 லட்சம் முதல் ரூ.7.14 லட்சம் வரை இருக்கும்.
இதையும் படியுங்கள்: தரநிலையாக 6 ஏர்பேக்குகளுடன் ரூ. 10 லட்சத்தில் உள்ள 8 கார்கள்
வேகன் ஆர்
சலுகை |
தொகை |
ரொக்கத் தள்ளுபடி |
ரூ.25,000 |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.20,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.4,000 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.49,000 வரை |
-
மாருதி வேகன் ஆர், சிஎன்ஜி டிரிம் அதன் வேரியன்ட் சீரிஸ் முழுவதும் இந்த சலுகைகளுடன் கிடைக்கின்றன.
-
மாருதி சிறிய ஹேட்ச்பேக்கின் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு அதே நன்மைகளுடன் ஆனால் கார்ப்பரேட் தள்ளுபடி இல்லாமல் வழங்குகிறது.
-
எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும் கார் 7 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே எக்ஸ்சேஞ்ச் போனஸ் பொருந்தும். பழையதாக இருந்தால், அந்த சலுகை ரூ.15,000 ஆக குறையும்.
-
மாருதி நிறுவனம் வேகன் ஆர் காரின் விலையை ரூ.5.54 லட்சம் முதல் ரூ.7.42 லட்சம் வரை நிர்ணயித்துள்ளது.
ஸ்விஃப்ட்
சலுகை |
தொகை |
ரொக்கத் தள்ளுபடி |
ரூ.25,000 |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.20,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.4,000 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.49,000 வரை |
- மாருதி ஸ்விஃப்ட்டின் அனைத்து வேரியன்ட்களுக்கும் (சிஎன்ஜி தவிர) மேற்கூறிய தள்ளுபடி கிடைக்கும்.
- ஹேட்ச்பேக்கின் சிஎன்ஜி வேரியன்ட்கள் ரொக்கத் தள்ளுபடியுடன் மட்டுமே வருகின்றன.
- மேலும், நீங்கள் புதிய ஸ்விஃப்ட்டிற்காக 7 ஆண்டுகளை விட பழைய மாடலை வர்த்தகம் செய்தால் ரூ.15,000 குறைக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது, இல்லையெனில் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள்.
- ஸ்விஃப்ட்டின் சிறப்பு பதிப்பிற்கு, வாடிக்கையாளர்கள் ரூ.8,400 கூடுதலாக செலுத்த வேண்டும். இது இன்னும் ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடியைப் பெறுகிறது.
- மாருதியின் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக் விலை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.03 லட்சம் வரை இருக்கும்.
மேலும் பார்க்கவும்: 2024 மாருதி ஸ்விஃப்ட் இந்தியாவில் பரிசோதனையில் சிக்கியது, புதிய வடிவமைப்பு விவரங்கள் தெரிய வந்துள்ளன
டிசையர்
சலுகை |
தொகை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.10,000 |
மொத்த பலன்கள் |
ரூ.10,000 வரை |
-
மாருதி டிசையர் அதன் வரிசையில் ரூ.10,000 வரை சேமிப்பை பெறுகிறது.
-
சப்-4 மீ செடானின் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு மாருதி எந்த பலனையும் வழங்கவில்லை.
-
மாருதி டிசையர் காரை ரூ.6.51 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் வரை விற்பனை செய்கிறது.
குறிப்பு: ஒரு மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடலாம். மேலும், இந்த நவம்பரில் காத்திருப்பு இல்லாமல் மாருதி கார்கள் எதுவும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும். எனவே மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள மாருதி அரீனா டீலரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விலை விவரங்கள் அனைத்தும், எக்ஸ்-ஷோரூம் டெல்லி -க்கானவை
மேலும் படிக்க: ஆல்ட்டோ ஆன் ரோடு விலை