7 படங்களில் புதிய Kia Sonet காரின் HTX+ வேரியன்ட்டை விரிவாக பாருங்கள்
published on டி சம்பர் 19, 2023 06:41 pm by rohit for க்யா சோனெட்
- 42 Views
- ஒரு கருத்தை எழுதுக
HTX+ ஆனது Kia Sonet -ன் டெக் (HT) வரிசையின் கீழ் ஃபுல்லி லோடட் வேரியன்ட் மற்றும் GT லைன் மற்றும் X-லைன் டிரிம்களில் இருந்து தனித்து தெரிவதற்காக வெளிப்புறத்தில் சில ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றுள்ளது.
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் புதிய எஸ்யூவி இன்னும் டெக் (அல்லது HT) லைன், ஜிடி லைன் மற்றும் எக்ஸ்-லைன் ஆகிய டிரிம் லைன்களில் வழங்கப்படும் என்று கியா உறுதிப்படுத்தியது. ஹையர்-ஸ்பெக் GTX+ வேரியன்ட்டுக்கான விரிவான கேலரியை நாங்கள் ஏற்கனவே உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம், இந்தக் கட்டுரையில், டெக் லைனின் கீழ் ஃபுல்லி லோடட் வேரியன்ட்டான HTX+ -ஐ பற்றி விரிவாகப் பார்ப்போம்:
வெளிப்புறம்
Kia Sonet காரின் முன்பக்கம் GTX+ வேரியன்ட்டில் இருந்து சற்று வித்தியாசமாகத் தெரிகிறது, காரணம் இது புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சில்வர் இன்செர்ட்களும் கொடுக்கப்படவில்லை. இந்த வேரியன்ட்டில் முன் கேமராவும் இல்லை, ஏனெனில் இதில் 360 டிகிரி யூனிட் பொருத்தப்படவில்லை.
நீங்கள் இன்னும் நெருக்கமாகப் பார்த்தால், HTX+ வேரியன்ட் நீண்ட LED DRL ஸ்ட்ரிப்களை காண்பீர்கள், இது பம்பருக்குள் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது, 3-பீஸ் செங்குத்தாக இருக்கும் LED ஃபாக் லைட்களை கொண்டுள்ளது. கீழே, பம்பர் மற்றும் பெரிய சென்ட்ரல் ஏர் டேமிற்கான புதிய வடிவமைப்பையும் உங்களால் பார்க்க முடியும்.
பக்கவாட்டில், கியா சோனெட் HTX+ ஆனது 16-இன்ச் அலாய் வீல்களுடன் புதிய வடிவமைப்பை பெறுகிறது, இது GTX+ வேரியன்ட்டில் இருப்பதிலிருந்து வேறுபட்டது. இந்த வேரியண்டில் 360 டிகிரி கேமரா இல்லாததால், ORVM பொருத்தப்பட்ட கேமரா எதுவும் இல்லை.
2024 கியா சோனெட் HTX+ வாஷர் மற்றும் டிஃபோகர் கொண்ட பின்புற வைப்பர் மற்றும் கனெக்டட் LED டெயில்லைட்கள் மற்றும் இடம் மாற்றி கொடுக்கப்பட்டுள்ள ‘சோனெட்’ பேட்ஜுடன் உள்ளது. கீழே ஒரு பெரிய சில்வர் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது.
உட்புறம்
உட்புறத்தில், HTX+ இப்போது பிரெளவுன் கலர் இன்செர்ட்களுடன் பிளாக் மற்றும் பிரெளவுன் நிற கேபின் தீமை கொண்டுள்ளது. புதிய வடிவமைப்பில் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் புதிய 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா செல்டோஸிலிருந்து கியா இந்த வேரியன்ட்டையும் வழங்கியுள்ளது. இந்த வேரியன்ட்டின் மற்ற அம்சங்களில் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள் மற்றும் 4-வே பவர்டு டிரைவர் இருக்கை (டீசல்-IMT காம்போவுடன் மட்டும்) ஆகியவை அடங்கும்.
2024 சோனெட் HTX+ பின்பக்கத்தில் வசிப்பவர்கள் AC வென்ட்கள், கப்ஹோல்டர்கள் கொண்ட ஆர்ம்ரெஸ்ட், சன்ஷேடுகள், சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் (நடுத்தர பயணிகளுக்கு அல்ல), ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள் போன்ற வசதிகளைப் பெறுகின்றனர்.
ஃபேஸ்லிஃப்டட் Kia Sonet HTX+ ஆனது டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் (iMT உட்பட) மட்டுமே கிடைக்கிறது.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை
புதிய கியா சோனெட் ஜனவரி 2024 -ல் ஷோரூம்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட சோனெட் மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்..
தொடர்புடையது: புதிய மற்றும் பழைய கியா சோனெட்: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன ?
மேலும் படிக்க: கியா சோனெட் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful