ஃபேஸ்லிஃப்டட்Tata Nexon -னின் கேபின் கூடுதலான டிஜிட்டல் பாகங்களை பெறுகிறது
இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய நெக்ஸானின் இன்டீரியர் வீடியோக்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன.
-
10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் பேக்லிட் டாடா லோகோவுடன் புதிய ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றை பெறுகிறது.
-
புதிய டிரைவ் செலக்டருடன் புதிய சென்டர் கன்சோல் வடிவமைப்பு.
-
புதிய வெளிப்புற ஷேடு மற்றும் புதிய ஊதா கேபின் தீம் ஆகியவற்றுடன் வரும்.
-
இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது: 1.5-லிட்டர் டீசல் மற்றும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல்.
-
விலை ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ் ஷோ ரூம்)இருந்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் பல ஸ்பை படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளதால், ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக இணையம் முழுவதும் அதை பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. சமீபத்தில், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டின் கேபின் இரவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் காரில் உள்ள புதிய டிஜிட்டல் பிட்டுகளும் தெளிவாக தெரிகின்றன.
கூடுதலான தொழில்நுட்பம்
தற்போதைய தலைமுறை டாடா நெக்ஸான் காலாவதியான டாஷ்போர்டுக்காக அடிக்கடி விமர்சனத்துக்குள்ளானது, அதை மாற்றுவதற்கான பெருமுயற்சியை ஃபேஸ்லிஃப்ட் உருவாக்கியது. புதிய பெரிய டச்ஸ்கிரீன் டிஸ்பிளேவை தற்போது தெளிவாக காணமுடிகிறது, அதில் ஹாரியர் மற்றும் சஃபாரியில் உள்ள அதே இன்டர்ஃபேஸை கொண்டுள்ளதை தெளிவாகக் காணலாம் , ஒரே வித்தியாசம் நிறத்தில் மட்டுமே உள்ளது.
இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு கீழே புதிய கிளைமேட் கன்ட்ரோல் யூனிட் உள்ளது. வெப்பநிலை மற்றும் ஃபேன் வேகத்திற்கு இரண்டு மாற்று சுவிட்சுகள் உள்ளன, மீதமுள்ளவை கிளிக் செய்யக்கூடிய பொத்தான்களுக்குப் பதிலாக பேக்லிட் ஹாப்டிக் கன்ட்ரோல்கள் ஆகும். இது இப்போது டிரைவருக்கான முழு டிஜிட்டல் டிஸ்ப்ளேவை பெறுகிறது, இது இன்ஃபோடெயின்மென்ட்டின் அதே கலர் ஸ்கீமை கொண்டுள்ளது.
கடைசியாக, ஸ்டீயரிங் வீலின் நடுவில் பேக்லிட் டாடா லோகோ உள்ளது, மேலும் ஸ்போக்கில் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட பட்டன்களும் அதே டச்சை பெறுகின்றன.
பிற வடிவமைப்பு மாற்றங்கள்
ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் பெரிதும் திருத்தப்பட்ட வெளிப்புற வடிவமைப்பை பெறுகிறது. புதிய கிரில் வடிவமைப்பு, கூர்மையான LED DRLகள் மற்றும் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள ஹெட்லைட்கள் ஆகியவற்றுடன் முன்புறம் இப்போது நேர்த்தியாக உள்ளது. பக்கவாட்டில் தோற்றம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது, ஆனால் புதிய அலாய் வீல்களைப் பெறுகிறது, மேலும் பின்புறம் இப்போது கனெக்டட் டெயில் விளக்குகள் மற்றும் அதிக உறுதியான வடிவமைப்புடன் வருகிறது.
உள்ளே, புதிய டேஷ்போர்டு லேஅவுட், மெலிதான AC வென்ட்கள் மற்றும் புதிய ஊதா கேபின் தீம் ஆகியவற்றுடன் கேபின் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பவர்ட்ரெயின்
5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMTஉடன் இணைக்கப்பட்ட 115PSமற்றும் 260Nm ஆற்றலை கொடுக்கும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினை தற்போதைய நெக்ஸானிற்காக டாடா வைத்திருக்கும். புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் DCT ஆட்டோமேட்டிக் உடனும் வழங்கப்படலாம். இந்த யூனிட் 125PS மற்றும் 225Nm உருவாக்குகிறது, மேலும் புதிய BS6 2 ஆம் கட்ட விதிமுறைகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அம்சங்கள் பாதுகாப்பு
புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவற்றை பெறலாம் என்பது படங்கள் மூலமாக தெரிய வருகிறது. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட்ட் முன்புற இருக்கைகள் உள்ளிட்ட பிற இப்போது விற்பனையில் உள்ள பதிப்பிலிருந்து கொண்டு வரப்படும்.
மேலும் காணவும்: Tata Nexon Facelift எக்ஸ்டீரியர் மறைக்கப்படாமல் படம் பிடிக்கப்பட்டுள்ளது
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ரியர் வியூ கேமராவுடன் வரும்.
அறிமுகம், விலை போட்டியாளர்கள்
நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் உடன் ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸானை செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று டாடா அறிமுகப்படுத்துகிறது. தொடக்க விலை ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அது கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா XUV300 போன்றவற்றுடன் போட்டியை தொடரும் .
மேலும் படிக்க: நெக்ஸான் AMT