• English
    • Login / Register

    இந்தியாவில் Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியாகவுள்ள தேதி இதுதான் !

    க்யா சோனெட் க்காக ஜனவரி 10, 2024 04:17 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 796 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    கியா நிறுவனம் வரும் ஜனவரி 12 -ம் தேதி சோனெட் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தும். மேலும் இதன் விலை சுமார் ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.

    2024 Kia Sonet

    • 2020 -ல் இந்தியாவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதற்கு கொடுக்கப்படும் முதலாவது மிகப் பெரிய அப்டேட் இது.

    • அப்டேட் செய்யப்பட்ட எஸ்யூவி -க்கான முன்பதிவு ஏற்கனவே ரூ.25,000 -க்கு தொடங்கியுள்ளது.

    • புதிய வடிவிலான கிரில் மற்றும் ஷார்ப் ஹெட்லைட்கள் மற்றும் DRL -கள் என வெளிப்புறத்தில் புதிய வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    • கேபின் அப்டேட்களில் புதிய வடிவிலான கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் செல்டோஸ் போன்ற டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்பிளே ஆகியவை உள்ளன.

    • கூடுதல் அம்சங்களில் செமி-பவர்டு டிரைவர் சீட், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.

    • பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன் இரண்டையும் கொடுக்கலாம்; டீசல்-MT ஆப்ஷன் மீண்டும் கொடுக்கப்படவுள்ளது.

    கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சில டீலர்ஷிப்களை வந்தடைந்துள்ளது. புதிய எஸ்யூவி -யின் வெளியீட்டு தேதி மட்டுமே மிச்சம் உள்ளது. இவ்வளவு காலம் காத்திருந்த உங்களுக்கு சில மகிழ்விக்கும் வகையிலான செய்திகள் எங்களிடம் உள்ளன. கியா ஜனவரி 12 ஆம் தேதி இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட சோனெட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. புதிய சோனெட்டின் அறிமுகத்திற்கு முன்னதாக ஒரு விரைவான பார்வை இங்கே:

    புதிய வெளிப்புற வடிவமைப்பு

    Kia Sonet Facelift

    2020 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சோனெட் சப்காம்பாக்ட் எஸ்யூவி, முதல் பெரிய அப்டேட்டை இதன் மூலமாகப் பெற்றுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கிரில், நீளமான ஃபாங் வடிவ LED DRL -களுடன் கூடிய LED ஹெட்லைட்கள், ஸ்லீக்கர் LED ஃபாக் லேம்ப்கள், கனெக்டட் LED டெயில்லைட்கள் மற்றும் புதிய வடிவிலான பம்பர்கள் ஆகியவை வெளிப்புறத்தில் உள்ள முக்கியமான மாற்றங்கள்.

    நீங்கள் டெக் லைன், ஜிடி லைன் அல்லது எக்ஸ்-லைன் டிரிம் ஆகியவற்றில் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்ட அலாய் உங்களுக்கு கிடைக்கும்.

    இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்

    2024 Kia Sonet interior

    புதிய மாடலின் உட்புறம் முன்பு இருந்த மாடலில் உள்ளதை போலவே இருக்கின்றது, புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல் போன்ற சிறிய அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் கட்டுப்பாடு போன்ற அம்சங்களுடன் தொடர்கின்றன. கியா இப்போது டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேவை அறிமுகப்படுத்தியுள்ளது, இது செல்டோஸ் காரில் இருப்பதை போன்றது, மேலும் ஹூண்டாய் வென்யூ - வில் இருப்பதை போன்றே 4-வே பவர்டு டிரைவர் இருக்கையும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

    2024 Kia Sonet 360-degree camera

    லெவல்-1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மற்றும் 360-டிகிரி கேமரா  என இரண்டு பெரிய பாதுகாப்பு வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் போன்ற கூடுதல் பாதுகாப்பு கருவிகள் சோனெட் -டில் தொடர்ந்து கிடைக்கும் .

    தொடர்புடையது: 2024 கியா சோனெட்: காத்திருப்பது மதிப்புள்ளதா அல்லது அதன் போட்டியாளர்கள் சிறந்த வசதிகளை வழங்குகிறார்களா?

    ஹூட்டின் கீழ் என்ன இருக்கிறது?

    கியா ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சோனெட்டை பின்வரும் பவர்டிரெய்ன் தேர்வுகளுடன் வழங்கும்:

    2024 Kia Sonet diesel engine

    விவரம்

    1.2 லிட்டர் பெட்ரோல்

    1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

    1.5 லிட்டர் டீசல்

    பவர்

    83 PS

    120 PS

    116 PS

    டார்க்

    115 Nm

    172 Nm

    250 Nm

    டிரான்ஸ்மிஷன்

    5-ஸ்பீடு MT

    6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT

    6-ஸ்பீடு iMT, 6-ஸ்பீடு MT (புதியது), 6-ஸ்பீடு AT

    கிளைம்டு மைலேஜ்

    18.83 கிமீ/லி

    18.7 கிமீ/லி, 19.2 கிமீ/லி

    22.3 கிமீ/லி, T.B.D.^, 18.6 கிமீ/லி

    ^ - அறிவிக்கப்பட வேண்டியுள்ளது

    ஃபேஸ்லிஃப்ட் மூலம், சோனெட் டீசல்-MT ஆப்ஷனை மீண்டும் பெறும், இது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்தப்பட்டது. டீசல் மேனுவலின் கிளைம்டு மைலேஜ் விவரத்தை கியா இன்னும் வெளியிடவில்லை.

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    2024 Kia Sonet rear

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சோனெட்டின் ஆரம்ப விலை சுமார் ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV300, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், மற்றும் சப்-4மீ கிராஸ்ஓவரான மாருதி ஃப்ரான்க்ஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

    மேலும் படிக்க: சோனெட் ஆட்டோமெட்டிக்

    was this article helpful ?

    Write your Comment on Kia சோனெட்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience