சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஃபேஸ்லிப்டட் Kia Sonet HTK வேரியன்ட்டை படங்களில் விரிவாக இங்கே பாருங்கள்

published on ஜனவரி 16, 2024 03:22 pm by rohit for க்யா சோனெட்

சோனெட் HTK வேரியன்ட் முக்கியமாக கம்ஃபோர்ட் மற்றும் வசதியை கொடுக்கும் அம்சங்களை கூடுதலாகப் பெறுகிறது. மேலும் ஒரு பெரிய பாதுகாப்பு கிட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்லிப்டட் கியா சோனெட் இந்தியாவில் ரூ.7.99 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டத(அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). சோனெட்டின் டாப்-ஸ்பெக் ஜிடிஎக்ஸ்+ மற்றும் எக்ஸ்-லைன் வேரியன்ட்களை அதன் அறிமுகத்திற்கு முன்பே படங்களில் விரிவான நாங்கள் உங்களிடம் கொண்டு வந்தோம். இப்போது செகன்ட்-ஃபிரம்- பேஸ் HTK வேரியன்ட்டின் படங்கள் இப்போது எங்களுக்கு கிடைத்துள்ளன.

வெளிப்புறம்

முன்பக்கத்தில், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி -யின் HTK வேரியன்ட், குரோம் சரவுண்ட் உடன் புதிய வடிவத்தில் கிரில் கொடுக்கப்பட்டுள்ளாது. கியா இந்த வேரியன்ட்டில் LED லைட்களுக்கு பதிலாக ஹாலோஜன் ஹெட்லைட்களை பயன்படுத்தியுள்ளது. பம்பரில் போது, புதிய ஏர் டேம் மற்றும் முன் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்க முடியும்.

HTK வேரியன்ட்டின் லோயர்-ஸ்பெக் இயல்பின் முக்கிய கிவ்அவே எலமென்ட்கள், பாடி கலர்டு டோர் ஹேண்டில்கள், ORVM -களுக்கு பதிலாக முன் ஃபெண்டர்களில் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் 16-இன்ச் சக்கரங்களுக்கான புதிய வீல் கேப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பின்புறத்தில், இது கனெக்டட் டெயில் லேம்ப் செட்டப்பை கொண்டுள்ளது, ஆனால் மையப் பகுதியை முழுமையாக ஒளிர்வதில்லை. இங்கேயும் நீங்கள் ஒரு பெரிய சில்வர் ஸ்கிட் பிளேட்டுடன் பம்பரை பார்க்க முடியும்.

உட்புறம்

கேபினில் கிரே கலர் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஸ்டியரிங் வீல் மற்றும் டோர்கள் மற்றும் ஏசி வென்ட்களைச் சுற்றிலும் சில்வர் நிறம் கலக்கப்பட்ட பிளாக் கலர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. சோனெட் HTK வேரியன்ட்டில் பின் இருக்கைக்கு ஹெட்ரெஸ்ட் இல்லாமல் ஒரே பெஞ்சை பெறுகிறது, மேலும் பின்புற ஆர்ம்ரெஸ்ட் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், இது மொத்தம் மூன்று டைப்-சி சார்ஜிங் போர்ட்களுடன் வருகிறது (முன்பக்கத்தில் 1 மற்றும் பின்புறம் 2).

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்

இது லோவர்-ஸ்பெக் வேரியன்ட் என்றாலும், கியா வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, மேனுவல் ஏசி, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 6-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் கொண்ட 8-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப் உடன் பொருத்தப்பட்டுள்ளது. சோனெட் HTK ஆனது பின்புற சன்ஷேடுகள், ஸ்டீயரிங் -கில் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள் மற்றும் நான்கு பவர் விண்டோக்களையும் பெறுகிறது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, சோனெட் HTK ஆனது 6 ஏர்பேக்குகள், ஒரு ரிவர்சிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM) ஆகியவற்றுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையது: புதிய மற்றும் பழைய கியா சோனெட்: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன ?

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் என்ன?

கியா இரண்டு பவர்டிரெய்ன் தேர்வுகளுடன் சோனெட் HTK -யை வழங்குகிறது: 5-ஸ்பீடு MT உடன் 1.2-லிட்டர் பெட்ரோல் (83 PS/ 115 Nm), மற்றும் 6-ஸ்பீடு MT உடன் 1.5-லிட்டர் டீசல் (116 PS/ 250 Nm) .நாங்கள் ஏற்கெனவே 2024 Kia Sonet: வேரியன்ட் வாரியான இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களின் விவரங்களை கொடுத்துள்ளோம். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற சரியான வேரியன்ட்டை தேர்வுசெய்ய இது உங்களுக்கு உதவும்.

விலை மற்றும் போட்டியாளர்கள்

புதிய கியா சோனெட்டின் விலை ரூ. 7.99 லட்சத்தில் இருந்து ரூ. 15.69 லட்சம், ஆனால் குறிப்பாக சோனெட் HTK வேரியன்ட்டுக்கு ரூ. 8.79 லட்சத்தில் இருந்து ரூ. 10.39 லட்சம் (அனைத்தும் அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா -வுக்கான விலை) விலையில் உள்ளன. இது மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, டாடா நெக்ஸான், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், மற்றும் இந்த சப்-4மீ கிராஸ்ஓவர் எஸ்யூவி மாருதி ஃப்ரான்க்ஸ் - ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க: சோனெட் ஆன் ரோடு விலை

r
வெளியிட்டவர்

rohit

  • 65 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது க்யா சோனெட்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை