சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

3 சிலிண்டர், கூடுதல் மைலேஜ் - 2024 Maruti Swift காரில் உள்ள புதிய இன்ஜினின் விவரங்கள்

published on மே 10, 2024 05:03 pm by ansh for மாருதி ஸ்விப்ட்

ஸ்விஃப்ட்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. ஆனால் முன்பு இருந்த 4 சிலிண்டர்களுக்கு பதிலாக இப்போது 3 சிலிண்டர்களை கொண்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்பதற்கான காரணங்கள் இங்கே உள்ளன.

இந்தியாவில் 2024 மாருதி ஸ்விஃப்ட் ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.50 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட கேபின் மற்றும் இரண்டு புதிய வசதிகளுடன் வருகிறது. ஆனால் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று இந்த காரில் உள்ள புதிய பெட்ரோல் இன்ஜின் ஆகும். ஸ்விஃப்ட்டின் இன்ஜினில் உள்ள விஷயங்களை மூன்றாக பிரிக்கலாம்.

அதிக மைலேஜ்

யூகே-ஸ்பெக் 2024 ஸ்விஃப்ட்டின் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

மைலேஜ்

வேரியன்ட்

பழைய மாருதி ஸ்விஃப்ட்

புதிய மாருதி ஸ்விஃப்ட்

% அதிகரித்த அளவு

மேனுவல்

22.38 கிமீ/லி

24.8 கிமீ/லி

10.8%

AMT

22.56 கிமீ/லி

25.75 கிமீ/லி

14.1%

ஒரு மாருதி சுஸூகி -யின் தயாரிப்பாக அதன் இன்ஜின்கள் எப்போதும் மைலேஜ் -க்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். இப்போது புதிய Z-சீரிஸ் இன்ஜின் அதை மேலும் ஒரு படி மேலே எடுத்து செல்கின்றது. இது முந்தையதை இன்ஜினை விட மிகவும் சிறப்பான அவுட்புட்டை தரும் வகையில் வடிவமமைக்கப்பட்டுள்ளது. 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட வேரியன்ட்கள் இப்போது 24.8 கிமீ/லி மைலேஜை தருகின்றன இது கிட்டத்தட்ட 11 சதவீதம் அதிக திறன் ஆகும். ஆனால் 5-ஸ்பீடு AMT வேரியன்ட்களுகு 25.75 கிமீ/லி என்ற மைலேஜ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது 14 சதவிகிதம் முன்னேற்றம் ஆகும். AMT தொழில்நுட்பம் குறிப்பாக இந்தியா போன்ற சந்தைகளுக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் UK மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள புதிய ஸ்விஃப்ட் கார்கள் மிகவும் ரீஃபைன்,மென்ட் ஆன CVT ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை பெறுகின்றன.

மேலும் படிக்க: புதிய மாருதி ஸ்விஃப்ட் வேரியன்ட் வாரியான கலர் ஆப்ஷன்கள் விவரம்

எடுத்துக்காட்டாக இந்த மைலேஜ் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105 என வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு 1000 கி.மீ தூரத்துக்கும் மேனுவல் வேரியன்ட்களில் சுமார் ரூ. 440 மற்றும் ஏஎம்டி வேரியன்ட்களில் சுமார் ரூ. 600 வரை சேமிக்கலாம். நீண்ட கால வாக்கில் பார்க்கும் போது இது குறிப்பிடத்தக்க சேமிப்பை கொடுக்கும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாறியுள்ளது

யூகே-ஸ்பெக் 2024 ஸ்விஃப்ட்டின் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

ஸ்விஃப்ட்டின் புதிய இன்ஜின் கூடுதல் மைலேஜை கொடுப்பது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாறியுள்ளது. இந்த புதிய 1.2 லிட்டர் Z சீரிஸ் இன்ஜின் பழைய யூனிட்டை விட 12 சதவீதம் குறைவாகவே கார்பன் மோனாக்சைடை வெளியிடும் என மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது. ​​இது உங்கள் டிரைவ்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் கூட குறைவான கார்பன் வெளியீடு இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

நகரத்துக்கு ஏற்ற சிறந்த இன்ஜின்

யூகே-ஸ்பெக் 2024 ஸ்விஃப்ட்டின் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

மூன்றாவதாக இந்த புதிய இன்ஜின் சிறந்த லோ-எண்ட் டார்க்கை வழங்குகிறது. துல்லியமாக 3.5 சதவீதம் கூடுதலானது. ஆனால் புதிய இன்ஜின் 90 PS -க்கு பதிலாக வெறும் 82 PS அவுட்புட்டை மட்டுமே கொடுக்கின்றது இது பழைய ஸ்விஃப்ட்டை விட இது பவர் குறைவானது, ஆனால் மாருதி சுஸூகி இந்த காரின் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் நகரத்தில் காரை பயன்படுத்துகிறார்கள் என்பதில் கவனத்தில் வைத்து இந்த மாற்றத்தை செய்துள்ளது.

மேலும் படிக்க: புதிய Maruti Swift 2024 ரேசிங் ரோட்ஸ்டார் ஆக்சஸரி பேக் பற்றிய விவரங்களை 7 படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்

மேம்படுத்தப்பட்ட லோ-எண்ட் டார்க் என்பது நகரத்திற்குள் மெதுவான வேகத்தில் ஓட்டும் போது ​​கார் போக்குவரத்தை கடந்து செல்ல அதிகமான டார்க் தேவைப்படும். மேலும் அந்த வேகத்தில் விரைவாக முந்திச் செல்ல இது உதவும். இதன் காரணமாக நகருக்குள் செல்லும் மெதுவான டிரைவிங் ஆனது மந்தமானதாகவும், பவர் குறைவானதாகவும் உணர வைக்காது. இருப்பினும் இதைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள கார் சோதனை செய்யப்பட வேண்டும். மேலும் காரை ஓட்டி பார்த்தவுடன்தான் இந்த மாற்றம் குறித்து விரிவான கருத்தைத் தெரிவிக்க முடியும்.

2024 மாருதி ஸ்விஃப்ட் பல சிறிய ஆனால் தாக்கமான மாற்றங்களுடன் சந்தையில் நுழைந்துள்ளது, மேலும் அவற்றைப் பற்றி நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம். மேலும் நீங்கள் ஹேட்ச்பேக்கை வாங்க ஆர்வமாக இருந்தாலும், எந்த வேரியன்ட்டை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து உறுதியாக தெரியவில்லையா ?. அப்படியென்றால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள அதன் ஒவ்வொரு வேரியன்ட்களும் என்ன வழங்குகின்றன என்பதை விவரிக்கும் கட்டுரையும் உள்ளது. அதன் மூலமாக உங்களுக்கு எது சிறந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT

a
வெளியிட்டவர்

ansh

  • 175 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மாருதி ஸ்விப்ட்

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை