இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் Tata Altroz ரேசர் காரை நீங்கள் ஆஃப்லைனில் முன்பதிவு செய்யலாம்!
published on மே 31, 2024 05:47 pm by shreyash for டாடா ஆல்டரோஸ்
- 54 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா அல்ட்ராஸ் ரேசர் ஆனது வழக்கமான அல்ட்ராஸின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனாக இருக்கும். இது அப்டேட் செய்யப்பட்ட கிரில் மற்றும் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் போன்ற காஸ்மெடிக் அப்டேட்களை பெறும்
-
வாடிக்கையாளர்கள் இப்போது அல்ட்ராஸ் ரேசரை ரூ.21000-யை டோக்கன் அட்வான்ஸ் தொகையாக கொடுத்து காரை முன்பதிவு செய்யலாம்.
-
அல்ட்ராஸ் ரேசர் மிகவும் சக்திவாய்ந்த 120 PS 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும் மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை வழங்கும்.
-
புதிய வசதிகளில் பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் 360-டிகிரி கேமரா ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும்.
-
ஜூன் 2024-இல் அறிமுகபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது .இதன் விலை 10 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா அல்ட்ராஸ் ரேசர் ஆனது ஜூன் 2024-இல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது. இது ஹூண்டாய் i20 N லைனுடன் போட்டியிட தயாராக உள்ளது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட டாடா டீலர்ஷிப்களில் டோக்கன் அட்வான்ஸ் தொகையாக ரூ.21000 வரை செலுத்தி அல்ட்ராஸ் ரேசரை இப்போது முன்பதிவு செய்யலாம். இருப்பினும் இந்தத் தொகை டீலர்ஷிப்பை பொறுத்து மாறுபடும். அடுத்த மாதம் இந்த அல்ட்ராஸின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனின் விலை விவரங்களை டாடா அறிவிக்கவிருக்கிறது. இது அறிமுகப்படுத்தப்படும் போது நீங்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே பாருங்கள்.
ஸ்போர்ட்டியர் தோற்றம்
அல்ட்ராஸ் ரேசர் நிலையான மாடலின் ஒட்டுமொத்த டிசைனையும் தக்க வைத்துக் கொள்ளும். ஆனால் அதன் ஸ்போர்ட்டி தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் சில ஸ்டைலிங் அப்டேட்கள் இருக்கும். இந்த மாற்றங்களில் திருத்தப்பட்ட கிரில் மற்றும் டூயல்-டிப் எக்ஸாஸ்ட் ஆகியவை அடங்கும். கூடுதலாக சமீபத்திய டீசரில் காணப்படுவது போல் ஹூடில் இருந்து ரூஃபின் இறுதி வரை ஓடும் டூயல் வொயிட் லைன்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ராஸ் ரேசர் முன் ஃபெண்டர்களில் ‘ரேசர்’ பேட்ஜையும் கொண்டிருக்கும்.
அல்ட்ராஸ் ரேசரின் கேபினில் 'ரேசர்' கிராபிக்ஸ் கொண்ட பிளாக் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி அறிமுகத்தைத் தவிர பெரிய அளவில் அப்டேட்டுகள் எதுவும் இருக்காது. கூடுதலாக இது அதன் வழக்கமான வெர்ஷனில் இருந்து வேறுபட்ட தீம் ஆம்பியன்ட் லைட்களை கொண்டிருக்கும்.
கூடுதல் வசதிகள்
அல்ட்ராஸ் ரேசர் அதன் வழக்கமான பிற மாடலுடன் ஒப்பிடும்போது பல கூடுதல் வசதிகளுடன் வரும். இந்த மேம்பாடுகள் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான புதிய 7-இன்ச் ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். அல்ட்ராஸ் ரேசரின் 'ரேசர்' வெர்ஷனில் வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவையும் சேர்க்கப்படும். மேலும் இது 360 டிகிரி கேமரா செட் அப் மற்றும் கூடுதல் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் இதில் கொடுக்கப்படும்.
அதிக சக்தி வாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள்
அல்ட்ராஸின் 'ரேசர்' வேரியன்ட் நிலையான வெர்ஷனுடன் ஒப்பிடும்போது மேம்படுத்தப்பட்ட பவர்டிரெய்னை கொண்டிருக்கும். இது டாடா நெக்ஸானிலிருந்து பெறப்பட்ட அதிக சக்திவாய்ந்த 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறும். அதன் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
இன்ஜின் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
120 PS |
டார்க் |
170 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT / 7-ஸ்பீட் DCT (எதிர்பார்க்கப்படுகிறது) |
இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும் மேலும் ஒரு ஆப்ஷனாக 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்கும் வாய்ப்பும் உள்ளது.
தற்போது டாடா 110 PS மற்றும் 140 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய 'i-டர்போ' என்ற பெயரிடப்பட்ட டர்போ-பெட்ரோல் வேரியன்ட்டுடன் அல்ட்ராஸை வழங்குகிறது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா அல்ட்ராஸ் ரேசரின் எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலை சுமார் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். ஹூண்டாய் i20 N லைனுக்கு நேரடி போட்டியாளராக இருப்பதற்கு அல்ட்ராஸ் ரேசர் சந்தையில் ஒரு கட்டாய மாற்றாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: Tata Altroz ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful