இந்த மே மாதம் ரெனால்ட் கார்களுக்கு ரூ.52,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்
published on மே 13, 2024 05:43 pm by shreyash for ரெனால்ட் க்விட்
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் க்விட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களில் அதிகமாக கேஷ் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
-
க்விட் மற்றும் கைகர் ஆகிய கார்களுக்கு ரூ.52,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்.
-
ரெனால்ட் ட்ரைபரில் ரூ.47,000 வரை ஆஃபர் கிடைக்கிறது.
-
அனைத்து சலுகைகளும் மே 2024 இறுதி வரை செல்லுபடியாகும்.
ரெனால்ட் கார்களுக்கு கிடைக்கும் ஆஃபர்களின் விவரங்களை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது: ரெனால்ட் க்விட், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களில் ஆஃபர்கள் கிடைக்கும். நன்மைகளில் பணத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும். மாடல் வாரியான சலுகை விவரங்களைப் பார்ப்போம்.
ரெனால்ட் க்விட்
சலுகைகள் |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.15,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 வரை |
லாயல்டி போனஸ் |
ரூ.10,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.12,000 வரை |
அதிகபட்ச நன்மைகள் |
52,000 வரை |
-
பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட் தவிர மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் ரெனால்ட் க்விட் காரின் அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கும்.
-
பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட் ரூ. 10,000 லாயல்டி போனஸுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.
-
ரெனால்ட் க்விட் காரின் விலை ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.45 லட்சம் வரை உள்ளது.
மேலும் பார்க்க: மே 13 முதல் ஒரு வார கால நாடு தழுவிய கோடைகால சர்வீஸ் கேம்பை ரெனால்ட் அறிவித்துள்ளது
ரெனால்ட் ட்ரைபர்
சலுகைகள் |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.10,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 வரை |
லாயல்டி போனஸ் |
ரூ.10,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.12,000 வரை |
அதிகபட்ச நன்மைகள் |
ரூ.47,000 வரை |
-
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆஃபர்கள் அனைத்தும் ரெனால்ட் ட்ரைபர் காரின் குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.
-
பேஸ்-ஸ்பெக் RXE -க்கு ரூ. 10,000 லாயல்டி போனஸ் மட்டுமே பொருந்தும்.
-
ரெனால்ட் ட்ரைபரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரை இருக்கும்.
ரெனால்ட் கைகர்
சலுகைகள் |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.15,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 வரை |
லாயல்டி போனஸ் |
ரூ.10,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.12,000 வரை |
அதிகபட்ச நன்மைகள் |
ரூ.52,000 வரை |
-
க்விட் காரை போலவே ரெனால்ட் கைகர் ஆனது ட்ரைபரை விட அதிக பணத் தள்ளுபடியுடன் கிடைக்கும்.
-
இருப்பினும் இந்த பலன்கள் கைகர் -ன் பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட்டிற்கு பொருந்தாது.
-
ரெனால்ட் கைகர் காரின் விலை ரூ. 6 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் வரை இருக்கின்றது.
மேலும் பார்க்க: ரெனால்ட் எக்ஸ்பெடிஷன் 2024: கர்நாடகாவிலிருந்து கோவா வரையிலான கடற்கரை சாலைப் பயணத்தின் அற்புதமான காட்சிகளை கண்டடைதல்
குறிப்புகள்
-
ரெனால்ட் அனைத்து கார்களுக்கும் ரூ. 5,000 அர்பன் டிஸ்கவுன்ட்டை வழங்குகிறது. ஆனால் அதை கார்ப்பரேட் தள்ளுபடியுடன் சேர்த்து பெற முடியாது.
-
ரெனால்ட் அதன் மாடல்களில் ரெஃபரல் போனஸையும் வழங்குகிறது.
-
மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம். ஆகவே கூடுதலான விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள ரெனால்ட் டீலரை தொடர்பு கொள்ளவும்.
-
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி -க்கானவை ஆகும்
மேலும் படிக்க: ரெனால்ட் க்விட் AMT