• English
  • Login / Register

இந்த டிசம்பரில் ரூ. 2 லட்சத்துக்கும் கூடுதலான இயர்-எண்ட் ஆஃபர்களுடன் நெக்ஸா கார்களை வாங்க முடியும்

modified on டிசம்பர் 08, 2023 11:31 am by shreyash for மாருதி இக்னிஸ்

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மாருதி ஃபிரான்க்ஸ், ஜிம்னி மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகியவையும் இந்த மாதத்தில் பலன்களுடன் கிடைக்கும்

Maruti Fronx, Maruti Jimny, Maruti Baleno

  • மாருதி ஜிம்னியில் அதிகபட்சமாக ரூ.2.21 லட்சம் வரை ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன.

  • மாருதி இக்னிஸில் வாடிக்கையாளர்கள் ரூ.65,000 வரை சேமிக்க முடியும்.

  • மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக், பலேனோ, ரூ.47,000 வரை பலன்களுடன் கிடைக்கும்.

  • மாருதி சியாஸ் ரூ.58,000 வரை தள்ளுபடியுடன் வருகிறது.

  • மாருதி கிராண்ட் விட்டாராவில் ரூ. 35,000 வரை சேமிக்கலாம், அதே சமயம் ஃபிரான்க்ஸ் ரூ. 30,000 வரை பலன்களுடன் வருகிறது.

2023 -ம் ஆண்டு நிறைவடையும் நிலையில், மாருதி அதன் நெக்ஸா ரேஞ்சில் ஆண்டு இறுதி (இயர்-எண்ட்) தள்ளுபடியை அறிமுகப்படுத்தியுள்ளது, இப்போது மாருதி ஃபிரான்க்ஸ், மாருதி ஜிம்னி மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா - க்கு முதல் முறையாக இந்த தள்ளுபடி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆஃபர்களில் பணப் பலன்கள், எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்கிராப்பேஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும். இருப்பினும், மாருதி இன்விக்டோ மற்றும் மாருதி XL6 MPV -களில் எந்த ஆஃபர்களும் வழங்கப்படவில்லை.

கவனத்தில் வைக்கவும்: வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ஸ்கிராப்பேஜ் தள்ளுபடியை தேர்வு செய்யலாம். ஆனால் இரண்டு தள்ளுபடிகளையும் ஒன்றாக பெற முடியாது.

இக்னிஸ் காருக்கான சலுகைகள்

Maruti Ignis

சலுகைகள்

தொகை

 
 

வழக்கமான வேரியன்ட்கள்

இக்னிஸ் சிறப்பு எடிஷன்

பணத் தள்ளுபடி

40,000 வரை

20,500 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

15,000 வரை

15,000 வரை

ஸ்கிராப்பேஜ் தள்ளுபடி (ஆப்ஷனல்)

20,000 வரை

20,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

5,000 வரை

5,000 வரை

அதிகபட்ச நன்மைகள்

65,000 வரை

45,500 வரை

  • இக்னிஸின் வழக்கமான வேரியன்ட்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் அதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களில் செல்லுபடியாகும். ஆட்டோமெட்டிக் மாடல்களுக்கு, ரொக்க தள்ளுபடி ரூ.35,000 ஆக குறைகிறது.

  • இக்னிஸின் ஸ்பெஷல் எடிஷனை பொறுத்தவரையில், வாடிக்கையாளர்கள் டெல்டாவிற்கு ரூ.19,500 மற்றும் ஹேட்ச்பேக்கின் சிக்மா வேரியன்ட்டிற்கு ரூ.29,990 வரை கூடுதலாக கொடுக்க வேண்டும்.

  • இக்னிஸின் சிறப்புப் எடிஷன் ரூ.20,500 குறைக்கப்பட்ட பணத் தள்ளுபடியுடன் வருகிறது. மேலும் சிக்மா ஸ்பெஷல் எடிஷனில் ரூ.10,000 ஆக குறைகிறது.

  • மாருதி இக்னிஸ் காரின் விலை ரூ.5.84 லட்சம் முதல் ரூ.8.16 லட்சம் வரை உள்ளது.

இதையும் பார்க்கவும்: 2024 ஆண்டில் இந்தியாவிற்கு புதிதாக வரவிருக்கும் கார்கள்: அடுத்த ஆண்டு சாலைகளில் நீங்கள் இந்த கார்களை பார்க்க வாய்ப்புள்ளது

பலேனோ -வுக்கான சலுகைகள்

Maruti Baleno

சலுகைகள்

தொகை

பணத் தள்ளுபடி

30,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

10,000 வரை

ஸ்கிராப்பேஜ் தள்ளுபடி (ஆப்ஷனல்)

15,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

2,000 வரை

அதிகபட்ச பலன்கள்

47,000 வரை

  • அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் மாருதி பலேனோ -வின் பெட்ரோல் வேரியன்ட்களுக்கும் பொருந்தும்

  • பிரீமியம் ஹேட்ச்பேக்கின் CNG வேரியன்ட்களுக்கு, ரொக்க தள்ளுபடி ரூ.25,000 ஆக குறைக்கப்படுகிறது.

  • பலேனோவின் விலை ரூ.6.61 லட்சத்தில் இருந்து ரூ.9.88 லட்சம்.

இதையும் பார்க்கவும்: EV -களுக்கான FAME மானியம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்: FICCI கோரிக்கை

சியாஸ் காருக்கான சலுகைகள்

Maruti Ciaz

சலுகைகள்

தொகை

பணத் தள்ளுபடி

25,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

25,000 வரை

ஸ்கிராப்பேஜ் தள்ளுபடி (ஆப்ஷனல்)

30,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

3,000 வரை

அதிகபட்ச நன்மைகள்

58,000 வரை

  • இந்த தள்ளுபடிகள் மாருதி சியாஸ் காரின் அனைத்து வேரியன்ட்களிலும் செல்லுபடியாகும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் எக்ஸ்சேஞ்ச் ஆப்ஷன்கள் உட்பட.

  • மாருதி சியாஸை ரூ.9.30 லட்சம் முதல் ரூ.12.29 லட்சம் வரை விற்பனை செய்கிறது.

ஃபிரான்க்ஸ் காருக்கான சலுகைகள்

Maruti Fronx

சலுகைகள்

தொகை

பணத் தள்ளுபடி

15,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

10,000 வரை

ஸ்கிராப்பேஜ் தள்ளுபடி (ஆப்ஷனல்)

15,000 வரை

அதிகபட்ச பலன்கள்

30,000 வரை

  • மாருதி ஃப்ரான்க்ஸ் கார்ப்பரேட் தள்ளுபடியுடன் கிடைக்காது, இருப்பினும் இது பணத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ஸ்கிராப்பேஜ் பலன்களை பெறுகிறது.

  • மேலே குறிப்பிட்டுள்ள சலுகைகள் ஃபிரான்க்ஸ் -ன் பெட்ரோல் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும். அதன் CNG மாடல்களில் எந்தப் பலனும் கிடையாது.

  • இதன் விலை ரூ.7.46 லட்சம் முதல் ரூ.13.13 லட்சம் வரை.

இதையும் பார்க்கவும்: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் நன்மைகள் மற்றும் தீமைகள்

ஜிம்னி காருக்கான சலுகைகள்

Maruti Jimny Thunder Edition

சலுகைகள்

தொகை

 
 

வழக்கமான வேரியன்ட்கள்

தண்டர் எடிஷன்

பணத் தள்ளுபடி

2.16 லட்சம் வரை

ரூ.2 லட்சம்

கார்ப்பரேட் தள்ளுபடி

5,000 வரை

5,000 வரை

அதிகபட்ச பலன்கள்

2.21 லட்சம் வரை

2.05 லட்சம் வரை

  • எக்ஸ்சேஞ்ச் போனஸை அது தவறவிட்டாலும், மாருதி ஜிம்னி இந்த மாதத்தில் கூடுதல் தள்ளுபடியுடன் கிடைக்கும் மாடல்.

  • ஜிம்னியின் வழக்கமான வேரியன்ட்களுக்கு குறிப்பிடப்பட்ட சலுகைகள் அதன் ஜெட்டா வேரியன்ட்டிற்கு மட்டுமே பொருந்தும். டாப்-ஸ்பெக் ஆல்ஃபா வேரியன்ட்டிற்கான ரொக்க தள்ளுபடி ரூ.1.16 லட்சமாக குறைகிறது.

  • இதேபோல், எஸ்யூவி -யின் தண்டர் பதிப்பிற்கு மேலே குறிப்பிட்டுள்ள பணத் தள்ளுபடி அதன் ஜெட்டா வேரியன்ட்டுடன் மட்டுமே பெற முடியும். டாப்-ஸ்பெக் ஆல்பா வேரியன்ட்டிற்கு ரூ. 1 லட்சமாக குறைக்கப்பட்டது.

  • ஜிம்னி தற்போது ரூ.10.74 லட்சம் முதல் ரூ.14.05 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கிராண்ட் விட்டாரா -வுக்கான சலுகைகள்

Maruti Grand Vitara

சலுகைகள்

தொகை

பணத் தள்ளுபடி

15,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

15,000 வரை

ஸ்கிராப்பேஜ் தள்ளுபடி (ஆப்ஷனல்)

20,000 வரை

அதிகபட்ச பலன்கள்

35,000 வரை

  • அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நன்மைகள் மிட்-ஸ்பெக் ஜீட்டா, டாப்-ஸ்பெக் ஆல்பா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாராவின் வலுவான ஹைப்ரிட் வேரியன்ட்களில் செல்லுபடியாகும்.

  • மிட்-ஸ்பெக் சிக்மா மற்றும் டெல்டா வேரியன்ட்களுக்கு, ரொக்கத் தள்ளுபடி ரூ.10,000 ஆகக் குறைகிறது.

  • மாருதி கிராண்ட் விட்டாரா விலை 10.70 லட்சம் முதல் 19.99 லட்சம் வரை இருக்கும்.

குறிப்பு

  • ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கார்ப்பரேட் சலுகைகள் மாறுபடலாம்.

  • மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் நகரம் மற்றும் மாநிலத்தைப் பொறுத்து மாறுபடலாம், மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளவும்.

  • அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை ஆகும்

மேலும் படிக்க: இக்னிஸ் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti இக்னிஸ்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2025
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience