சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

சிட்ரோன் இந்தியாவிற்கான தனது நான்காவது மாடலை ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று வெளியிட உள்ளது

சிட்ரோய்ன் aircross க்காக மார்ச் 30, 2023 05:55 pm அன்று tarun ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

இதற்கு முன்பு கிடைத்த ஸ்பை ஷாட்களின்படி, இது மூன்று இருக்கை வரிசை கொண்ட சிறிய SUV -யாக இருக்கலாம்.

  • வரவிருக்கும் சிட்ரோயன் SUVயை 'C3 ஏர்கிராஸ்' என்று அழைக்கப்படலாம்.

  • அதன் ஸ்டைலிங் C3 ஹேட்ச்பேக்கிலிருந்து பெறப்பட்ட சில முரட்டுத்தனமான வெளித்தோற்ற காட்சியமைப்புகளுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 10 அங்குல டச் ஸ்கிரீன் சிஸ்டம், தானியங்கி ஏசி, பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ஆறு ஏர்பேகுகள் வரை இடம்பெறலாம்.

  • இது C3’s இன் 110PS 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை மேனுவல் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷனை பெறலாம்.

  • விலை ரூ. 9 லட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோன் ஏப்ரல் 27ஆம் தேதி இந்தியாவில் SUV -யை உலகளவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் சாலை பரிசோதனையின் போது பலமுறை மறைவாகப் படம்பிடிக்கப்பட்ட காராக இது இருக்கலாம். இது மூன்று வரிசை இருக்கை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் இதனை "C3 ஏர்கிராஸ்" என்ற பெயரில் அழைக்கப்படலாம்.

ஸ்பை ஷாட்டுகளின் மூலம், புதிய சிட்ரோயன் SUV யின் ஸ்டைலிங் C3 ஹேட்ச்பேக்கால் ஈர்க்கப்பட்டதாக இருக்கும். பம்பர்கள், கிரில் மற்றும் அலாய் வீல் ஆகியவற்றில் சில சிறிய திருத்தங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் முரட்டுத்தனமாக தோற்றமளிக்கும் கூறுகளுடன் இருக்கலாம். ஸ்பை ஷாட்டுகளின் அடிப்படையில், ஒரு புதிய பூட் ஸ்பேசின் நீட்டிக்கப்பட்ட அமைப்பால் பின்புற தோற்றம் வித்தியாசமாக தோன்றலாம்.
மேலும் படிக்க: சிட்ரோயன் eC3 மற்றும் அதன் போட்டிக்கார்கள்: விலைகள் பற்றிய விவரங்கள்

சிட்ரோன் SUV -யின் கேபின், வித்தியாசமான நிறங்கள் மற்றும் வினோதமான விசுவல் டச்களுடன், C3 போன்ற பாணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்களைப் பொறுத்தவரை, இது 10-அங்குல டச் ஸ்கிரீன் சிஸ்டம், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் C3 இல் இல்லாத ஆட்டோமேட்டிக் ஏசி, பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களைப் பெறலாம்.


SUV -யானது C3 இன் 110PS 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைக் கடனாகப் பெறலாம், அதே நேரத்தில் அதன் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மோட்டாரை இழக்க நேரிடலாம். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இரண்டும் வழங்கப்படலாம். ஏற்கெனவே எலக்ட்ரிக் C3 கார் இருப்பதால், இந்த புதிய SUV -யும் மின்சார பதிப்பை பெறலாம். இதன் மூன்று இருக்கை வரிசை கொண்ட வெர்ஷன் கிடைப்பதை நீங்கள் விரும்புவீர்களா? கீழே உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

புதிய சிட்ரோன் SUV -யின் விலை சுமார் ரூ.9 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் பிற நிறுவனங்களின் காம்பாக்ட் SUV -களுக்கு மாற்றாகவும் C3 -க்கு மேல் உள்ள மாடலாக இது நிலைநிறுத்தப்படலாம்

Share via

Write your Comment on Citroen aircross

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்பேஸ்லிப்ட்
Rs.65.90 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.10 - 11.23 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.18.99 - 32.41 லட்சம்*
புதிய வேரியன்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை