• English
    • Login / Register

    சோதனையின் போது படம்பிடிக்கப்பட்டுள்ள Citroen Basalt கார், கிட்டத்தட்ட கான்செப்ட் போலவே உள்ளது

    சிட்ரோய்ன் பசால்ட் க்காக ஏப்ரல் 15, 2024 05:33 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 86 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    சிட்ரோன் C3 மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்ற சிட்ரோன் மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே CMP பிளாட்ஃபார்மில் சிட்ரோன் பாசால்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

    Citroen Basalt Vision Test Mule Rear

    • சிட்ரோன் பாசால்ட்டின் சமீபத்திய ஸ்பை ஷாட்கள் அதன் கான்செப்ட் பதிப்பை போலவே கார் வடிவமைக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றன.

    • உட்புறம் இன்னும் படம் பிடிக்கப்படவில்லை என்றாலும் இது சிட்ரோன் C3 ஏர்கிராஸை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • C3 ஏர்கிராஸில் உள்ளதை போலவே அதே 10.2-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவருக்கான 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேவை பசால்ட் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இது C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் காம்பாக்ட் எஸ்யூவி -யில் உள்ளதை போலவே அதே 110 PS 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் பயன்படுத்தும்.

    மார்ச் 2024 -ல் சிட்ரோன் பாசால்ட் விஷன் கான்செப்ட் ஆக அறிமுகமானது. மேலும் இது இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பஸால்ட் விஷன் என்பது பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரான சிட்ரோன் நிறுவனத்தின் கூபே ஸ்டைல் எஸ்யூவி ஆகும். இது C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் காம்பாக்ட் எஸ்யூவி போன்ற தற்போதைய சிட்ரோன் மாடல்களுடன் அதன் வடிவமைப்பு மற்றும் தளத்தை பகிர்ந்து கொள்கிறது. இந்தியச் சாலைகளில் சிட்ரோன் பாசால்ட் விஷன் சோதனை காரை எங்களால் சமீபத்தில் பார்க்க முடிந்தது. அதன் மூலமாக தெரிய வரும் விவரங்கள் இங்கே.

    கான்செப்ட் போலவே உள்ளது

    Citroen Basalt Vision Front
    Citroen Basalt Vision Rear

    பசால்ட் கூபே எஸ்யூவியின் சோதனை கார் அதன் விஷன் கான்செப்ட் பதிப்பின் வடிவமைப்பை போலவே இருப்பதை ஸ்பை ஷாட்கள் தெளிவாக காட்டுகின்றன. முன்பக்கத்தில் இது ஏற்கனவே உள்ள சிட்ரோன் மாடல்களில் காணப்படும் நன்கு அறியப்பட்ட ஸ்பிளிட் கிரில் மற்றும் ஹெட்லைட் ஹவிஸிங்கை கொண்டுள்ளது. பின்புறத்தில் சோதனைக் கார் அதன் கான்செப்ட் பதிப்பைப் போன்றே டெயில்லாம்ப் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் அதன் மிகவும் தனித்துவமான வடிவமைப்பு, பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது கூபே போன்ற சாய்வான கூரை ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொடுக்கின்றது.

    மேலும் பார்க்க: புதிய ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் டீசர் புதிய வடிவமைப்பு விவரங்களை வெளிப்படுத்துகிறது

    கேபின் மற்றும் வசதிகள்

    Citroen C3 Aircross cabin

    பசால்ட் விஷன் கூபே எஸ்யூவியின் உட்புறத்தை பற்றிய விவரங்களை சிட்ரோன் இன்னும் வெளியிடவில்லை, இந்த ஸ்பை ஷாட்களில் அதன் கேபின் விவரங்கள் இல்லை. இருப்பினும், அதன் டேஷ்போர்டு அமைப்பு மற்றும் கேபின் ஆகியவை சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரை போலவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பசால்ட் விஷன் அதிக பிரீமியம் மற்றும் ஸ்டைலான காராக அதிக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்ரோன் பாசால்ட் 10.2 இன்ச் டச் ஸ்கிரீன், டிரைவருக்கான 7 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் ஏசி, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் புஷ்-பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பை பொறுத்தவரையில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும்.

    பவர்டிரெய்ன்

    Citroen C3 Aircross 1.2-litre turbo-petrol engine

    சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மற்றும் சிட்ரோன் C3 ஆகியவற்றுடன் வழங்கப்படும் அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (110 Ps / 205 Nm வரை) சிட்ரோன் பாசால்ட் விஷன் பயன்படுத்தும். இந்த யூனிட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் வழங்கப்படும்.

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்

    சிட்ரோன் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பசால்ட் கூபே எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம், மேலும் இதன் ஆரம்ப விலை ரூ 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம். பாசால்ட் விஷன் டாடா கர்வ்வ் -க்கு நேரடி போட்டியாக இருக்கும். அதே சமயம் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா,ஃபோக்ஸ்வேகன் டைகுன், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கும் போட்டியாக இருக்கும்.

    was this article helpful ?

    Write your Comment on Citroen பசால்ட்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience